பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை; துலாக்கோல் நிலை நின்று, விருப்பச் சார்பின்றி, தமிழ் இலக்கியங்களின் காலம் குறித்த முறையான ஆய்வுகளை வெளியிட்டவர்; தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும், பதிப்புப் பணியிலும் முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ்ப் பேரகராதியை உருவாக்கிய மேதை, கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட, தமிழன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவர். அவரது ‘இலக்கிய தீபம்’ என்ற அற்புதமான ஆய்வு நூல் இங்கு தொடர்ச்சியான அத்தியாயங்களாக வெளியாகிறது...
Month: May 2022
ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்- நூல் அறிமுகம்
அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.
இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில், ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.
சக்தி மீதான பாடல்கள்- 3
மகாவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்தி குறித்த மூன்று கவிதைகள் (27, 28, 29) இவை...
கபாடபுரம்
சந்திரோதயம் இதழில் புதுமைப்பித்தன் எழுதிய தொடர் சிறுகதை இது... புதுமைப்பித்தனின் புனைவுத் திறனும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் போட்டியிடுகின்றன...
சக்தி மீதான பாடல்கள் – 2
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்தி குறித்த மேலும் இரு பாடல்கள் இவை....
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 4
தொழில் புரட்சியைப் போல யோகா ஒரு உலகப் புரட்சியை உருவாக்கி வருகிறது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், இரண்டின் ஒருங்கிணைப்பு, அமைதி போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இயற்பியல் உலகு என்பது மாறி உணர்வை (Conscious) அடிப்படையாகக் கொண்ட பார்வை வளர்ந்து வருகிறது. இதற்கு டாக்டர் நாகேந்திராவின் பங்களிப்பு முக்கியமானது.
சத்திய சோதனை 1(6-10)
என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்..... அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது....
வந்தேமாதரம்
மகாகவி பாரதி, ‘வந்தேமாதரம்’ கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரை இது...
எனது முற்றத்தில்… 2
எல்லா மரம் செடி கொடிகளையும் எல்லோருக்கும் அடையாளம் காண முடிகிறதா என்ன? ராமாயணத்தில் அனுமனுக்கும்தான் தெரியவில்லை. அதனால்தானே சஞ்சீவி பர்வதத்தையே தூக்கிக்கொண்டு போனார்? ஊர்ப்புறங்களில் தடுக்கி விழுந்தால் எருக்கஞ்செடி, தும்பை, குப்பைமேனி தலைகாட்டும். எல்லாம் மருந்துக்கு ஆகும். மருந்துக்கு ஆகாதது என்று ஏதாவது உண்டா என்ன? இல்லை என்கிறது "நாஸ்தி மூலம் அனவ்ஷதம்" (ஔடதத்துக்கு ஆகாத வேர் இல்லை) என்ற பழைய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. தகுதி இல்லாதவர் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்த வந்த ஸ்லோகம் அது....
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
மகாகவி பாரதியின் சக்தி மீதான இப்பாடல், அவரது ஆத்ம சமர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த உடலும் உயிரும் வாழ்வும் சக்தியின் லீலை என்ற கவிஞரின் சிந்தனை சொற்பெருக்கில் தெறிக்கிறது...
சாந்திக்கு மார்க்கம் – 4
எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலியவரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கட்சிக்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.
சக்தி மீதான பாடல்கள்-1
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் பராசக்தி மீதானவை மிகுதி. அவற்றில் 18 முதல் 23 வரையிலான பாடல்கள் இங்கே...
போரும் அமைதியும் அரவிந்தரும்
பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர் ஸ்ரீ அரவிந்தர்.... ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா?
மஹா சக்தி வெண்பா
மகாகவி பாரதி, வெண்பா வடிவில் மஹா சக்தியைப் பாடிய பாடல் இது... அவரதி பக்திப் பாடல்களில் 17வது கவிதை இது...
குளத்தங்கரை அரசமரம்
சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது. அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதைக் கவனிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் கால இந்தியாவில், தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. படித்து முடிக்கும்போது மனபாரம் தாங்காமல் ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. இத்துணை விசாலமான பார்வை கொண்ட வ.வே.சு. ஐயரையா நமது தமிழகத்தில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக கரித்துக் கொட்டினர் என்பதை நினைத்தாலே, ருக்மிணிக்காக அரசமரம் அடைந்த விசாரம், நமக்கும் எழுகிறது...