பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.... திருநின்றவூர் ரவிகுமாரின் கட்டுரை...
Category: சிந்தனைக் களம்
மோடியிசம்: இப்போதைய காலகட்டம்
பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரேயொரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்பத் தகுந்த மாநிலத் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை. கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்டுரை...
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டத்தில் அந்தணர்களும் வேறு சில சமூகத்திணரும் பூணூல் மாற்றும் சடங்கு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதன் தாத்பரியத்தையும் நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறார் திரு. ஜடாயு. அவரது முகநூல் பதிவு இங்கே...
சென்னையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் தியாகியர் நினைவகங்கள்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், அடையாறு பகுதியில், சர்தார் வல்லபபாய் படேல் சாலையில் அமைந்துள்ள நினைவகங்களும் மணிமண்டபங்களும், தலைவர்களின் சிலைகளும் பார்க்க ஆளின்றி, பராமரிக்க அக்கறையின்றி பரிதாப நிலையில் இருக்கின்றன. (புகைப்படங்களுடன் நேரடி ரிப்போர்ட்)...
சோசலிசம் என்னும் கைவிலங்கு
1955 இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'சோசலிச சமுதாயமே' தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை ‘பர்மிட் - லைசன்ஸ் – கோட்டா’ மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.
ராஷ்ட்ர மந்திரம் வந்தே மாதரம்!
"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"
நம்பிக்கையூட்டும் பிரதமரின் சுதந்திர தின உரை!
தில்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய இந்த ஆண்டின் சுதந்திர தின உரை (2026, ஆகஸ்டு 15), இதுவரை ஆற்றிய சுதந்திர தின உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. முந்தைய ஆண்டுகளில் பேசிய உரைகளின் காலத்தை விடக் குறைவாக இருந்த போதும் (75 நிமிடங்கள்), இந்த ஆண்டின் உரை எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதாக இருந்தது....
மாறன் சகோதரர்களுக்கு உதவும் நீதிமன்றத் தாமதம்
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022)வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது இரண்டாம் கட்டுரை)…
தயாநிதி மாறனால் ஏற்பட்டது மாபெரும் நிதியிழப்பு மட்டுமல்ல!
திருவாளர் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தனது சகோதரர் திரு. கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்திற்கு உதவும் நோக்கில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக, மத்தியப் புலனாய்வுத் துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. நீதிமன்ற விசாரணையின் முக்கியமான கட்டத்தை வழக்கு எட்டியுள்ளது. இதுதொடர்பாக, திரு. எஸ்.குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகள் தினமணி நாளிதழிலும் (2015, 2022) வெளியாயின. அக்கட்டுரைகள், காலத்தின் தேவை கருதி இங்கு வெளியாகின்றன. (இது முதல் கட்டுரை)...
தியானமென் சதுக்கமும் ஜந்தர்மந்தரும்: இடதுசாரிகளின் இரட்டை வேடம்
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும், மற்றவர்களுக்கு வேறொன்றுமாக தார்மிக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தைப் பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவே அன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
லீக் முக்த் பாரதம் வேண்டும்
உலகிலேயே மதச்சார்பின்மைக் கோட்பாடு மிகவும் கேவலமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது இந்தியாவில் தான். அதனால்தான் தேசியப் பாடலான வந்தே மாதர கீதமும் கூட சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு, மத அடிப்படைவாதிகள் அற்ற பாரதம் உருவாவது தான் என்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…
வந்தே மாதர கீதம்: அவமதித்த சோனியாவுக்கு கண்டனம்
சுதந்திர தினத்தன்று தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வந்தே மாதரம் பாடியதை நிறுத்த அக்கட்சியின் தலைவி சோனியா முயன்றது சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. அது தொடர்பான 4 கண்டனங்கள் இங்கே…
சுதந்திரத்தைப் போற்றுவோம்!
எழுத்தாளர் திரு. வ.மு.முரளியின் சுதந்திர தினக் கவிதை...
குழந்தைகளின் மனநிலையை பாதுகாத்து வாருங்கள்
எழுத்தாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா, முகநூல் பதிவில் மிக முக்கியமான குடும்ப விஷயம் குறித்து எச்சரித்திருக்கிறார். அது இங்கே நன்றியுடன் மீள்பதிவாகிறது...
கோதண்டராமர் கோயிலும் நிறைவேறாத திருப்பணியும்
தர்மத்தின் வடிவமான ஸ்ரீ ராமபிரானின் கோயில் திருப்பணி வெகு சிறப்பாக நடைபெற்று, மூலஸ்தானத்தில் சீதா சமேத ராம லட்சுமணர் ஆஞ்சநேயரை தரிசிக்கும் நாள் எந்நாளோ? இக்கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்ய இருக்கும் செல்வாக்கு மிக்க அறங்காவலர் எங்கிருக்கிறாரோ?