-வ.உ.சிதம்பரம் பிள்ளை 7. பூரண சாந்தியை அடைதல் புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கின்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது. மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன. மிக மிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன … Continue reading சாந்திக்கு மார்க்கம் – 7
Day: May 17, 2022
சிவகளிப் பேரலை – 2
பல்லாயிரம் ஆண்டுகளாக பக்தகோடிகளால் உரைக்கப்பட்டு வருகின்ற சிவலீலை எனப்படும் சிவன் சரிதம் என்ற ஆற்றிலிருந்து பாய்ந்து வரக்கூடிய சிற்றோடையாக இந்த நூலை உருவகப்படுத்தியுள்ளார். மனிதர்களின் பாவங்களை அழிப்பதுடன், அவர்களைப் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கும் மாமருந்தாகவும், அதற்கான அறிவைத் தருவதாகவும் விளங்கும் இந்த நூல், இதனைப் படிப்போர் சிந்தையில் தங்கி, அவர்களுக்குப் பயன் தரும் என்பதையும் உணர்த்தியுள்ளார்....
திருமகள் மீதான பாடல்கள்
மகாகவி பாரதியின் பக்திப்பாடல்களில் திருமகள் மீதான நான்கு பாடல்கள் (56- 59) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. செல்வத்தின் மகிமையை வெளிப்படுத்தும் கவிதைகள் இவை...