மகாகவி பாரதி, யாகம் வளர்க்கும் தீ மீதான இப்பாடல்களில் பழங்கால முனிவர்களின் வேள்விப் பண்பாட்டை மிகவும் சிறப்பாகப் பதிவு செய்கிறார். வேதப் பாடல்களில் பாரதிக்கு இருந்த ஞானம் இப்பாடல்களில் வெளிப்படுகிறது....
Author: vamumurali
சிவகளிப் பேரலை- 14
உலக உயிர்களின் (பசுக்களின்) தலைவனாக (பதியாக) இருப்பவர் சிவபெருமான். அவரே நம்மை ஆளும் பிரபு. அந்தப் பிரபு, எளியவர்களாகிய பக்தர்களுக்கு மிகச் சிறந்த உறவினர். ஆகையால், அந்தச் சிவபெருமானிடம், நீ உறவு கொள்ளத்தக்க மிகவும் எளியவன் நான் என்று நமக்காகக் கூறுகிறார் ஆதிசங்கரர். நமது உறவு, விளக்கிக் கூற இயலாதது, உரைகளில் அடங்காதது என்றும் கூறுகிறார்....
இலக்கிய தீபம்- 7
செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவாதிருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ்விரு கொள்கைகள் பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது....
எனது முற்றத்தில் – 5
மதுரை வட்டாரத்தில் மக்களின் குல சாமி மதுரைவீரன். மதுரையை அடுத்த மேலூரில் உள்ள மதுரைவீரன் கோயில், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். கோயிலைத் தொடாமல் சாலை விரிவாக்கம் நிறைவேற வேண்டுமானால் நூறு வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். மக்கள் துளிக்கூட தயங்காமல் தங்கள் வீடுகளை இடித்து சாலைக்கு வழி விடுவதாக அறிவித்ததோடு நில்லாமல் தங்கள் வீடுகளை இடிக்கவும் தொடங்கினார்கள். தங்களுடைய குல சாமி கோயில் மீது யாரும் கைவைக்கக் கூடாது என்பது அந்த தியாக மூர்த்திகளின் திட உறுதி....
சந்திரன் மீதான பாடல்கள்
நிலவைப் பாடாத கவிஞர் இல்லை. மகாகவி பாரதியோ நிலவினை பக்திப் பெருக்குடன் பாடி மகிழ்கிறார். அவரது 72, 73 வது பக்திப் பாடல்கள் வேறு தனிச்சுவையும் தருபவை...
சிவகளிப் பேரலை- 13
தோன்றி மறையக் கூடிய இந்த வாழ்க்கையை நிலையானது என்றும் நிஜமானது என்றும் நினைத்துக்கொண்டு குருட்டுத்தனமாகச் செயல்படுவதால், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட குருடர்களில் ஒருவனான என் மீது சிவபெருமானே உனது கருணையைப் பொழிந்துவிடு என்று நமக்காக வேண்டுகிறார் ஆதிசங்கரர்....
ஸங்கீத விஷயம்
புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுகளில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்....
சூரியன் மீதான பாடல்கள்
மகாகவி பாரதி சூரியக் கடவுள் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தவர். அவரது இந்தப் பற்றுதலுக்கு சூரியன் மீதான வேதப் பாடல்களும் காரணமாக இருக்கலாம். சூரியனைப் போற்றும் காயத்ரி மந்திரத்தை தமிழில் வழங்கியவர்; வசன கவிதைகளில் ஞாயிற்றின் புகழை ஓங்கி ஒலித்தவர் பாரதி. அவரது பக்திப் பாடல்களில் மூன்று (69, 70,71) சூரிய வணக்கப் பாடல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
சிவகளிப் பேரலை- 12
பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.
என் ஈரோடு யாத்திரை
ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை. ஸ்வதேசீய நிகழ்ச்சி தோன்றிய காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அகவேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவுபடுகின்றன. இதற்குச் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.
சுதேசமித்திரனில் (1921) மகாகவி பாரதி எழுதிய இறுதிக்காலக் கட்டுரை இது...சிவகளிப் பேரலை – 11
ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும்...
சிவகளிப் பேரலை- 10
மனிதப் பிறவியோ, அதனைவிட மேலான தேவப் பிறவியோ, அல்லது மலை மற்றும் காடுகளில் உழல்கின்ற மிருகப் பிறவியோ, மிகச் சிறிய கொசு வடிவோ, வீட்டு விலங்கோ, புழுவோ, பறவை முதலிய பிறவியோ எந்தப் பிறவி வேண்டுமானாலும் கிடைக்கட்டும். எப்படிப்பட்ட பிறவி எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்தப் பிறவியானாலும் எந்தை சிவபெருமானை மறவாத மதி வேண்டும் என்பதே முக்கியம்....
ஆரிய தரிசனம்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 68வது கவிதை, ‘ஆரிய தரிசனம்’ என்ற கவிதை.
சிவகளிப் பேரலை- 9
சிவபெருமான் எவ்வளவு பெரியவரோ அந்த அளவுக்கு எளிமையானவர். தெளிந்த மனம் போதும் அவரை உபசரிக்க; அழகும், மணமும் நிறைந்த பூக்கள் அவசியமில்லை....
அபிநயம்
"சிங்கார ரஸத்தை ஒரு கூத்தன் காண்பிக்கும்அபி நயங்களில் கூத்துப் பெண்ணுடைய அபிநயங்கள் கலக்கலாகாது. ஆண் மகனே பெண்ணுருக் கொண்டு கூத்தாடுவானாயின், அப்போது பெண்மை அபிநயங்கள் காண்பிக்கத்தகும். ஆண்மகன் உருமாறாமல் கூத்தாடும்போது பெண்மை தோன்றலாகாது.
"வீர ரஸத்தில் ஒருவன் தேர்ச்சியடைய விரும்புவானாயின், ராமன் முதலிய அவதார புருஷர்களுடைய வடிவை அவன் தியானம் செய்யக் கடவான். நாராயண உபாஸனையே கூத்தனுக்குவீர ரஸத்தில் தேர்ச்சி கொடுக்கும்...”