-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் ஆத்ம குரு சகோதரி நிவேதிதை (1867 அக். 28 - 1911 அக். 13). சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையான நிவேதிதையையே தனது குருவாக வரித்துக் கொண்டவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய குரு வணக்கப் பாடல் இது....
$$$
17. நிவேதிதா தேவி
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
.கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய், எமதுயர்நா
.டாம்பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
.பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
.நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
$$$