“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.
Author: vamumurali
பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள்- 2
தமிழின் முன்னோடி இதழாளரான மகாகவி பாரதி, பத்திரிகைத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவர். ஆங்கில பத்திரிகையை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்காகவே ஒரு பத்திரிகையை நடத்தியவர் என்பது கீழ்க்கண்ட விளம்பரத்திலிருந்து தெரிகிறது. பாரதி ஆசிரியராக இருந்த ‘விஜயா’ பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் இது (கீழே...).
சிவகளிப் பேரலை- 19
இந்தப் பிறவியானது எப்படி இருக்கிறது? தீய ஆசைகள் சூழ்ந்ததாக இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக தீயோர்களை அண்டி நின்று அவர்களுக்காகப் பணியாற்றுவதாய் இருக்கிறது. இதன் காரணமாக நமக்குத் தீய முடிவைத் தருவதாகவும், கெட்ட பழியை ஏற்படுத்துவதாகவும் மிகுந்த துன்பமயமாகவும் பிறவிச்சுழல் அமைந்துவிடுகிறது. நமது வினைகளால் நமக்கு ஏற்படும் இந்த அனுபவங்களைத்தான் விதி என்றும், பிரம்மன் எழுதிய தலையெழுத்து என்றும் கூறுகிறோம். ....
பாரதியின் பத்திரிகை அறிவிப்புகள் – 1
மகாகவி பாரதி தான் பணியாற்றிய / நடத்திய பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகள் அவரது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துபவை. அவற்றில் மூன்று அறிவிப்புகள் இங்கே...
சிவகளிப் பேரலை- 18
வேண்டிக் கொள்பவர்களுக்கு நிறைவான பலனைத் தரவல்லவர் சிவபெருமான் ஒருவர் மட்டுமே என்கிறார் ஆதிசங்கரர். மற்ற தெய்வ வடிவங்கள் தரும் வரங்களில் எல்லாம் விட்ட குறை, தொட்ட குறை இருக்கத்தான் செய்யும். ஆனால், நிறைவான இறைவடிவான சிவபெருமானின் அருளும் நிறைவாகவே இருக்கும். ....
காற்றிடைச் சாளரம் – 7
நதியொரு சிற்பி
கூருடைத்த உருளைக் கற்கள்.
நதியொரு பாடகர்
விடியலுக்கு முன் கேளுங்கள்.
நதியொரு கலைஞன்
சும்மாயிருப்பதில்லை.
நதியொரு ஞான யோகி
தன்னியல்பில் தானானது.
சிவகளிப் பேரலை- 17
இறைவனது திருவடி தரிசனம், எல்லாவித பாவங்களையும் போக்கி நம்மை உய்விக்க வல்லது. இதைத்தான் திருவள்ளுவர், “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்கிறார். எங்கும் நிறைந்திருக்கக்கூடிய இறைவனின் திருவடி தரிசனம், புண்ணியத்தின் பலன் காரணமாகவோ அல்லது, இறைவனது பெருங்கருணையாகிய பேறு காரணமாகவோ, பக்தனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. அவ்விதம் சிவபெருமானே, எனக்கு நீ தரிசனம் கொடுத்தாலும்கூட, எனது பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குத் தோணி போன்ற உனது திருவடிகளை என்னால் காண இயலுமா?
தேசியக் கல்வி
ஒரு தேசம் என்பது கோடானுகோடி குடும்பங்களின் தொகுதி. குடும்பங்கள் இல்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடில் தேசியக் கல்வியைப் பற்றி பேச இடமில்லை. தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது ‘தேசியம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை.
தேச பாஷையே பிரதானம் என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.
சிவகளிப் பேரலை- 16
“விதியையும் விதித்தென்னை விதித்திட்ட மதியையும் விதித்து அம்மதி மாயையிற் பதியவைத்த பசுபதி நின்னருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே” என்று தாயுமானவர் வினவியுள்ளார். அதற்கு பதில் அளிப்பதைப் போல, சிவனின் கடாட்சம் (கடைக்கண்) பட்டால் போதும் அவரோடு இணைகினற அருட்கதியைக் கண்டுகளிக்கலாம் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....
யேசுவும் அல்லாவும்
அதிதீவிர ஹிந்துவான மகாகவி பாரதி, பிற சமயத் தெய்வங்களையும் மதித்துப் போற்றியவர். அதுவே ஹிந்துவின் இயல்பும்கூட. கிறிஸ்தவ சமயத்தினரின் யேசு கிறிஸ்துவையும், இஸ்லாமிய சமயத்தவரின் அல்லாவையும், பாரதி பாடிய கவிதைகள் இவை...
சிவகளிப் பேரலை- 15
உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, உனக்கு என் மீது என்ன வெறுப்பு? அவ்விதம் வெறுப்பு இல்லையென்றால், என்னைக் காப்பாற்றும் விஷயத்தில் ஏனிப்படி பாராமுகமாய் இருக்கிறாய்? கெட்ட ஆசைகள் நிறைந்ததாயும், உன்னைத் தொழுது நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் எனது மனது உழல்கின்றதே? இவ்வாறான மனது எனக்குக் கிடைக்கும்படியாகச் செய்த பிரம்மன் எழுதிய தலையெழுத்தை நீ ஏனய்யா போக்கவில்லை?
கிளிப்பாட்டு
மகாகவி பாரதியின் 76வது பக்திப்பாடல், ‘கிளிப்பாட்டு’ என்னும் இச்சிறு கவிதை...
தமிழில் சாஸ்த்ர பரிபாஷை
பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றின ஆராய்ச்சிகளிலே, நம்மைக்காட்டிலும் ஐரோப்பியர் முன்னே நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகிக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டுமென்று பல பண்டிதர் மிகவும் ஆவலோடிருக்கிறார்கள். ஏற்கெனவே, சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேல் வளரும்; வளர்ந்து தீரவேண்டும்....
சத்திய சோதனை 1(21- 25)
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, முறையை அனுசரிப்பது. இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, பரீட்சைகளில் தேறுவது. முறையை அனுசரிப்பது என்றால், முறைப்படி தின்பது, அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால் சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும். ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும், அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது மிதமானது என்றே கருதப்பட்டது. சாப்பாட்டின் விலையை விட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு நாம் நாகரிகம் அடையாதவர்களாக இருந்தால் - ஆச்சரியமாக இருக்கும். முதன்முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை.... நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ஒயின் என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத் தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கும் இரண்டு ஒயின் பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது. இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் பெரிய விருந்து என்று ஒன்று நடக்கும். போர்ட், ஷெர்ரி ஒயின்களும் அதிகமாக, ஷாம்பேன் போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப் பெரிய விருந்து நாட்களில் எனக்கு கிராக்கி வெகு அதிகம் இருக்கும்....
இன்றைய இந்தியாவின் முகங்கள்- 7
18 ஆயிரம் அடி உயரத்தில் எதிரி. அங்கிருந்து ஆளுக்கொரு தோட்டா என்று துல்லியமாகக் கொல்ல முடிந்தது. அந்தக் கடினமான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலை மீதேறி எதிரிகளை வேட்டையாடிய இந்திய வீரர்களின் அபாரமான செயலைக் கண்டு உலகமே வியந்தது. இது நடந்தது 1999-இல் கார்கிலில். அந்தப் போரை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் இந்திய ராணுவ தளபதியான ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். அதன் பிறகு பல நாடுகளில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ‘கார்கில் விஜயம்’ ஓர் அங்கமாக மாறியது....