ஸ்வதந்திர கர்ஜனை – 2(13)

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது லாகூரில் ஒரு மாபெரும் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றார் லாலா லஜபதி ராய் என்பதை முன்பே பார்த்தோமல்லவா? அந்த ஊர்வலத்தைத் தடிகொண்டு தாக்கிய சார்ஜண்ட் ஜான் சாண்டர்ஸ் என்பான் லாலாஜியை கண் மண் தெரியாமல் மார்பில் அடித்ததில் அவர் உயிருக்குப் போராடி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் கொடுமையை அறிந்த, அப்போது லாகூர் பல்கலைக் கழகத்தில் தேசிய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பகத் சிங், சுக்தேவ் தாபர், சந்திரசேகர ஆசாத், ஷிவ்ராம் ராஜகுரு எனும் நான்கு மாணவர்கள் லாலாஜியைக் கொன்றதற்கு பழிவாங்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

சுவாமி விவேகானந்தர் பார்வையில் மதமாற்றம்

பூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரம்பரையில் வந்த துறவி;  சுவாமி மதுரானந்தரிடம் தீட்சை பெற்றவர். குமரி மாவட்டம், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் தலைவர். குமரி மாவட்டத்தில் மாபெரும் ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுவாமிஜி,  தமிழகம் முழுவதும் ஹிந்து சமய வகுப்புகளை  - அதற்கென ஒரு பாடத்திட்டம் உருவாக்கி -  நடத்தி வருகிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இனிய கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம்- 1.2.3

மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...

இந்தியாவின்   ‘பீம ஸ்மிருதி’

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) என்ற அரசு சார் அமைப்பின் தலைவரான திரு. ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது…

அன்பு, அறிவு, ஆற்றலின் உருவம் சுவாமி விவேகானந்தர்

பூஜ்யஸ்ரீ சுவாமி சந்திரசேகரானந்தர், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் துறவி. தேவிப்பட்டினத்தில் உள்ள தபோவன மடத்தின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திக் கொண்டாட்டத்தின் போது இவர் எழுதிய கட்டுரை இது….

பாஞ்சாலி சபதம் – 1.2.2

அஸ்தினாபுரம் விஜயம் செய்த பாண்டவர்களை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற காட்சியை மகாகவி வர்ணிக்கும்போதே, பாண்டவர்பால் மக்களுக்கு இருந்த அன்பு புலனாகும். மன்னரையும் உறவினர்களையும் குருவையும் பிதாமகரையும் வணங்கிய பின் ஓய்வுக்குச் செல்கின்ரனர் பாண்டவர்கள், வரபோகும் துயரை அறியாமல்...

மகாவித்துவான் சரித்திரம் – 2(7ஆ)

தமிழ்ப் புலமையில் மன்னரான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள், எளியவர்பால் இரங்கும் தன்மையும், நகைச்சுவை உனர்வும் மிகுந்தவர் என்பதை அவரது சரித்திரத்தை எழுதிய அவரது முதன்மை மானவர் உ.வே.சா. வாயிலாக அறிகிறோம். இந்த அத்தியாயம், மகாவித்துவா அவர்களின் கருணைக்கு ஒரு சிறு சான்று...

விழிமின்… எழுமின்…

உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் தலைவரான பூஜ்யஸ்ரீ சுவாமி அனந்தானந்தர், சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரை இது...

பாஞ்சாலி சபதம் – 1.2.1

கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...

ஸ்வதந்திர கர்ஜனை – 2(12)

முந்தைய ஆண்டில் (1928) கல்கத்தாவில் நடந்த காங்கிரசுக்கு மோதிலால் தலைவர், அடுத்த ஆண்டின் (1929) தலைவர் அவர் திருமகனார் ஜவஹர்லால் நேரு. அதுவரை காங்கிரசுக்குத் தலைமை தாங்கியவருள் ஜவஹர்லால் தான் வயதில் மிகவும் இளையவர். லாகூர் காங்கிரசில் தந்தையிடமிருந்து தலைமைப் பொறுப்பை அவர் மகன் ஜவஹர் வாங்கிக் கொண்ட காட்சியை பொதுமக்கள் அதிகம் விரும்பி ரசித்தனர்.

என்றும் இந்தியாவுக்கு வழிகாட்டி

கோவையைச் சார்ந்த தொழிலதிபரும், கல்வியாளரும், கோவை பாரதீய வித்யாபவன் தலைவருமான முனைவர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் சுவாமி விவேகானந்தர் குறித்து 2012-இல் எழுதிய கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம் – 1.1.27

அஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு சோலையின்கண் வில்விஜயன் பாஞ்சாலியுடன் தனித்திருக்கிறான். அப்போது வானில் தோன்றிய வண்ண ஜாலங்களை, இயற்கையின் வனப்புகளை வியந்து பேசுகிறான். வண்ணத் தீறல்களாய் வானம் காட்டும் அழகிய காட்சிகளை விவரிக்கும் விஜயன், பச்சை வட்டமாய் மின்னும் கதிரவனைக் காட்டுகிறான். அது ஒரு அழகிய அறிவியல் சொல்லாட்சி. இறுதியில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவை தனது கவிதையில் புகுத்துகிறார் மகாகவி பாரதி. 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக' என்று ஞாயிற்றைப் புகழ்கின்றனர் இருவரும். விதிவழிப்பயணம் தொடர்கிறது...

பரமசிவன் கழுத்தில் இருந்து…

இல்லறம் என்பது இரட்டைத் தண்டவாளம் போன்றது. இதில் ஆண்- பெண் இருவரிடையே தனிப்பட்ட அகந்தை வருவது குடும்ப நலனுக்கு நல்லதல்ல. இதனை அழகாக வெளிப்படுத்திய படம் சூரியகாந்தி. குடும்பநலனுக்காக பெண்கள் தங்களை அர்ப்பணித்து பணிபுரிவதை ஏற்கத் தயங்கும் ஆண்கள் இப்போதும் உண்டு, அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்படத்தில், கவிஞர் கண்ணதாசனே ஒரு கதாபாத்திரமாக வந்து இப்பாடலைப் பாடுகிறார். அற்புதமான சிந்தனையுடன் கூடிய இப்பாடல் காலத்தை வென்று வாழும் திரைக் கவிதை....

தேவை ஒரு சரியான சிந்தனை

தஞ்சையிலுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான முனைவர் திரு. எஸ்.வைத்யசுப்ரமணியம் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இங்கே…

பாஞ்சாலி சபதம் – 1.1.26

அஸ்தினாபுர மன்னரின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் அரசுமுறைப்படி பரிசுப்பொருள்கள், படைகள் சூழ இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பிச் செல்கின்றனர். ‘நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்’ என்று, இதனை மன விரக்தியுடன் சொல்கிறார் நூலாசிரியரான மககவி பாரதி...