பாரதியின் ஞானப்பாடல்- 7

யமபயமே அச்சங்களில் முதன்மையானது. அதனையே எள்ளி நகையாடும் கவிதை இது. மரண அச்சம் அற்றவர்களுக்கே விடுதலை சித்தியாகிறது. எனவே தான் நாட்டின் விடுதலையை நாடிய பாரதி காலனை இக்கவிதையில் மிரட்டுகிறார்...

சிவகளிப் பேரலை – 27

கடவுளுக்கு நம்மிடம் உள்ளதைக் காணிக்கையாகத் தருவதைவிட, நமது உள்ளத்தையே காணிக்கை ஆக்குவதே மிகச் சிறந்தது. கடவுளுக்கு நாம் பொருளைப் படைத்தால், அந்தப் பொருள் அவன் படைத்ததுதானே? நாம் உழைத்துச் சேர்த்த பொருள், ஆதலால் நமது என்று கருதலாமே என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, சகல ஐஸ்வர்யங்களையும் வைத்திருக்கும் பரமேஸ்வரன் முன் இது மாத்திரம்?

யோகா: பாரதியார் பார்வையில்…

அடிமைப்பட்டிருந்த பாரத நாட்டில் மக்களுக்கு தன்னுடைய கவிதை / கட்டுரை / ஊடகப் பணி போன்ற எத்தனையோ வழிகளில் சுதந்திர வேட்கை ஊட்டியபடியே வாழ்ந்து மறைந்த (1882 - 1921) பாரதியாரைத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிகிறது. ரிஷி முனிவர்கள் மனிதகுலத்திற்குக் கண்டு சொன்ன யோக சாஸ்திரம் போன்ற எத்தனையோ விஷயங்களை எளிய நடையில் போகிறபோக்கில் பொதிந்து கொடுத்துவிட்டு போயிருக்கிற பாரதியாரை பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ...

பாரதியின் ஞானப்பாடல் – 6

“மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?” என்ற அற்புதமான மந்திரச் சொற்கள் அடங்கிய கவிதை இது...

சிவகளிப் பேரலை- 26

இறைவனின் திருவடிகளே இன்பத்தின் எல்லை. பக்தனுக்கு பகவான் பாத சேவையே பரமானந்தம். பேரருளாளனைச் சரண் புகுந்தபின் பேரின்ப மயந்தானே! எதிரிகளால் சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட சமயத்தில்கூட, “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டுறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று பாடினார் அப்பர் பெருமான். அதனால் எதிரிகளின் கொடுமைகளால் வெந்துபோகாமல் வெளிவந்தார் அவர். அப்பேர்பட்ட மகிமை வாய்ந்தவை சிவபெருமானின் திருப்பாதங்கள்....

பசு

பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால் மாத்திரம் போதுமா?...

தெலுங்க மஹா சபை

ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று......

சிவகளிப் பேரலை- 25

சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூறு நூலுக்குக் கடவுள்வாழ்த்து பாடிய பெருந்தேவனார், “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று சிவசக்தி ஐக்கியக் காட்சியைக் கூறுகிறார். நீல மேனியையும், ஒளிவீசும் நகைகளையும் கொண்ட அம்பிகையை ஒருபுறத்தில் கொண்டவர் சிவபெருமான் என்பது இதற்குப் பொருள்.

பாரதியின் ஞானப்பாடல்- 5

தமிழ்த் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்த கவிதை இது....

காற்றிடைச் சாளரம்- 8

அழுக்குத் தலையணைக்கு வெளுத்த உறை- என்றால் என்னவென்று புரிகிறதா? இந்தக் கவிதைகளைப் படியுங்கள்... கவித்துவத்தில் கிறங்குங்கள்!

ஹிந்து தர்மம்

இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையும், ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். ...

சிவகளிப் பேரலை – 24

சிவபெருமான் காமனை மட்டுமல்ல, காலனையும் வென்றவர். ஆகையால் அவர் காலாதீதன் (கால அதீதன்), அதாவது காலத்தைக் கடந்து நிற்பவர். அப்படிப்பட்ட சிவபெருமான் இயற்கை வனப்பு மிகுந்த கயிலாய மலை மீது நமக்காகக் காட்சி தருகிறார். பக்திப் பெருக்கால் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் போன்றோர் இத் தெய்வீகத் திருக்காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.....

பாரதியின் ஞானப்பாடல் – 4

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 4வது கவிதையும் விடுதலையையே வேண்டுகிறது. இது பூவுலகில் பேசப்படும் சாதாரண விடுதலையல்ல; ஆன்மிகம் சார்ந்த ஆன்ம விடுதலை…

நினைக்கத் தெரிந்த மனமே…

காதலனைப் பிரிந்த பெண்ணின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் எளிய பதங்கள்... அதில் புதைந்திருக்கும் உண்மையான அன்பின் சோகம், காட்சிக்கு உகந்த கற்பனை வரிகள் என, கவியரசரின் மேதமை வெளிப்படும் சிறந்த திரைப்பாடல் இது...

பாரதியின் ஞானப்பாடல் – 3

சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடயது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி.