என்னுடைய இயற்பெயர் வேங்கடராமனென்பது; அதுவே சர்மா நாமம். இவரிடம் என் தந்தையார் சொல்லியதும் வேங்கடராமனென்பதே. அப்பெயராலேயே என்னை அழைத்துவந்த இவர் சில தினங்களுக்குப்பின் ஒருநாள் என்னை நோக்கி, "வீட்டார் உம்மை அழைப்பது இந்தப் பெயராலேயா? அன்றி உமக்கு வேறு பெயருண்டோ?" என்று கேட்டார். நான், "வேங்கடராமனென்பது மூதாதையின் பெயராதலின் தாய் தந்தையர்கள் அவ்வாறு அழையாமல் சாமிநாதனென்பதன் திரிபாகிய 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன். "சாமிநாதனென்ற பெயரே நன்றாக யிருக்கிறது. இனி அப்பெயராலேயே உம்மை அழைக்கிறேன்!” என்று கூறி அன்றுமுதல் அப்பெயராலேயே அழைத்து வருவாராயினர். இவருடைய விருப்பத்தின்படி பிறரும் அங்ஙனமே செய்துவந்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது....
Month: October 2022
தாஸியும் செட்டியும்
பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.
கொன்றைவேந்தன் (26-30)
பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(10)
1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து தில்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து தில்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள்....
தமிழ்
“இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்” -மேற்படி சாட்டையடி வார்த்தைகள் மகாகவி பாரதியின் எழுதுகோலில் வெளிவந்தவை. காரணம் என்ன? படியுங்கள், தொடர்ந்து....
கொன்றைவேந்தன் (21-25)
குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர். ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.....
விவேகானந்தரின் அடிச்சுவட்டில்….
இன்று விரிந்த பார்வையே இல்லாமல் போய்விட்டது. சமுதாயச் சீர்த்திருத்தங்கள்கூட எல்லைகள் – சாதிகளுக்குள்ளேயே முடங்கிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் அடிச்சுவட்டில் இந்த பாரதம் நடைபோட வேண்டும். சுவாமிஜியின் சிந்தனைகளுக்குச் செயலாக்கம் கொடுத்தால் புதிய பாரதம் – வலிவும் வளமும் உடைய பாரதம் தோன்றும் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் .
பேய்க் கூட்டம்
இது ஒரு கற்பனைக் கதைதான். அதிலும் தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கிக் கொண்டு, மேலும் தன்னைத் தானே பகடி செய்துகொண்டு, நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் மகாகவி பாரதி. இரு பகுதிகளாக வெளியான இக்கதை, இங்கு ஒரே பகுதியாக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சி, கந்த புராணம், திருவாசகம், ஆற்காடு நவாபின் சரண், அச்சமில்லை என்ற மகாகவியின் பாட்டு- இவை எல்லாம் சமத்காரமாக கதையினிடையே உலா வருவதைப் படியுங்கள், ரசியுங்கள்!
கொன்றைவேந்தன் (16-20)
கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது.
மகாவித்துவான் சரித்திரம் – 2(1)
இறைவன் திருவருள் கூட்டினமையால் என் தந்தையாரின் முயற்சியும் எனது விருப்பமும் பயன்பெறும் காலம் வந்து வாய்த்தது. பிரஜோற்பத்தி வருஷம் சித்திரை மாதமுதலில் (1871 ஏப்ரலில்) என்னை உடனழைத்துக்கொண்டு தந்தையார் மாயூரம் சென்று நல்ல நாளொன்றன் பிற்பகலில் பிள்ளையவர்களுடைய வீட்டிற்குப் போனார். அப்பொழுது அவ்வீட்டின் முதற் கட்டில் குற்றாலம் (திருத்துருத்தி) தியாகராச முதலியாரென்பவரும் சிவசின்னந் தரித்த வேறொருவரும் இருந்தார்கள்....
கிச்சடி
பல்வேறு தகவல்களை ஒரே செய்திக் கட்டுரையாக்கி அதற்கு ‘கிச்சடி’ என்று தலைப்பிடும் உத்தியை மகாகவி பாரதி தான் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலும் இந்தக் கிச்சடி ‘மேற்கோள் கிச்சடி’ என்று அவரே நகைச்சுவையாகச் சொல்கிறார். தமிழ் இதழாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. ஏனெனில் அவர்கள் கற்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது என்று நினவூட்டும் கட்டுரை இது.
கொன்றைவேந்தன் (11-15)
கற்பு என்றால் கல்போல உறுதியாக விளங்குதல் எனப் பொருள். கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான கல்வியானது கற்ற ஒருவரை அறிவுத் தடுமாற்றமின்றி உறுதியாக விளங்கச் செய்கிறது. அதேபோல கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த கற்பு என்ற இன்னொரு சொல், ஒழுக்கத்தால் ஒருவர் நெறிமுறையில் உறுதியாக நிற்றலைக் குறிக்கிறது.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(9)
இந்தியாவின் மானத்தைக் காக்க அயோத்தியின் ராணியான ஹஸ்ரத் மஹல் பேஹம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ஹஸ்ரத் மஹல் இங்கிலாந்தின் பிரகடனத்தை ஏற்க மறுத்தார். கிழக்கிந்திய கம்பெனியார் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் செய்துகொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும், பிரிட்டிஷ் அரசு அப்படியே தொடரும் என்றால், இந்த மாற்றம் எதற்காக?
மிளகாய்ப் பழச் சாமியார்
மகாகவி பாரதியின் வேதபுர நிகழ்வுக் கதைகளில் இதும் ஒன்று. பெண் விடுதலையை நேசிக்கும் கவிஞரின் கருத்தை அறிந்த பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியார் அவரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை வைக்கிறார். அது என்ன?
கொன்றைவேந்தன் (6-10)
எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை. மேலும், அறிவியலுக்கு ஆதாரமான எண்களும், அறிந்துகொண்டவற்றைப் பிறர் அறியப் பயன்படும் எழுத்துகளும் கண்களைப்போல மதிக்கவும் காப்பாற்றவும் தகுந்தவை என்றும் கொள்ளலாம்.