சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்....
Month: June 2022
சத்திய சோதனை- 2(6-10)
சுமார் மூன்று மணிக்கு வண்டி, பார்டேகோப் என்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இப்பொழுது, தலைவர் நான் உட்கார்ந்திருந்த இடத்தில், தாம் உட்கார்ந்து கொள்ள விரும்பினார். சுருட்டுப் பிடிக்க விரும்பியதோடு, கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கவும் அவர் விரும்பியிருக்கக் கூடும். ஆகவே, வண்டியோட்டியிடமிருந்து ஓர் அழுக்குக் கோணித் துண்டை எடுத்து, வண்டியில் ஏறும் கால்படி மீது அதை விரித்தார். பிறகு என்னைப் பார்த்து “சாமி இதன் மீது நீர் உட்காரும். வண்டியோட்டியின் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்” என்றார். இந்த அவமதிப்பை என்னால் சகிக்க முடியவில்லை. “என்னை உள்ளே உட்கார வைக்க வேண்டியிருந்தும் நீர்தான் என்னை இங்கே உட்கார வைத்தீர். அந்த அவமதிப்பையும் சகித்துக் கொண்டேன். இப்பொழுது நீர் வெளியே உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்புவதற்காக என்னை உமது காலடியில் உட்காரச் சொல்கிறீர். அப்படி உட்கார மாட்டேன். ஆனால், உள்ளே வேண்டுமானால் உட்காரத் தயார்” என்று பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் கூறினேன்.
இவ்விதம் நான் தட்டுத் தடுமாறிச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர் என்னிடம் வந்து, என் கன்னங்களில் ஓங்கி அறையத் தொடங்கினார். என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளவும் முயன்றார். வண்டியின் பித்தளைக் கம்பிகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். மணிக்கட்டுகளின் எலும்புகள் முறிந்தாலும் பிடியை மாத்திரம் விடுவதில்லை என்று உறுதிகொண்டேன். அவர் என்னைத் திட்டி, இழுத்து அடிப்பதும் நான் சும்மா இருப்பதுமாகிய அக் காட்சியைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ பலசாலி, நானோ பலவீனமாவன். பிரயாணிகளில் சிலருக்கு இரக்கம் உண்டாயிற்று.
....உயிரின் ஒலி
ஸ்ரீமான் ஜகதீச சந்திரவஸு சொல்லுகிறார்:- “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்; அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால், ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்கிறார்....
இலக்கிய தீபம் – 10
கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்ததும் பண்டைகாலத்துச் சான்றோர்கள் இயற்றியதுமான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமாமென்பது தெளிவு. நச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளா ரென்பது 'இது கடவுள்வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுங் கீழ்க் கணக்கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிருந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக்காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 9
பாகிஸ்தான் எல்லையோரக் கிராமமொன்றில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சோதி, போரின் காரணமாக தில்லிக்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர். வரட்டி அடுப்பில் சுண்ட சுண்டக் காய்ச்சிய பாலைக் குடித்த நிலை மாறி, டில்லிக்கு வந்தபிறகு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் வாங்கிய நிலையை நினைவுகூரும் இவர், பின்னர் அதுவும் மாறி இரண்டு கி.மீ. நடந்து போய் வரிசையில் நின்று பால் வாங்கியதையும் அதுவும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் நினைவு கூர்கிறார். இவர் இன்று உலக பால் உற்பத்தி ஃபெடரேஷனின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பால் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் அனுபவத்தில் அறிந்தவர் இவர்.....
பாரதியின் ஞானப்பாடல்- 8
“நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பிரதிபலிக்கும் கவிதை இது..
சிவகளிப் பேரலை- 28
எங்கேயோ தேடி அலைந்து கொண்டிருக்காமல், உள்ளத்தை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, அவரது நினைப்பிலே தோய்ந்து இங்கேயே ஜீவன் முக்தியை, அமர நிலையை எய்திவிடலாம். மகாகவி பாரதியார், “மண்ணில் வானம் காணலாம்”, “எல்லோரும் அமரநிலை எய்தலாம்” என்றெல்லாம் கூறியதன் பொருள் இதுவே....
நடைபாதையில் ஞானோபதேசம்
எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஏற்றம் தந்தவர் அமரர் ஜெயகாந்தன். தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது தாக்கம் மிகவும் பெரியது. ஆரம்பத்தில் இடதுசாரியாக இருந்த அவர் பின்னாளில் கனிந்த தேசியவாதியானார். ஆனால், பின்னாளில் தானே ஏற்றுக்கொண்ட விரதம் காரணமாக அவரது பிற்காலச் சிந்தனைகள் அதிக அளவில் எழுத்துவடிவம் பெறவில்லை. திரைத் துறையிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்; அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமல் தனது மனசாட்சிப்படி பேசியவர்; எழுத்துகளால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன். ஞானபீடம் (2002), சாஹித்ய அகாதெமி (1972) விருதுகளைப் பெற்றவர்.அவரது சொந்த அனுபவம் இங்கு சிறுகதை வடிவில் பதிவாகிறது....
பாரதியின் ஞானப்பாடல்- 7
யமபயமே அச்சங்களில் முதன்மையானது. அதனையே எள்ளி நகையாடும் கவிதை இது. மரண அச்சம் அற்றவர்களுக்கே விடுதலை சித்தியாகிறது. எனவே தான் நாட்டின் விடுதலையை நாடிய பாரதி காலனை இக்கவிதையில் மிரட்டுகிறார்...
சிவகளிப் பேரலை – 27
கடவுளுக்கு நம்மிடம் உள்ளதைக் காணிக்கையாகத் தருவதைவிட, நமது உள்ளத்தையே காணிக்கை ஆக்குவதே மிகச் சிறந்தது. கடவுளுக்கு நாம் பொருளைப் படைத்தால், அந்தப் பொருள் அவன் படைத்ததுதானே? நாம் உழைத்துச் சேர்த்த பொருள், ஆதலால் நமது என்று கருதலாமே என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, சகல ஐஸ்வர்யங்களையும் வைத்திருக்கும் பரமேஸ்வரன் முன் இது மாத்திரம்?
யோகா: பாரதியார் பார்வையில்…
அடிமைப்பட்டிருந்த பாரத நாட்டில் மக்களுக்கு தன்னுடைய கவிதை / கட்டுரை / ஊடகப் பணி போன்ற எத்தனையோ வழிகளில் சுதந்திர வேட்கை ஊட்டியபடியே வாழ்ந்து மறைந்த (1882 - 1921) பாரதியாரைத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரிகிறது. ரிஷி முனிவர்கள் மனிதகுலத்திற்குக் கண்டு சொன்ன யோக சாஸ்திரம் போன்ற எத்தனையோ விஷயங்களை எளிய நடையில் போகிறபோக்கில் பொதிந்து கொடுத்துவிட்டு போயிருக்கிற பாரதியாரை பல பேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ...
பாரதியின் ஞானப்பாடல் – 6
“மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?” என்ற அற்புதமான மந்திரச் சொற்கள் அடங்கிய கவிதை இது...
சிவகளிப் பேரலை- 26
இறைவனின் திருவடிகளே இன்பத்தின் எல்லை. பக்தனுக்கு பகவான் பாத சேவையே பரமானந்தம். பேரருளாளனைச் சரண் புகுந்தபின் பேரின்ப மயந்தானே! எதிரிகளால் சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட சமயத்தில்கூட, “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டுறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று பாடினார் அப்பர் பெருமான். அதனால் எதிரிகளின் கொடுமைகளால் வெந்துபோகாமல் வெளிவந்தார் அவர். அப்பேர்பட்ட மகிமை வாய்ந்தவை சிவபெருமானின் திருப்பாதங்கள்....
பசு
பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால் மாத்திரம் போதுமா?...
தெலுங்க மஹா சபை
ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று......