-கவிஞர் ஸ்ரீ.பக்தவ்தசலம்

பொன்னும்,கல்லும்
மண்ணில் கலந்துரையாடின.
கொஞ்சம் பொறு …
கடவுளைத்தழுவும் அணியாவேன்
என்றது பொன்.
அப்போது பார் …
கடவுளே நானாவேன்
என்றது கல்.
மௌனமாய் சற்றே
இளகியது மண்-
விதைபிளந்து எழுந்துவரும்
உயிர்ப்பச்சைக்கு வழி தந்து.
$$$
-கவிஞர் ஸ்ரீ.பக்தவ்தசலம்
பொன்னும்,கல்லும்
மண்ணில் கலந்துரையாடின.
கொஞ்சம் பொறு …
கடவுளைத்தழுவும் அணியாவேன்
என்றது பொன்.
அப்போது பார் …
கடவுளே நானாவேன்
என்றது கல்.
மௌனமாய் சற்றே
இளகியது மண்-
விதைபிளந்து எழுந்துவரும்
உயிர்ப்பச்சைக்கு வழி தந்து.
$$$