-மகாகவி பாரதி

ஆசுகவி (வெண்பா)
மகாகவி பாரதி தான் எழுதிய ‘நவதந்திரக் கதைகள்’ என்ற நகைச்சுவைக் கதைத் தொடரில், தட்டிக் கொட்டான் செட்டி கதையில், ஒரு கவிராயர் இயற்றுவதாக இந்தப் பாடலை எழுதி இருக்கிறார். தட்டிக் கொட்டான் செட்டியும் ஆரூட ஸ்வாமிகளாக சந்நியாசி வேடம் புனைந்திருக்கும் மானி அய்யனும் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வருகிறார் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர். அவர் சந்நியாசி வேடம் தரித்திருக்கும் மானி அய்யன் மீது இயற்றிய ஆசுகவியாக இதனைப் புகுத்தி இருக்கிறார் மகாகவி…
உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்
மலையைப் பிளந்துவிட வல்லீர் — இலகுபுகழ்
ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கலீர்
ஆனந்த மையா ஹரீ.
- காண்க: நவதந்திரக் கதைகள்
$$$