-கவியரசு கண்ணதாசன்
ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை…
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு!
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு!
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி!
இது போன்ற ஜோடி இல்லை…
இது போன்ற ஜோடி இல்லை
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை…
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்!
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்!
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது!
இதில் மூடும் திரைகள் இல்லை…
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை…
மணம்… குணம்… ஒன்றான முல்லை!
திரைப்படம்: மயங்குகிறாள் ஒரு மாது (1975) இசை: விஜயபாஸ்கர் பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
$$$