’பாஞ்சாலி சபத’த்திற்கு பாரதியார் எழுதிய சமர்ப்பணத்தின் பின்வரும் பகுதி, தமிழின் சிரஞ்சீவித் தன்மையில் அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: "தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கு"....
Month: July 2022
பாரதியின் தனிப்பாடல்- 9
மகாகவி பாரதியின் தனிப் பாடகளில் 9வது கவிதை, அழகுத்தெய்வம் மீதானது....
சிவகளிப் பேரலை- 57
சிவபெருமானின் மகிமையைக் கூறும் ஆனந்தத் தாண்டவத்தை மனக் கண் முன்னர் பக்தர்கள் காண்பது, அவர்களது முற்பிறவிப் பயனால்தான் அமைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டதும் இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இறைவனிடமே அருள் புரிய இறைஞ்ச வேண்டும் என்பதை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். சாதாரண மனிதரைப்போல் தம்மை பாவித்துக்கொண்டு, நமக்காக இதனை அவர் பாடியுள்ளார்.
பதிவிரதை
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் நாற்றுநடவுத் திருவிழாவும்
உலகத்தில் எங்குமே காண முடியாத முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவும் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவையுடன் பங்கேற்கின்றனர்....
சிவகளிப் பேரலை- 56
ஆடலரசனாகிய நடராஜனின், சிவபெருமானின் பெருமையை இந்த ஸ்லோகமும் எடுத்தியம்புகிறது. ...
பாரதியின் தனிப்பாடல்- 8
ஹாலி என்ற வால் நட்சத்திரம் 1910இல் விண்ணில் தோன்றி மறைந்தபோது மகாகவி பாரதி எழுதிய கவிதை இது... 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தால் உலக அரசியலில் முக்கியமான தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. அதை இக்கவிதையில் சுட்டிக் காட்டி இருக்கிறார் பாரதி. எனினும் இந்த வால் மீனின் வருகையால் எண்ணிலாப் புதுமைகள் விளையும் என்ற நம்பிக்கையையும் விளைக்கிறார் கவிஞர். சித்திகள் பலவும், சிறந்திடு ஞானமும் கூடும் என்ற கவிஞரின் நன்னம்பிக்கை அவரது தன்னம்பிக்கையையே பகர்கிறது...
சத்திய சோதனை- 2(21-25)
இந்திய சமூகத்தின் சேவையிலேயே நான் முற்றும் மூழ்கி இருந்தேன் என்றால், அதற்கு முக்கியமான காரணம், ஆத்மானுபூதியைப் பெற வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த ஆர்வம் தான். சேவையின் மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பதை அறிந்தேன். ஆகையால், சேவையையே என்னுடைய மதம் ஆக்கிக் கொண்டேன். என் அளவில் சேவையென்றால் அது இந்தியாவுக்குச் செய்யும் சேவையே. ஏனெனில் அது தேடாமலேயே எனக்குக் கிட்டியதோடு, அதற்கான மன இசைவும் என்னிடம் இருந்தது. பிரயாணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், கத்தியவாரின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்காகவும், எனக்குப் பிழைப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவுமே நான் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றேன். ஆனால் நான் முன்னால் கூறியதைப் போல, கடவுளைத் தேடுவதில் நான் ஈடுபட்டிருப்பதையும் ஆத்ம ஞானமடையும் முயற்சியில் முனைந்திருப்பதையும் கண்டேன்.
சிவகளிப் பேரலை – 55
சிவபெருமானின் நடனம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது மகான்களின் வாக்கு. அவன்தான் தானும் ஆடி, நம்மையும் ஆட்டுவிக்கிறான். அவனது ஆடல் மகிமையை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது....
பாரதியின் தனிப்பாடல் – 7
நான்கே வரிகள்... இதில் உள்ள பொருளோ மாபெரும் நூலும் உரைக்கவொன்னாதது. மகாகவி பாரதியின் கவிதைகளுள் தனித்து இலங்கும் மந்திரம் போன்ற கவிதை ‘அக்கினிக் குஞ்சு’.
இலக்கிய தீபம் – 15
ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவியென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு-கருவியாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய நுணுக்கப் பொருள்களை யிட்டு வைப்பதற்குரிய சொற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம் படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல. ....
சிவகளிப் பேரலை – 54
முந்தைய ஸ்லோகத்தில் மயிலுக்கும் மகேஸ்வரனுக்கும் சிலேடை அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் இடி, மின்னலுடன் மழை பொழிகின்ற மேகத்தைப் பார்த்ததும் பெண் மயிலுக்கு முன்பாக ஆண் மயில் தோகை விரித்து ஆனந்தமாக நடனமிடுவதுபோல், சந்தியாகாலத்திலே சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். ....
பாரதியின் தனிப்பாடல்- 6
எளியவன் ஒருவனது சின்னஞ்சிறு தென்னந்தோப்பை வீழத்தாமல் கடந்த புயலை வாழ்த்தி, சக்தியின் புகழைப் பாடுகிறார் பாரதி, இக்கவிதையில்....
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்…
ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக எஸ்.பி. சௌத்ரியாக, ‘தங்கப் பதக்கம்’ திரைப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் சிவாஜி கணேசன். படத்தை இயக்கிய மாதவன், திரைக்கதை வசனம் எழுதிய மகேந்திரன், இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் தொழில்பக்தியையும் எடுத்துக்காட்டிய திரைப்படம் அது. காவல் பணியில் நேர்மையாக இருந்த சௌத்ரியின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடும் மகன் பிற்பாடு இளம் குற்றவாளியாகி விடுகிறான். அவன் வீடு திரும்புகையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. தந்தையின் கண்டிப்புக்கும் மகனின் வீம்புக்கும் இடையிலான தாயின் பாசப் போராட்டத்தை கே.ஆர்.விஜயா அற்புதமாகக் காட்டி இருப்பார். “ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்” என்பது போன்ற நம்ப இயலாத, முட்டாள்தனமான நாயக வசனம் பேசாத காவல் துறை அதிகாரியாக சிவாஜி இப்படத்தில் மிரட்டி இருப்பார். அதனால் தான் இப்படம் இன்றும் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது. உறவுகளின் சிக்கலில் சின்னாபின்னமாகிறது சௌத்ரியின் குடும்பம். இறுதியில் மனம் திருந்தாமல் தேசத்துரோக்க் குற்றத்தில் ஈடுபடும் தனது மகனை தானே சுட்டுக் கொல்கிறார் எஸ்.பி. சௌத்ரி. அதற்காக அரசின் தங்கப் பதக்கம் அவருக்கு வழங்கப்படுகிறது. படம் பார்க்கும் நமக்கு கண்களில் நீர் திரையிடுகிறது. இத் திரைப்படத்தில், தனது மகனின் பிறந்த நாளில் அன்னையும் தந்தையும் பாடும் இனிய பாடல் இது. திரைக்கதையின் ஓட்டத்தை உணர்ந்து, விதியின் பாதையை பூடகமாகக் கூறிவரும் பாடலும் கூட. அன்னையும் தந்தையும் எத்துணை பாசத்துடன் தனது மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கனவாகக் காண்கிறார்கள் என்பது இப்பாடலில் காட்டப்படும்போதே, பின்னாளில் நிகழ உள்ள அபத்தமான திருப்பங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். கவியரசு கண்ணதாசனின் இனிய திரைப்பாடல்களுள் ஒன்று இது.
சிவகளிப் பேரலை – 53
மல்லிகையையும் அதனை விரும்புகின்ற வண்டையும் அடுத்தடுத்து சிவபெருமானுக்கு சிலேடையாக அமைத்துப் பாடிய ஸ்ரீஆதிசங்கரர், அடுத்தபடியாக மேகத்தையும் அதனை விரும்புகின்ற மயிலையும் சிவபெருமானோடு இணைத்து இரட்டுற மொழிந்துள்ளார். ....