சிவகளிப் பேரலை – 43

மகாபாரதத்திலே அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தருள, வேடனாகத்தான் அவன் முன்னர் சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு கிராதமூர்த்தி என்றும் பெயருண்டு. அப்பேர்பட்ட சிறந்த வேடனாகிய சிவபெருமான் வசிப்பதற்கு, உண்மையிலேயே சிறந்த வனம் எது தெரியுமா? பக்தனின் மனம்தான்....

பாரதியின் ஞானப்பாடல்- 22

மனதைக் கட்டுப்படுத்துதல் முனிவர்க்கும் அரிது. அந்த மனம் செய்யும் கொடுமைகளை இங்கு பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி.

சிவகளிப் பேரலை – 42

ஆழம் காணவியலாத பக்தி என்ற நீர் நிறைந்த அகழியும், அந்த பக்தியிலே அசைவிலாத உறுதி என்ற தன்மை வாய்க்கப் பெற்ற மதிலும், நற்குணங்களாகிய படைகளும், உடல் - மனம் ஆகியவற்றை கட்டுப்படுத்தியதால் ஏற்பட்ட உறுதி வாய்ந்த கோட்டைச் சுவர்களும், ஞானத்தையே நிறைவான பொருளாகவும் கொண்டது பக்தனின் மனதாகிய கோட்டை.  ...

பாரதியின் ஞானப்பாடல்- 21

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 20வது கவிதை இது... பேயாய் உழலும் சிறுமனதுக்கு அறிவுரை இது...

சிவகளிப் பேரலை – 41

  ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் நாம் ஆண்டவனுக்கு மிக அருகில் வருகிறோம்.   அவ்வாறு அடக்குதல் எளிதா? ஐம்புலன்களின் வேட்கையை அழிக்க முடியாது என்றபோதிலும், அதனை அடக்குவதற்கு இறைவன் கொடுத்த ஒழுக்க வழிமுறைகளிலே வழுவாது நிற்க வேண்டும் என்பதை திருக்குறள் உள்ளிட்ட அற நூல்கள் வலியுறுத்துகின்றன. அதுசரி, நினைத்தாலே கடினமாக இருக்கக்கூடிய இந்தச் செயலை நம்மால் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? முடியும்.  அதற்கு, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என அடியெடுத்துக் கொடுக்கிறது திருவாசகம்.

பாரதியின் ஞானப்பாடல்- 20

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற அற்புதமான வாசகத்தைக் கொண்ட இனிய கவிதை இது... கவலைகளால் குமையாமல், களிப்புடன் வாழ நமக்கு வழிகாட்டுகிறார் மகாகவி.

சிவகளிப் பேரலை – 40

மனத்தில் சிவபெருமான் அரசாட்சியால் ஞானப்பயிர் வளர்ந்து நற்பலன்கள் கொடுப்பதை முந்தைய ஸ்லோகத்தில் வர்ணித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தன் ஒருவன், தனது மனத்திலே பக்திப் பயிரை எவ்விதம் வளர்ப்பது என்பதை விவரிக்கிறார்....

பாரதியின் ஞானப்பாடல் – 19

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற வகையிலான ஞானப்பாடல் இது...

சிவகளிப் பேரலை – 39

சிவபெருமான் ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன.  இவ்வாறு அறம் பேணப்படுவதால்,  காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது.....

பாரதியின் ஞானப்பாடல்- 18

கடமை கடமை என்று ஓடிக் கொண்டிருக்க வேண்டாம், கட்டற்று, கடமை நினைவே இன்றி வாழ்வோம் - என்ற மகாகவி பாரதியின் வித்யாசமான சிந்தனை இக்கவிதையில் ஒலிக்கிறது....

சிவகளிப் பேரலை – 38

முற்பிறவிகளில் செய்த தவமாகிய மலையால் காட்சி தருகின்ற இறைவன் சிவபெருமான். அழிவில்லா அமுதமாக விளங்குபவர். புன்னகை தவழ்கின்ற வதனம் உடையவர். மங்களத்தைத் தருகின்றவர், சந்திரனைச் சூடியவர். நற்குணங்களுக்கு உறைவிடமாக இருப்பவர்.....

எனது முற்றத்தில் – 8

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர்  சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப்  பொறி தட்டியது.  நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்? 

பாரதியின் ஞானப்பாடல் – 17

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் எளியவர்களின் பக்தியும் மெச்சப்படுகிறது... இக்கவிதை அதற்குச் சான்று.

சிவகளிப் பேரலை – 37

பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். ...

பாரதியின் ஞானப்பாடல் – 16

எளிய வரிகள்... அரிய அனுபவ ஞானப் பதிவுகள்... மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 16வது கவிதை இது...