ஈசனும் தானும் ஒன்று என்ற அத்வைதப் பேரனுபவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை இது. சிவோஹம்- நானே சிவம் என்பதை உணர்ந்தவர் ஈசனை அறிகிறார். ஈசன் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கிறார்.
Author: vamumurali
சிவகளிப் பேரலை- 31
உலகம் காக்க விடம் உண்ட சிவபெருமானின் தியாகத்தால் அவரைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், மணிமிடற்று அண்ணல் (குன்றம்பூதனாரின் பரிபாடல் பாட்டு), காரிஉண்டிக் கடவுள் (பெருங்கௌசிகனாரின் கூத்தராற்றுப்படை) என்று போற்றுகின்றன.
எனது முற்றத்தில் – 7
....வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன் சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!...
பாரதியின் ஞானப்பாடல்- 10
இக்கவிதை நாத்திகக் கவிதை போல தோற்ற மயக்கம் தருவது; உண்மையில் வேதாந்தத்தின் தெள்ளிய விளக்கமாக அமைந்த அரும்பெரும் கவிதை இது. அறிவே தெய்வம் என்பது, பிரம்மவாதிகளின் கொள்கை. அது ஈசனை விலக்கவில்லை; ஞான வடிவானாவன் ஈசன் என்கிறது...
சிவகளிப் பேரலை- 30
சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்?....பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். ...
மனித யந்திரம்
அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...
பாரதியின் ஞானப்பாடல்- 9
இக்கவிதையும் மாயையைப் பழிக்கும் வீரக் கவிதை!
சிவகளிப் பேரலை – 29
சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்....
சத்திய சோதனை- 2(6-10)
சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
....உயிரின் ஒலி
ஸ்ரீமான் ஜகதீச சந்திரவஸு சொல்லுகிறார்:- “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்; அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால், ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்கிறார்....
இலக்கிய தீபம் – 10
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது 'இது கடவுள்வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 9
பாகிஸ்தான் எல்லையோரக் கிராமமொன்றில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சோதி, போரின் காரணமாக தில்லிக்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர். வரட்டி அடுப்பில் சுண்ட சுண்டக் காய்ச்சிய பாலைக் குடித்த நிலை மாறி, டில்லிக்கு வந்தபிறகு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் வாங்கிய நிலையை நினைவுகூரும் இவர், பின்னர் அதுவும் மாறி இரண்டு கி.மீ. நடந்து போய் வரிசையில் நின்று பால் வாங்கியதையும் அதுவும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் நினைவு கூர்கிறார். இவர் இன்று உலக பால் உற்பத்தி ஃபெடரேஷனின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பால் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் அனுபவத்தில் அறிந்தவர் இவர்.....
பாரதியின் ஞானப்பாடல்- 8
“நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பிரதிபலிக்கும் கவிதை இது..
சிவகளிப் பேரலை- 28
எங்கேயோ தேடி அலைந்து கொண்டிருக்காமல், உள்ளத்தை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, அவரது நினைப்பிலே தோய்ந்து இங்கேயே ஜீவன் முக்தியை, அமர நிலையை எய்திவிடலாம். மகாகவி பாரதியார், “மண்ணில் வானம் காணலாம்”, “எல்லோரும் அமரநிலை எய்தலாம்” என்றெல்லாம் கூறியதன் பொருள் இதுவே....
நடைபாதையில் ஞானோபதேசம்
எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஏற்றம் தந்தவர் அமரர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது தாக்கம் மிகவும் பெரியது. ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர் பின்னாளில் கனிந்த தேசியவாதியானார். ஆனால், பின்னாளில் தானே ஏற்றுக்கொண்ட விரதம் காரணமாக அவரது பிற்காலச் சிந்தனைகள் அதிக அளவில் எழுத்துவடிவம் பெறவில்லை. திரைத் துறையிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் தனது மனசாட்சிப்படி பேசியவர்; எழுத்துகளால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். ஞானபீடம் (2002), சாஹித்ய அகாதெமி (1972) விருதுகளைப் பெற்றவர்.அவரது சொந்த அனுபவம் இங்கு சிறுகதை வடிவில் பதிவாகிறது....