-மகாகவி பாரதி
கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2.1. வாணியை வேண்டுதல்
தெளிவுறவே அறிந்திடல்; தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல், கண்ணீர்த்
துளி வளரஉள் ளுருக்குதல்,இங் கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ் வாணீ! அடியனேற்
கிவையனைத்தும் உதவு வாயே! 154
$$$