ஆங்கிலேயர்:- இந்த யுத்தம் முடிந்த பிறகு ஐரோப்பாவிலே என்ன மாறுதல்கள் தோன்றும்? தராசு:- தொழிலாளிகளுக்கும், ஸ்திரீகளுக்கும் அதிக அதிகாரம் ஏற்படும். வியாபாரிகளுக்குக் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். கிழக்குத் தேசத்து மதக் கொள்கைகள் ஐரோப்பாவிலே கொஞ்சம் பரவலாம்.
Author: vamumurali
காலங்களில் அவள் வசந்தம்
காதலியை வர்ணிக்கும் காதலனின் இதயமாக கவிஞர் மாறுகையில், “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதும்கூட இனிய பதிவாகிறது. “உலகில் சிறந்தது எல்லாம் எதுவோ அது நானே” என்பார் கிருஷ்ண பரமாத்மா. இங்கு, சிறந்ததாக தான் கருதும் வசந்த காலமும், ஓவியக் கலையும், மார்கழி மாதமும், மல்லிகை மலரும் காதலியையே நினைவுபடுத்துகின்றன, தமிழ்க் காதலரான கவியரசர் கண்ணதாசனுக்கு… மடியில் விளையாடும் மழலையாகவும், தழுவும் கன்னியாகவும், கண்போல் வளர்க்கும் அன்னையாகவும் காதலியைக் காணும் ஆணை காதலனாகப் பெற்ற பெண், புண்ணியம் செய்தவள்!
அபயம்
காரணம் இல்லாமல் மகாகவி பாரதி எதுவும் எழுதவில்லை. இக்கதையை ஏன் எழுதியிருப்பார்?
அண்டங்காக்கையும் அமாவாசையும்
நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா, “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு 'பொன்' குஞ்சு.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(1)
அமரர் திரு. தஞ்சை.வெ.கோபாலன், திருவையாறில் ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தியவர்; தேசபக்தி மிளிரும் எழுத்தாளர். ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரியான இவர் நமது தேசமே தெய்வம் இணையதளத்தில் எழுதிய தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் ஆகிறது. இத்தொடர் நமது நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஆஹூதியாக்கிய மாவீரர்களின் சரித்திரத்தை சுருக்கமாக விவரிக்கிறது. இத்தொடர் வாரம் இரு முறை நமது தளத்தில் வெளியாகும்.
தராசு கட்டுரைகள்- 8
தராசு சொல்லுகிறது:- புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்திரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவையன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதைகளும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின்றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அம்சங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழிகாட்டி, தர்மநியதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்பதால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்....
சத்திய சோதனை- 4 (21-25)
குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.....
இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!
இந்தியாவில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்யர், குருநானக், புத்தர், மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை, மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....
அர்ஜுன சந்தேகம்
ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.
மகாவித்துவான் சரித்திரம்- 1(22)
அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....
தராசு கட்டுரைகள்- 7
மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். ...
எனது முற்றத்தில்- 21
சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்....
குதிரைக் கொம்பு
மகாகவி பாரதி காலத்திலேயே ஹிந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் எழுதி தூஷிக்கும் கும்பல் இருந்தது. இன்று தமிழகத்தில் இருக்கும் நாத்திகக் கும்பலின் தொடக்கம் அது. அநேகமாக மகாகவி பாரதி அயோத்திதாச பண்டிதரின் புளுகுமூட்டைகளைப் படித்திருப்பார் போலிருக்கிறது. ‘குதிரைக்கொம்பு’ என்னும் இந்தச் சிறுகதை வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும், இப்படிச் சிந்திக்கும் முட்டாள்களும் இருப்பதையே பாரதி பகடியாகப் பதிவு செய்திருக்கிறார்....
கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…
கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...
தராசு கட்டுரைகள்- 6
தராசு சொல்வதாயிற்று:- தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்க வேண்டும்.