பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை...
Month: June 2022
காற்றிடைச் சாளரம் – 9
கவிஞரின் எளிய கவிதை... அரிய பொருளுடன்...
பாரதியின் ஞானப்பாடல் – 13
“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்”- மாயையான இந்த உலகை இதைவிட எளிதாக ஒரு வரியில் விளக்கிவிட முடியாது. மகாகவி பாரதியின் அறிவுச் சமநிலை இயைபின் (ஞானயோகம்) அற்புதமான வெளிப்பாடு இக்கவிதை....
சிவகளிப் பேரலை – 33
சிவபெருமானை பூஜிப்பது மிகவும் சுலபம். ஒரு வில்வ தளமோ அல்லது எருக்கம்பூவையோ எடுத்து சிவார்ப்பணம் என்று பூஜித்தாலே மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியவர் சிவபெருமான். எல்லாம் வல்ல பெரியாண்டவன் எளிய வழிபாட்டுக்கே இறங்கிவரும்போது ஏன் வேறு பொய்த் தெய்வ வழிபாடுகளுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று வினவுகிறார் ஆதிசங்கரர்...
வீடுவரை உறவு…
பாதகாணிக்கை திரைப்படத்தில் கவியரசர் எழுதிய, சோகம் கலந்த அற்புதமான தத்துவப் பாடல்...
பாரதியின் ஞானப்பாடல் – 12
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
சிவகளிப் பேரலை – 32
சிவபெருமான் நஞ்சுண்ட தியாக வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனார், தனது தேவாரப் பாடல் ஒன்றில் இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்: “கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளர வுசுற்றிக் கடைந்தெழுந்த, ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த, சீலங் கண்டு நின்திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே”.
இலக்கிய தீபம் – 11
அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புற நானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச்செயல்கள் புறநானூற்றில் (87-95; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. ....
பாரதியின் ஞானப்பாடல் – 11
ஈசனும் தானும் ஒன்று என்ற அத்வைதப் பேரனுபவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை இது. சிவோஹம்- நானே சிவம் என்பதை உணர்ந்தவர் ஈசனை அறிகிறார். ஈசன் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கிறார்.
சிவகளிப் பேரலை- 31
உலகம் காக்க விடம் உண்ட சிவபெருமானின் தியாகத்தால் அவரைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், மணிமிடற்று அண்ணல் (குன்றம்பூதனாரின் பரிபாடல் பாட்டு), காரிஉண்டிக் கடவுள் (பெருங்கௌசிகனாரின் கூத்தராற்றுப்படை) என்று போற்றுகின்றன.
எனது முற்றத்தில் – 7
....வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன் சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!...
பாரதியின் ஞானப்பாடல்- 10
இக்கவிதை நாத்திகக் கவிதை போல தோற்ற மயக்கம் தருவது; உண்மையில் வேதாந்தத்தின் தெள்ளிய விளக்கமாக அமைந்த அரும்பெரும் கவிதை இது. அறிவே தெய்வம் என்பது, பிரம்மவாதிகளின் கொள்கை. அது ஈசனை விலக்கவில்லை; ஞான வடிவானாவன் ஈசன் என்கிறது...
சிவகளிப் பேரலை- 30
சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்?....பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். ...
மனித யந்திரம்
அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...
பாரதியின் ஞானப்பாடல்- 9
இக்கவிதையும் மாயையைப் பழிக்கும் வீரக் கவிதை!