-கவியரசு கண்ணதாசன்

கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...
கங்கை…
யமுனை…
இங்குதான்…
சங்கமம்…
ராகம்…
தாளம்…
மோகனம்…
மங்கலம் (2)
அங்கயற்கண் மங்கல நாயகி
பூப்போல் மெல்லச் சிரித்தாள்! (2)
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லிச் சிரித்தாள் (2)
கங்கை…
யமுனை…
இங்குதான்…
சங்கமம்…
ராகம்…
தாளம்…
மோகனம்…
மங்கலம்…
ஊர்கோல மேகங்கள்
தாலாட்டுப் பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன? (2)
கார்காலம் மாறாமல்
கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன? (2)
கங்கை…
யமுனை…
இங்குதான்…
சங்கமம்…
ராகம்…
தாளம்…
மோகனம்…
மங்கலம்…
செந்தூர மைவண்ணம்
சிந்தாமல் சிதறாமல்
சந்தோஷம் கொண்டாடும் கைகள் இங்கே! (2)
செவ்வாயில் தேனுண்டு
ஸ்ருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே! (2)
கங்கை…
யமுனை…
இங்குதான்…
சங்கமம்…
ராகம்…
தாளம்…
மோகனம்…
மங்கலம்…
அங்கயற்கண் மங்கல நாயகி
பூப்போல் மெல்லச் சிரித்தாள்!
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லிச் சிரித்தாள்!
கங்கை…
யமுனை…
இங்குதான்…
சங்கமம்…
ராகம்…
தாளம்…
மோகனம்…
மங்கலம்…
திரைப்படம்: இமயம் (1979) இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்.