மகாகவி பாரதியின் புனித நினைவில்…

பாரதி அமரர் ஆகி 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.  ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு....

துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்

மகாகவி பாரதி எழுதிய முதல் குறுங்கதை இது. ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைபெயரில் இச் சிறுகதையை பாரதி, மகளிருக்காக தாம் நடத்திய ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழில் (1905 நவம்பர்) எழுதினார். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியமற்றது என்பதை உணர்த்துடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும், பாரதி பிரசார நோக்கத்துடன் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். ஹிந்து சமயத்தில் மிகுந்த நாட்டமும், தேர்ச்சியும் உடைய மகாகவி பாரதியின் பாரம்பரியச் சிந்தனை, இக்கதை எழுதுவதைத் தடுக்கவில்லை. ஏனெனில், மகாகவி பாரதி- காளிதாசன் மட்டுமல்ல, ஷெல்லிதாசனும் கூட.

வையத் தலைமை கொள்!- 1

ஆத்திசூடி ஒரு ஸ்மிருதி நூல். அதனை தனது காலத்தில் வாழும் மக்களுக்காக மாற்றி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசனப் புலவர் பாரதி விரும்பியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்த்தாய் மீது மிகுந்த பற்றும், தமிழ்மகள் ஔவை மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த மகாகவி பாரதியின் ’புதிய ஆத்திசூடி’ அவ்வகையில் ஒரு பெரும் ஆதர்ஷ இலக்கியமாக நம்முன் உள்ளது. ஔவையார் 109 வரிகளில் பாடிய ஆத்திசூடியை, 110 வரிகளுடன் புதிய ஆத்திசூடியாகப் பாடுகிறார் பாரதி.....

தராசு கட்டுரைகள்- 1

நாளிதழ்கள், பருவ இதழ்களில் பத்தி (Column Writing) எழுதுவது இப்போது பிரபலமாக இருக்கிறது. எழுத்தாளரின் எண்ணத்தை பாதித்த /சமூகம் பயன்பெறும் எந்த விஷயம் குறித்தும் தொடர்ந்து ஒரே பகுதியில், ஒரே தலைப்பில் (இதனை மகுடம் என்கிறார் இதழாளர் பாரதி) எழுதுவது தான் பத்தி எழுத்தாகும். தமிழில் இதற்கு பிள்ளையார் சுழி இட்டவரும் மகாகவி பாரதியே. 1915இல் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதத் துவங்கிய ‘தராசு’ பத்தி, தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே நின்று, வெளிவந்திருக்கிறது. நமக்குக் கிடைத்த கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

அவன் ஒரு தொடர்கதைதான்…

“கண்ணா! நான் நானூறு வருடங்கள் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவனடா!” என்று குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னான். தவறு பாரதி! நவமியில் இராமனும், அஷ்டமியில் கண்ணனும் பிறந்தது போலத்தான், ஒரு துயரமான காலகட்டத்தில், அதைத் தமிழ்க் கவிதையால் துடைக்கும் அருட்கரமாக, சரியான நேரத்தில்தான் பிறந்தாய் நீ. “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்பதே உனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் என்று நீ கருதியதும் சரிதான். நாற்பது கூட ஆவதற்கு முன்னே பறந்துவிட்டாயே என்று நாங்கள் இன்றைக்கும் வருந்தினாலும், நீ மறைந்ததும் சரியான நேரத்தில்தான். அதற்குப் பிறகு நீ வாழ்ந்திருந்தால், தாங்கியிருக்க மாட்டாய். உன் உடம்பும், உயிரின் கெடுவும் அத்தனைக்குத்தான்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(18)

சீகாழிக் கோவையை அரங்கேற்றுவித்தற்கு நிச்சயித்து ஒரு நல்ல தினம் குறிப்பிட்டு, சீகாழியிலிருந்த பிரபுக்களும் வித்துவான்களும் அயலூரிலுள்ள பிரபுக்களுக்கும் வித்துவான்களுக்கும் சொல்லியனுப்பினார்கள். கேட்க விருப்பமுற்ற ஒவ்வொருவரும் வந்து சீகாழியில் இருப்பாராயினர். ஸ்ரீ பிரமபுரேசர் திருக்கோயிலின் தெற்குப் பிராகாரத்திலுள்ள வலம்புரி மண்டபம் அரங்கேற்றுதற்குரிய இடமாகப் பலராலும் நிச்சயம் செய்யப்பெற்றது. அம்மண்டபத்தில் இருந்து இவர் அரங்கேற்றத் தொடங்கினார். அப்பொழுது மூலத்தைப் படித்தவர் சாமிநாத கவிராயர். மூன்று காப்புச் செய்யுட்களும் முடிந்தன. நூலில் இரண்டு செய்யுட்கள் நிறைவேறின. இவர், செய்யுளின் நயத்தையும் பல நூல்களிலிருந்து அருமையான செய்யுட்களை மேற்கோளாகக் கூறி யாவருக்கும் விளங்கும்படி பொருள் உரைக்கும் அழகையுங் கேட்டுக்கேட்டு யாவரும் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர்; ‘இந்த வித்துவானைக் காண்டற்கும் இவர் கூறும் இனிய அரிய மொழிகளைக் கேட்பதற்கும் நாம் என்ன புண்ணியம் செய்தோம்!’ என்று ஒவ்வொருவரும் தம்மிற் கூறி வியந்தனர்.....

வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை

மகாகவி பாரதி பாண்டிசேரியில் இருந்த சமயம், வேடிக்கையாக பல சின்னக் கதைகளை எழுதினார். படித்தால் சாதாரணமாகத் தோன்றும் இக்கதைகளில் ஆழ்ந்த பொருள் இருக்கும். அந்தக் கதைகளுள் ஒன்று இது...

ஸ்வதேச கீதங்கள் – முன்னுரைகள்

மகாகவி பாரதி தனது தேசபக்திக் கவிதைகளை தொகுத்து ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற பெயரில் 1908இல் நூலாக வெளியிட்டார். அதன் இரண்டாம் பாகம் 1909இல் வெளியானது. அந்த நூல்களில் பாரதி எழுதிய முன்னுரைகளே இவை. இவ்விரண்டு பாகங்களும் பாரதியின் சத்குருநாதர் சகோதரி நிவேதிதைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை யாயினும், இரண்டாவது பாகத்தில் ”எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் மகாகவி பாரதி. நூலின் முகவுரையில் மகாகவியின் தன்னடக்கம் கண்டு உள்ளம் நெகிழ்கிறோம்...

சில வேடிக்கைக் கதைகள்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,  ‘உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?’ என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: 'உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?’ என்றான்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(17)

விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்....

மனிதன் வேலை செய்யப் பிறந்தான்

உழைப்பே உயர்வு தரும்; சோம்பர் வாழ்வைக் கெடுக்கும். இது தனிநபருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் பொருந்தும். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் உழைக்கும்போது, நாடும் தானாக முன்னேறும்- என்கிறார் இதழாளர் பாரதி, இக்கட்டுரையில்....

வேதபுரியில் நிகழ்ந்த கொடுமை

அனைவரையும் அரவணைக்கும் பெருந்தன்மை, அனைத்து மதங்களை நேசிக்கும் பரந்த மனப்பான்மை ஆகியவற்றுடன் கூடவே, சமுதாய வலிமையும் எவர்க்கும் பணியாத வீரமும், உரிமையைக் காக்கும் தன்மானமும், மாறா இறைநம்பிக்கையும் அவசியம் என்பதையே, வேதபுரீஸ்வரர் திருகோயிலின் அழிவு,   சரித்திரச் சாட்சியாக நம்மிடம் சொல்கிறது. ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்று முழங்கும் பிரான்ஸ் நாட்டினர் தான் வேதபுரியின் சிவன் கோயிலை இடித்தவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ‘வசுதைவ குடும்பகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பவை வலிமையானோர் சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்பதையும் வேதபுரி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது....

நமது ஞாபகத்திற்கு

ஆங்கிலேயரிடம் விண்ணப்பித்தால் சுதந்திரம் கிடைக்குமா என்று, இக்கட்டுரையில் கோபமாகவும் கேலியாகவும் வினவுகிறார் மகாகவி பாரதி. “வெகு பிரயாசத்தால் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று 10 ஆயிரம் மைல் தூரத்திலிருந்து இங்கு வந்திருக்கும் ஆங்கிலேயர்கள் நமக்கு நம்முடைய வேண்டுகோள்களைக் கொடுப்பார்களென்று நினைப்பது வெகு மூடத்தனமாகும்” என்று தனது வாதத்துக்கு ஓர் ஆதார ருசுவையும் முன்வைக்கிறார். ”செவிடர்கள்போல் ஆங்கிலேயர்களுக்கு விண்ணப்பப் பத்திரிகையை அனுப்பாமல், நம்முடைய பிரயத்தனத்தையே தேடுவது மிகவும் சிரேஷ்டமானது” என்கிறார் இறுதியில்.

விடுதலைப் போரில் அரவிந்தர்- 8

....இது சூரத் காங்கிரஸ் மாநாடு பற்றி வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு பல காலம் கழித்து ஒரு சீடரின் கேள்விக்கு அரவிந்தரின் பதிலில், "திரைக்குப் பின்னால் நடக்கும் உறுதியான செயல்களைப் பற்றி வரலாறு எப்போதும் பதிவு செய்வதில்லை. திரைக்கு முன்னால் வெளிப்படையாக நடக்கும் விஷயங்களை மட்டுமே அது பதிவு செய்கிறது. மிதவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும், காங்கிரசைப் பிளக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது நான் தான். இந்த முடிவை திலகரைக் கலந்தாலோசிக்காமல் நானே சுயமாக மேற்கொண்டேன். இதை வெகு சிலரே அறிவார்கள்" என்று எழுதியுள்ளார்.....

புதிய வருஷம்

புத்தாண்டுப் பிறப்பு தமிழகத்துக்கு நன்மையாக அமைய இக்கட்டுரையில் பிரார்த்தனை செய்யும் பாரதி, அதே போக்கில், தேசத்தில் மலர்ந்துவரும் சுதந்திரக் கனலையும் சுட்டிக்காட்டி மகிழ்கிறார். “இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்றால் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழ்ப்பட்டே தீர வேண்டும். மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை’ என்று சொல்லி இருப்பதன் தாத்பரியம், விடுதலை உணர்வற்ற ஜந்துக்களாக நமது மக்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தவே.