சென்னை ஹைகோர்ட்

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி பதவிக்கான காலியிடம் ஒன்றில் தகுதி வாய்ந்த இந்தியர் ஒருவரை (ஸ்ரீ சங்கரன் நாயர்) நியமிக்க மறுக்கும் ஆங்கிலேய அரசின் பட்சபாதத்தை தனது தர்க்கத் திறனால் கேள்விக்கு உள்ளாக்கும் மகாகவி பாரதியின் இதழியல் கடமையுணர்வு இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...

மகாவித்துவான் சரித்திரம்- 1(12)

ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். ...

புல்லர் செய்யும் மோசம்

புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!

விடுதலைப் போரில் அரவிந்தர்- 4

சமஸ்கிருதத்தை அவரே சுயமாக கற்கத் தொடங்கினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐசிஎஸ் படிப்புக்காக கிரேக்க, லத்தீன் மொழிகளை அப்படித்தானே கற்றார்? அதேபோல மற்றொரு செம்மொழியான சம்ஸ்கிருதத்தையும் தானே முயன்று கற்றார். எந்த அளவுக்கு என்றால், வேதத்தைப் படிப்பதுடன், அந்த புராதன பிரதியை தனது யோக கண்ணோட்டத்தில் புதுவிதமாக விளக்குமளவுக்கு  அதில் வல்லமை பெற்றார். மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு இருந்த ஆர்வம் காரணமாக குஜராத்தி, மராட்டி, வங்க மொழி ஆகியவற்றில் திறம் பெற்றவரானார்....

சிவகளிப் பேரலை- நிறைவு

இந்த ‘சிவானந்தலஹரீ’ நூல், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் அனைத்துவித சங்கடங்களையும் போக்குகின்ற மேலான சத்தியத்தை, நன்மையைப் போதிக்கின்ற பொக்கிஷமாகும். இதனை என்னால் இயன்றவரையில் தித்திக்கும் தீந்தமிழில் செய்யுளாக, கவிதையாக மொழிமாற்றித் தந்துள்ளேன். இதனைப் படிப்பவர்க்கும், கேட்பவர்க்கும், அனைவருக்குமே தீமைகள் எல்லாம் நீங்கிடுமாறு அந்தப் பரமேஸ்வரன் அருளட்டும்.....

பாரதி- அறுபத்தாறு -45

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,       மனையாளும் தெய்வமன்றோ?- என்ற தார்மிகக் கேள்வியை முன்வைக்கும் பாடல் இது....

சிவகளிப் பேரலை- 100

     எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதனை முழுமையாகச்  சொல்வதற்கு ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனாலும் இயலாது என்பது ஆன்றோர் வாக்கு. ஆகையினால், எம்மால் முழுமையாகக்கூற இயலாது காரணத்தால், இந்த நூலுக்கு ஒரு நிறைவு வேண்டி, சிவபெருமானே, இதனோடு உம்மைப் பற்றிய துதிகளை நிறைவு செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....

மகாவித்துவான் சரித்திரம்- 1(11)

அவ்வக்காலத்திற் பிள்ளையவர்கள் தம் உள்ளத்தில் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த அரிய கருத்துக்களும் இனிய கற்பனைகளும் நிறைந்து விளங்கும் இத் தியாகராசலீலை தேனீக்கள் பல மலர்களில் உள்ள தேனைப் பலநாள் தொகுத்து அமைத்த தேனிறாலைப்போல உள்ளது. இவராற் செய்யப்பெற்ற முதற் காப்பியமாதலின் இதில் ஒரு தனியான அழகு அமைந்திருக்கின்றது. அக்காலத்திலே இவரோடு பழகிய பலர் இத் தியாகராசலீலைப் பாடல்களை அடிக்கடி அங்கங்கே எடுத்தெடுத்துப் பாராட்டி மகிழ்வதுண்டு.

சிவகளிப் பேரலை- 99

  முன்பு 23-வது ஸ்லோகத்தில், எல்லாம் வல்ல எம்பிரானை நோக்கி, சிவபெருமானே பக்தனாகிய எனக்கு விரைவில் தரிசனம் கொடுத்து ஆட்கொள்வீராகுக! என்று இறைஞ்சிய சங்கராச்சார்யார், இந்த ஸ்லோகத்தில் அவரது திருக்காட்சியை கண்ணுற்று புளகாங்கிதமுற்று அந்த பரமானுபவத்தை மொழிந்துள்ளார். ....

எனது முற்றத்தில்- 17

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மாதம் ஒரு சுபாஷிதம் வீதம் சொல்ல ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் ஸ்வயம்சேவகர்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.  எனவே சமுதாய ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமானா,ல் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் "அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி,  நாஸ்தி மூலம் அனௌஷதம்; அயோக்ய புருஷஹ நாஸ்தி, யோஜகஸ் தத்ர துர்லபஹ" (மந்திரத்துக்கு ஆகாத அட்சரம் இல்லை,  மருந்துக்கு ஆகாத மூலிகை இல்லை, தகுதி இல்லாதவன் என்று யாரும் கிடையாது; ஒருங்கிணைப்பு  செய்வோர்  கிடைப்பதே அரிது) என்ற சுபாஷிதம் சொல்வது சகஜம். ....

சத்திய சோதனை- 3(20-23)

மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவை யாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால், நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால், இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பொருளை ஒரு கணமேனும் தரிசித்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்த சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும்.....

சிவகளிப் பேரலை- 98

சிவானந்த லஹரி என்ற திருப்பெயரில் அமைந்த, 100 கவிதைகள் கொண்ட, சிவானுபூதி நல்கும் அற்புதமான இந்த பக்தி இலக்கிய நூலைப் படைத்திட்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த 98-வது கவிதையிலே, மிகச் சிறந்த இந்த கவிப் பொக்கிஷத்தை, தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டையும் தமது உடுக்கை ஒலியின் மூலமே மொழிந்து, மொழிகளுக்கும் அதிபதியாக விளங்கும் பசுபதிக்கே அர்ப்பணம் செய்கிறார். ....

விடுதலைப் போரில் அரவிந்தர் -3

‘இந்தியா மஜ்லிஸ்’ என்பது இந்திய மாணவர்களுக்கான அமைப்பு. ஆரம்பத்தில் அது சோசியல் கிளப் போல தொடங்கப்பட்டாலும் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சந்திக்கும் இடமாகியது. இந்திய அரசியல் பற்றிய கருத்துரைகளும் வாதப் பிரதிவாதங்களும்  நடக்கும் இடமானது. அனல் பறக்கும் பேச்சுக்களும் கடுமையான மோதல்களை வெளிப்படுத்தும் அரசியல் விவாதங்களும் அங்கு தொடர்ந்து நடந்து வந்தன. அரவிந்தரும் அந்த விவாதங்களில் கலந்துகொண்டு ஆவேசமாகப் பேசியுள்ளார். அப்போது அவர்  ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற ரகசிய அமைப்பில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக உழைக்க சபதம் எடுத்துக் கொண்டார். அவருடைய கருத்துக்கள் மிகவும் தீவிரமான அரசியலையும் ஆங்கிலேய அரசு எதிர்ப்பையும் வெளிப்படுத்தின. அந்த அமைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனாலும் ஆங்கில அரசு அதைக் கண்காணித்து வந்தது.....

சிவகளிப் பேரலை- 97

     முந்தைய ஸ்லோகம் போலவே இந்த ஸ்லோகத்திலும், மனத்தை மதம் பிடித்த யானையாக உவமானம் செய்துள்ள ஸ்ரீ ஆதிசங்கரர், அந்த மனவேழத்தைக் கட்டுப்படுத்த இறைவன் மீதான பக்தியே சிறந்த கயிறு என்பதையும், அவரது அருளே அந்தக் கயிறு அவிழ்ந்துவிடாமல் இறுகக் கட்டிவைக்கப் பயன்படும் நிலைத்தூண் என்பதையும் விளக்குகின்றார். ...

தமிழில் எழுத்துக் குறை

ப்ரெஞ்ச், இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் – உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகர்யப் படுத்திக் கொள்ளுகிறர்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்....