சத்திய சோதனை 1(11-15)

ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும் ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன். இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ‘ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட்’ என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.....

சிவகளிப் பேரலை – துவக்கம்

பல புராணச் செய்திகளிலும், கதைக் கருத்துகளிலும் உள்ளீடாக விளங்கும்  சிவ பரம்பொருளின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கரர் அருமையாக 100 ஸ்லோகங்களில் விண்டுரைத்த நூல்தான் சிவானந்த லஹரீ. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். லஹரீ என்றால் பேரலை என்று பொருள். எங்கும் மங்களத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகின்ற சிவ பக்திப் பிரவாகம்தான் சிவானந்த லஹரீ.

இந்த சிவானந்த லஹரீயிலே மகாகவியாகப் பொழிந்திருக்கிறார் மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். உவமை, உருவகம், சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி என பல அணிகலன்கள் இதனை அலங்கரிக்கின்றன. சொல்நயமும், பொருள்நயமும் படிப்போர் மனங்களைப் பரசவப்படுத்தி பரமானந்த நிலையை எய்தச் செய்கின்றன.

இதனை அருந்தமிழில் ‘சிவகளிப் பேரலை’யாக தமிழாக்கம் செய்து, விளக்கத்துடன் தமிழ்க் கவியும் புனைந்து வழங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் பத்மன்....

செல்லம்மாள்

சாமானியனுக்கு வாழ்க்கையே போராட்டம் தான். அன்றாடம் வேலை செய்தால் தான் வயிற்றுக்குச் சோறு என்ற நிலையில் வாழ்வோரின் ஆரோக்கியம் கெட்டால், அவர்களது வாழ்வே நித்தமும் நரகம் தான். அத்தகைய நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் நடத்தும் இரு சாமானிய ஜீவன்களின் கதை இது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் ஆங்காங்கே தூலமாய்த் தெரியும் இக்கதையில், வறுமையின் கோரம் மிகத் தெளிவாகவே வெளிப்படுகிறது. புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் முத்திரைக் கதையாக இக்கதை கொண்டாடப்படுவது ஏன் என்று, இதைப் படிக்கும்போதுதான் உணர முடியும். ஹூஊம்....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 5

பிரம்மகுமாரிகள் அமைப்பினர் தரும் பயிற்சிக்கு ராஜயோகப் பயிற்சி என்று பெயர். கல்லூரிப் படிப்பின் துவக்கத்திலிருந்தே அந்தப் பயிற்சியைப் பெற்று பழகி வந்த ஷிவானி வர்மாவின் வாழ்வில் 2004-இல் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அவர் தன் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம், தனக்கென ஒரு பணி இருப்பதை உணர்ந்தார். தன்னை ஆன்மாவாகவும், பேரான்மாவாக இறைவனின் இருப்பையும் உணர்ந்தார்.....

கண்ணன் மீதான பக்திப் பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணன் மீதான பாடல்கள் (45- 51) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ பாடல் மிகப் புகழ் பெற்ற இசைப்பாடல்.