எல்.கே.அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒரு கலாச்சாரக் குழுவினர் அவரைச் சந்தித்தார்கள். அனைவரும் முஸ்லிம்கள். அதெப்படி ராமாயண நாட்டிய நாடகம் எல்லாம் நடத்துகிறீர்கள் என்று அத்வானி கேட்டபோது "நாங்கள் மதம் மாறியிருக்கலாம்; ஆனால் எங்கள் மூதாதையர்களை மாற்றிக் கொள்ளவில்லை. ராமர் எங்கள் மூதாதை" என்று விளக்கினார்கள். இந்தோனேசிய அரசே கரன்சி நோட்டில் கணபதி படம் அச்சிட்டு வருகிறது; கருடா ஏர்வேஸ் என்று தனது விமானக் கம்பெனிக்குப் பெயர் என ஹிந்து அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்கிறது. அந்த நாட்டு மக்கள் மனதில் ஹிந்து என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும்படி சொல்லும் விஷம் எப்படி பரவும்?...
Author: vamumurali
இலக்கிய தீபம் – 6
பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர லிரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை ஜீவதசையிலிருந்தவனாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் இரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற்றின் முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்....
சிவகளிப் பேரலை- 8
சிவரூபம்தான் இறைத்தன்மையின் உச்சநிலை என்பதை இங்கே மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.... முழுமையான ஞானம் இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற மனமயக்கம் காரணமாக, மூடர்கள், அனைத்திலும் மேலான, ஒப்பும் உயர்வும் அற்ற இறை வடிவமான சிவத்தை நினைக்காமல், மற்ற தெய்வங்களை நாடுகிறார்கள் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
இரு விடுதலைப் பாடல்கள்
“விட்டு விடுதலையாகி நிற்பாய்- அந்த சிட்டுக்குருவியைப் போலே’’ என்று பாடிய மகாகவி பாரதியின் மனம் முழுவதும் ஏதவதொரு வகையில் விடுதலையுணர்ச்சி பொங்கிப் பிரவஹித்துக் கொண்டே இருந்தது. அவரது பக்திப் பாடல்களிலும் இங்கே அந்த விடுதலைப் பேருணர்வை தரிசிக்கலாம்…
இலக்கிய தீபம் -5
பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16 கோடிப்பொன் கண்ணனாருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.
சத்தியசோதனை 1(16-20)
புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதை கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ‘தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டு விட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு’ என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது. கீதை, ஆசிய ஜோதி, மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6
சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது... 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.
சிவகளிப் பேரலை- 7
அனைத்தும் அவன் செயல் என்பதை அறிந்துகொண்டு, அனைத்துச் செயல்களையும் அவன்பாலே செய்துவிட்டால் பாவ - புண்ணியம் எவ்வாறு நம்மைப் பற்ற முடியும்? நினைப்புதான் நம்மை உயர்த்துகிறது. நினைப்புதான் நம்மைத் தாழ்த்துகிறது. அந்த நினைப்பேயே இறைமயம் ஆக்கிவிட்டால், உலகியல் செயல்களுக்கு நாம் இரையாக மாட்டோம்....
ஆறு துணை
இக்கவிதை, கூட்டுப் பிரார்த்தனைக்கான அற்புதமானதொரு பாடல்.
சிவகளிப் பேரலை- 6
தர்க்கவாதத்திற்குப் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கரர், பக்திக்கு முன்பு எந்த வாதமும் எடுபடாது, சிவபக்தி ஒன்றே போதும் என்று இங்கே கூறுகிறார். ஞானம் இறைவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தினாலும், அது முழுமையடையும் வரையில், தான் என்ற நினைப்பு கூடவே இருக்கும். ஆனால், கனிந்த பக்தியில் தன்னைக் கரைத்துக்கொண்டு இறைவனே எல்லாம் என்பதால், தான் என்ற அகம்பாவம் அடிப்படையிலேயே காணாமல் போய்விடுகிறது.
மூன்று காதல்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 64வது கவிதை, வித்தியாசமானது. பெண்மையை கலைமகளாகவும் அலைமகளாகவும் மலைமகளாகவும் புனைந்து அவள் மீது மையல் கொண்ட காதலனாக இப்பாடலை எழுதி இருக்கிறார் பாரதி. மூன்றையும் வெவ்வேறு ராகங்களில், ஒரே தாள கதியில் படும் வகையில், பாரதியே மெட்டு அமைத்திருக்கிறார்...
கடவுள் அமைத்து வைத்த மேடை…
திரைப்பாடல் எழுதுவது தனிக்கலை. திரைக்கதைக்கு ஏற்ப எழுத வேண்டும்; இசை அமைப்பாளர் அளிக்கும் மெட்டுக்குப் பொருந்தவும் எழுத வேண்டும். அதில் கவித்துவத்தையும் கொண்டுவர வேண்டும். அதிலும் ரசிகர்கள் விரும்பும் வண்ணமாக சொற்கள் பிரவாகமாக வந்து விழ வேண்டும். அதில் கோலோச்சியவர் கவியரசர். இங்கு நாம் காணும் பாடல், கவியரசரின் கற்பனைவளமும், கவித்திறனும், கதை சொல்லும் பாங்கும் இணைந்த படைப்பு. அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தைப் பாரத்தவர்களுக்கு, இந்தப் பாடலின் காட்சியமைப்பும், பொருத்தமும் புலப்படும். இந்தப் பாடலைப் படிக்கும்போதுதான், நமது இன்றைய திரையுலகத்தின் தர வீழ்ச்சி மீண்டும் மீண்டும் நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.
சிவகளிப் பேரலை- 5
மிகப் பெரும் ஞானியாகிய ஸ்ரீ ஆதிசங்கரர், அவையடக்கமாய் தம்மை ஏதுமறியாதவர்போலக் காட்டிக்கொண்டு, சிவபெருமானிடத்தே கருணையை இறைஞ்சுகிறார். அவரது அவையடக்கம், பாமர பக்தர்களாகிய நம்மை நினைத்துத்தான். நமக்காக, நம்பொருட்டு, நாம் வேண்டுவதற்காகவே, தம்மை பாமரனாக உருவகித்துக்கொண்டு இந்தப் பாடலை அருளியிருக்கிறார் ஜகத்குரு....
நவராத்திரிப் பாட்டு (2)
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 63வது கவிதை, நவ ராத்திரிக் கவிதை...
எனது முற்றத்தில்… 3
‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம். பாரதி சொல்வது சரி என்று அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா, தமிழக சலவைத் தொழிலாளர். பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள். சலவைத் தொழில் செய்பவர்? ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி...