பாரதி- அறுபத்தாறு – (42-44)

யாழ்ப்பாணத்து சுவாமிகளை தனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் குவளைக் கண்ணனை இப்பாடலில் பாடி மகிழ்கிறார் மகாகவி பாரதி...

சிவகளிப் பேரலை- 96

முன்பு 20-வது ஸ்லோகத்தில், மனத்தை அலைபாயும் குரங்காக வர்ணித்து அதனைக் கட்டிவைக்கும் கயிறாக சிவபெருமான் மீதான பக்தியை உவமைப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், இந்தச் செய்யுளிலும் இதற்கு அடுத்த செய்யுளிலும் மனத்தைக் கட்டுக்கடங்காத மதயானைக்கு ஒப்புமைப்படுத்துகிறார். ....

சிவகளிப் பேரலை- 95

என் பாதங்களோ மிக மென்மையானவை, பக்தா உனது மனதோ மிகவும் கடினமானது என்று சிவபெருமானே உன்னகத்துள் எனது உய்வுக்கு முரணான சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக நீக்கிவிடு. பவானியின் மணாளனாகிய சிவபெருமானே, அவ்வாறு நீர் உண்மையிலேயே கருதுவீராயின், மிகவும் கரடுமுரடான இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலே நீர் எப்படி உழன்று திரிகின்றீர்? என்று நமக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(10)

பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.....

சிவகளிப்பேரலை- 94

முன்பு 7-ம் ஸ்லோகத்தில், சிந்தையெல்லாம் சிவமயமாகிவிட வேண்டும் என்பதை எடுத்துரைத்த பகவத்பாதர், இந்த ஸ்லோகத்தில் அதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்துமாகி நிற்கும் பரம்பொருளான அந்தப் பரமசிவத்தைப் பற்றினால், பற்றுகள் தீர்ந்துபோய் வாழ்க்கைப் பயன் பூர்த்தியாகிவிடும் என்கிறார்.

விடுதலைப் போரில் அரவிந்தர் – 2

அரவிந்தர் 1879 முதல் 1893 வரை பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் இருந்தார். முதல் ஐந்தாண்டுகள் மான்செஸ்டரில், அடுத்த ஆறு ஆண்டுகள் லண்டனில், கடைசி மூன்றாண்டுகள் கேம்பிரிட்ஜில் இருந்தார். எப்போதாவது வீட்டில் இருந்து வரும் கடிதம், நாளிதழ்களில் வரும் செய்தி, கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஏற்பட்ட சில அறிமுகங்கள், என்பதைத் தவிர தாயகத்தோடு அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பாரதம் பற்றி, அதன் மக்கள் பற்றி, அதன் பண்பாடு பற்றி, சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் வளர்ந்தார். ”அந்த விஷயத்தில் முற்றிலும் அறியாமையில்தான் இருந்தேன்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்....

பாரதி- அறுபத்தாறு (40-41)

புதுவையில் வசித்தபோது தனக்கு குருநாதர்களாக இருந்தவர்களை பாடலில் வணங்கி மகிழும் மகாகவி பாரதி, இப்பாடலில் யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழைப் பாடுகிறார்....

சிவகளிப் பேரலை- 93

ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தர்களாகிய நமது இதயங்களில் அந்த நீலகண்டப் பெருமானே, நமக்குக் காப்பாக (ரட்சையாக) நீங்காது நிலைபெற்றிருக்க வேண்டும் என்று நமக்காக இறைஞ்சுகிறார்.....

கயிற்றரவு

வாழ்வின் பொருளின்மையை சிறுகதைக்குள் அடக்க முயலும் புதுமைப் பித்தனின் மேதமையை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. கண்ணுக்குப் புலப்படும் வாழ்க்கை, கயிறா, அரவமா? கடிக்கும் வரை கயிறு... கடித்த பிறகு அரவம். இது அனுபவ ஞானம். ஆனால், அந்த அரவத்தைக் கயிறென்று துணிந்தே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. பொறுமையுடன் நிதானமாகப் படிக்க வேண்டிய வேதாந்தக் கதை இது...

பஞ்சகோணக் கோட்டையின் கதை

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நமது நாடு ஏன் அடிமைப்பட்டது என்று சிந்தித்த மகாகவி பாரதி, சமூகத்தின் ஒரு பகுதியான அடித்தட்டு மக்களை பஞ்சமர்கள், தீண்டத் தகாதோர் என்று ஒதுக்கி வைத்த பாவமே அடிப்படைக் காரணம் என்று கண்டறிகிறார். ஈனம் என்று கூறப்படும் ஜாதியாரை ஆதரித்து அவர்களை உயர்த்துவதே தேசம் உய்யும் வழி என்கிறர் இக்கட்டுரையில். ஒரு கதை போல எழுதி, இறுதியில் அற்புதமான அறவுரையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் பாரதி. சுதந்திர நன்னாளில் அவரது அறவுரையை அறிவுரையாக ஏற்போம். நாட்டைக் காப்போம்!

சிவகளிப் பேரலை- 92

சிவபெருமானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதால் அறியாமை அகன்று, ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் மொழிந்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பரமஸே்வரரின் திருவிளையாடல் புராணங்களைக் கேட்பதால் பாவங்கள், தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலகியோடும் என்பதை விண்டுரைக்கிறார்.  ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(9)

அம்பலவாண முனிவர் , வடமொழி தென்மொழி  யிரண்டிலும் முறையான பயிற்சியுடையவர். பல சிவபுராணங்களிலும் பல பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் அவருக்கு நல்ல ஆராய்ச்சி உண்டு. சிறந்த ஒழுக்கமுடையவர். இடைவிடாமற் படித்தலிலேயே காலத்தைப் போக்குபவர். மடத்திற் பல தமிழ்நூல்கள் கிடைக்குமாயினும் ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள சுவடிகளில் எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்குத் திருப்தியதிகம். அவ்வாறு அவர் எழுதிய சுவடிகள் மிகப் பல. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவராக விருந்தாலும் உலகப்பயிற்சியே இல்லாதவர். யாருக்கேனும் பாடஞ்சொல்லுதலில் அவர் பழகவில்லை. அவர் 96 பிராயத்திற்கு மேற்பட்டு வாழ்ந்திருந்தவர். ஸ்ரீ சூரியனார் கோயிலிலுள்ள ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் மடத்துத்தலைவராக அம்பலவாண தேசிகராற் பின்பு நியமிக்கப்பெற்றவர்....

இன்குலாப் ஜிந்தாபாத்… இந்துஸ்தான் ஜிந்தாபாத்!

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, தேசபக்தி மிளிரும் கவியரசரின் அற்புதமான திரைப்படக் கவிதை இங்கு வெளியாகிறது....

எனது முற்றத்தில்- 16

நெல்லை மாவட்டக் கடற்கரையோரம், இடிந்தகரை கிராமத்தில் 1969இல் ஏராளமான மீனவ கிறிஸ்தவர்கள் தாய்மதம் திரும்பினார்கள்.  பிரமாண்டமான சர்ச்சுக்கு எதிரே சின்னஞ்சிறு விநாயகர் கோயில் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்தக் கோயிலுக்கு நேரில் சென்ற ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மீனவ சகோதர சகோதரிகள் மத்தியில் அருளுரை நிகழ்த்தினார். மீனவர்களை அந்த வட்டாரத்தில் பரதவர்கள் என்று குறிப்பிடுவார்கள். இதை சுட்டிக்காட்டிய சுவாமிகள் "நீங்களெல்லாம் பரதனின் வம்சத்தில் வந்தவர்கள். இது உங்களுக்கு பெருமை தரும் விஷயம்" என்று எடுத்துக் கூறினார். இதைக் கேட்டு அந்த மீனவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள் அதைக் கண்ட இந்தத் துறவிக்கும் கண் கலங்கியது....

சத்திய சோதனை- 3 (16-19)

பிரம்ம சமாஜத்தைக் குறித்து வேண்டிய அளவு தெரிந்து கொண்டேன். ஆனால், சுவாமி விவேகானந்தரைப் பார்க்காமல் என்னால் திருப்தியடைய முடியவில்லை. ஆகவே, அதிக உற்சாகத்தோடு பேளூர் மடத்திற்குப் போனேன். அநேகமாக, முழுத்தூரமும் நடந்தே அங்கே சென்றதாக ஞாபகம். மடம் அமைந்திருந்த ஏகாந்தமான இடம், என் மனதைக் கவர்ந்து இன்பம் ஊட்டியது. சுவாமி, தமது கல்கத்தா வீட்டில் இருக்கிறார்; நோயுற்றிருப்பதால் அவரைக் காண்பதற்கில்லை என்று சொல்லக் கேட்டு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.      பிறகு சகோதரி நிவேதிதா இருக்கும் இடத்தை விசாரித்து தெரிந்துகொண்டு, சௌரிங்கி மாளிகையில் அவரைச் சந்தித்தேன். அவரைச் சுற்றி இருந்த ஆடம்பரங்கள் என்னைத் திடுக்கிடச் செய்தன. அவரிடம் பேசிய பிறகு, நாங்கள் இருவரும் அநேக விஷயங்களில் ஒத்துப் போவதற்கு இல்லை என்பதைக் கண்டேன். இதைக் குறித்து கோகலேயிடம் பேசினேன். அவரைப் போன்ற உணர்ச்சி வேகமுள்ள ஒருவருக்கும் எனக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கருத்து ஒற்றுமை ஏற்பட முடியாது போனதில் ஆச்சரியமில்லை என்று கோகலே கூறினார்.      ஸ்ரீ பேஸ்தன்ஜி பாத்ஷாவின் வீட்டில் மீண்டும் நிவேதிதாவைச் சந்தித்தேன். பேஸ்தன்ஜியின் வயதான தாயாருடன் சகோதரி நிவேதிதா பேசிக் கொண்டிருந்த சமயத்தில் நான் அங்கே போக நேர்ந்தது. ஆகவே, அவ்விருவருக்கும் மொழிபெயர்த்துக் கூறுபவனானேன். அவருடன் எந்த ஒருமைப்பாட்டுக்கும் என்னால் வரமுடியவில்லை என்றாலும், ஹிந்து தருமத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பைக் கண்டு வியக்காமல் இருக்க என்னால் முடியவில்லை. அவர் எழுதிய நூல்களைக் குறித்து பின்னால் தான் அறிந்தேன்.....