ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும்...
Day: May 26, 2022
உடம்பு
இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவை பரமாத்மாவினால் நியமிக்கப்பட்டன. ராமன், கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித் துறவு கொள்ளவில்லை. ஆனால், இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது. அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து அனுபவிக்க வழியில்லாமற் போய்விடும். அறிவுதான் ராஜா; மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கி வாழவேண்டும்; இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும்.... . சுதேசமித்திரனில் (1916) வெளியான மகாகவி பாரதியின் கட்டுரை இது...