இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது. இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....
Author: vamumurali
சத்திய சோதனை 2(11-15)
னக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. ....
பாரதியின் ஞானப்பாடல் – 15
பக்தியினால் இந்த உலகில் எய்தும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சித்தம் தெளியும்; செய்கைகள் செம்மையாகும்; வித்தைகள் சேரும்; வீரர் உறவு வாய்க்கும்; நெஞ்சில் சஞ்சலம் நீங்கும்... தொடர்ந்து பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி... படியுங்கள்... பக்தியில் திளையுங்கள்!
இலக்கிய தீபம் – 12
தமிழர் சரிதத்தின் ஆராய்ச்சி வரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன் செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேல் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு'. மீண்டும் இதனைக் குறித்து ஆராய வேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.....
சிவகளிப் பேரலை – 35
திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான், “வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி, என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னி லதுவும் உந்தன் விருப்பன்றே” என்று மொழிகிறார்....
யுக சந்தி
எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் - சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன....
பாரதியின் ஞானப்பாடல்- 14
மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 14வது கவிதை இது...தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது தோற்ற முறுஞ் சுடராம்!
சிவகளிப் பேரலை – 34
பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை...
காற்றிடைச் சாளரம் – 9
கவிஞரின் எளிய கவிதை... அரிய பொருளுடன்...
பாரதியின் ஞானப்பாடல் – 13
“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்”- மாயையான இந்த உலகை இதைவிட எளிதாக ஒரு வரியில் விளக்கிவிட முடியாது. மகாகவி பாரதியின் அறிவுச் சமநிலை இயைபின் (ஞானயோகம்) அற்புதமான வெளிப்பாடு இக்கவிதை....
சிவகளிப் பேரலை – 33
சிவபெருமானை பூஜிப்பது மிகவும் சுலபம். ஒரு வில்வ தளமோ அல்லது எருக்கம்பூவையோ எடுத்து சிவார்ப்பணம் என்று பூஜித்தாலே மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியவர் சிவபெருமான். எல்லாம் வல்ல பெரியாண்டவன் எளிய வழிபாட்டுக்கே இறங்கிவரும்போது ஏன் வேறு பொய்த் தெய்வ வழிபாடுகளுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று வினவுகிறார் ஆதிசங்கரர்...
வீடுவரை உறவு…
பாதகாணிக்கை திரைப்படத்தில் கவியரசர் எழுதிய, சோகம் கலந்த அற்புதமான தத்துவப் பாடல்...
பாரதியின் ஞானப்பாடல் – 12
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
சிவகளிப் பேரலை – 32
சிவபெருமான் நஞ்சுண்ட தியாக வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனார், தனது தேவாரப் பாடல் ஒன்றில் இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்: “கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளர வுசுற்றிக் கடைந்தெழுந்த, ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த, சீலங் கண்டு நின்திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே”.
இலக்கிய தீபம் – 11
அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. ....