மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்தபோது, தனது சுயசரிதையை எழுத முற்பட்டார். அப்போது அவர் எழுதியதே ‘கனவு’ என்னும் இக்கவிதை. இது அவரது சுயசரிதை தொகுப்பில் முதற்பகுதி. பாரதி –அறுபத்தாறு என்னும் இரண்டாம் பகுதியும் உண்டு. ‘கனவு’ கவிதை, முன்னுரை, முடிவுரை தவிர்த்து ஐந்து பகுதிகளைக் கொண்டது. தோல்வியில் முடிந்த பிள்ளைக் காதல், பயனில்லாத ஆங்கிலக் கல்வி, விருப்பத்துக்கு மாறான இளமைத் திருமணம், தந்தையின் வறுமை நிலை, பொருளின் பெருமை ஆகிய 5 பகுதிகள் கொண்டது இந்த நெடுங்கவிதை. இதில் 49 செய்யுள்கள் உள்ளன.
Author: vamumurali
அமைதியான நதியினிலே ஓடும்…
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது... நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது....
சிவகளிப் பேரலை – 48
சிவத்தியானம் என்பது வற்றாத நீர்நிலை. அங்கே சிவனருளால் மகிழ்ச்சியாகிற நீர் எப்போதுமே நிரம்பியிருக்கிறது. முனிவர்களும் தவசிரேஷ்டர்களுமான தாமரைகள் சிவத்தியான நீர்நிலையையே தமது இருப்பிடங்களாகக் கொண்டுள்ளன(ர்). தூய மனம் கொண்டவர்கள் இதனையே நாடுகின்றனர். தேடி அடையப்படுகின்ற புண்ணியத்தை சிவத் தியான நீர்நிலை தருகின்றது. அனைத்து விதமான பாவங்களின் கறைகளையும் சுவடு தெரியாமல் இந்த நீர்நிலை போக்கிவிடுகிறது....
பாரதியின் தனிப்பாடல் -1
காணும் பொருளேல்லாம் கவிஞனுக்குக் கவிப் பொருளே. எல்லாப் பொருளிலும் அவன் காண்பது இயற்கையும் அதில் ஒன்றிய தனது அறிவின் விளைவும். இக்கவிதையில் மகாகவி பாரதி கண்ட பறவையினங்கள் பேசிக்கொண்டால் என்ன பேசி இருக்கும் என்பதை கவியாக்கி இருக்கிறார்....
இலக்கிய தீபம் – 13
புகார் நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப்பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து, 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரேன்' எனச் செலவழுங்கிக் கூறுவதாக, சோழன் கரிகாற் பெருவளத்தானை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும், காவிரிப்பூம் பட்டினத்தின் வாழ்க்கைச் சிறப்பையும் கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன....
சிவகளிப் பேரலை – 47
ஓர் அரசன் ஓரிடத்தில் தங்குவதற்கு முன்பாக, அவனது பரிவாரங்களும், அரசனது பணிவிடைகளுக்கு வேண்டிய பொருட்களும் முன்கூட்டியே வந்து சேருமோ, அதுபோல இறைவனாகிய சிவபெருமான் பக்தனின் மனத்திற்குள் குடிபுகுவதற்கு முன்பாகவே, அவனது பாவங்கள் அழிந்து, நற்குணங்கள் அரும்பிவிடும் என்பதை மிக அழகாக வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....
தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்
தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்....
யந்திரம்
மானுட உணர்வுகளின் ஆதி ஆழத்தை அறிபவர் யாரும் இருக்க முடியாது. புனைவிலக்கியம் அந்த வெற்றிடத்தை நோக்கிய பாய்ச்சல். ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது போல சஹ்ருதயர்களால் மட்டுமே பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அவரே இச் சிறுக்கதையில் சொல்வது போல, கூடு விட்டு கூடு பாயும் திறன் வேண்டும். முத்தாயியின் கதை உங்களுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தினால், உங்களாலும் கூடு விட்டு கூடு பாய முடிகிறது என்று பொருள்.
சிவகளிப் பேரலை – 46
முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்....
பாரதியின் ஞானப்பாடல் – 25
கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.....
எனது முற்றத்தில் – 9
தமிழக முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதி 1957இல் வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குள் இரண்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததன; விற்பனையில் சாதனை என்று மட்டுமல்ல, தமிழ் மண்ணின் ஆன்மிக தாகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்....
சிவகளிப் பேரலை- 45
பறவை அதன் குடும்பத்தோடும் இனத்தோடும் கூடி வாழ்கின்ற இடம் கூடு. அந்தக் கூடுதான், பறவைக்குப் பாதுகாப்பையும், சௌகர்யத்தையும், சுகங்களையும் தருகிறது. அதேபோல் பக்தனின் மனதாகிய பறவைக்கு, இறைவனின் திருவடிகளே சிறந்த சரணாலயம். ..
பாரதியின் ஞானப்பாடல்- 24
மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 24வது கவிதை இது...வெள்ள மெனப் பொழியும் தண்ணருளில் ஆழ்ந்தபின் வேதனை உண்டோ?
சிவகளிப் பேரலை – 44
சிங்கத்துக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாக இந்த ஸ்லோகத்தை உரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைச் சிங்கம் எனது மனக்குகையிலே வீற்றிருக்க, எனக்கு எவ்விதத்தில் அச்சம் வரும்? என்று கேட்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
பாரதியின் ஞானப்பாடல் – 23
ஒருமையுணர்வின் (அத்வைதம்) உச்சநிலை இப்பாடல். பகைவனுக்கு அருள்பவர்க்கு எதிரிகளே இருக்க முடியாது. ஏனெனில் அவர் இறைவனை அறிந்தவர் ஆகிறார்...