நினைக்கத் தெரிந்த மனமே…

-கவியரசு கண்ணதாசன்

காதலனைப் பிரிந்த பெண்ணின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் எளிய பதங்கள்... அதில் புதைந்திருக்கும் உண்மையான அன்பின் சோகம், காட்சிக்கு உகந்த கற்பனை வரிகள்  என, கவியரசரின் மேதமை வெளிப்படும் சிறந்த திரைப்பாடல் இது... 

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலகத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

மயங்கத் தெரிந்த கண்ணே, உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே, உனக்கு மறையத் தெரியாதா?
அன்பே மறையத் தெரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த நிலவே, உனக்கு குளிரத் தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே, உனக்கு பிரிக்கத் தெரியாதா?
பிரிக்கத் தெரிந்த இறைவா, உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா, உனக்கு என்னைப் புரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

திரைப்படம்: ஆனந்தஜோதி (1963)

இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடகி: பி.சுசீலா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s