-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?
ஆதியிலிருந்த இருளை நினைந்து
ஆனந்தமாய் விளக்கேற்று.
கோதை நாயகன் புகழைப் பாடி
கோலமிட்டுக் கொண்டாடு!
.
தவபூமி தழைத்தோங்க
விரதமிருந்து விளக்கேற்று.
நவபூமியானாலும் உலகின்
தலைபூமியெனக் கொண்டாடு!
.
சங்கு சக்கரக் கரத்தோனை
சரண்புகுந்து விளக்கேற்று.
பொன்னுலகம் அருகிலென்று
சங்கம் முழங்கக் கொண்டாடு!
.
அறம் காத்த அவதாரங்கள்
அனைத்திற்கும் விளக்கேற்று.
கலியுகக் கல்கி நீயென்றே
புவியதிரக் கொண்டாடு!
$$$
One thought on “ஆனந்தமாய் விளக்கேற்று! (கவிதை)”