இலக்கிய தீபம் – 3

கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப் பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவையெல்லாம் உலா வாழ்வு கருதிய (லௌகிகச்) செய்யுட்களாம். பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச்செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாகியுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும்....

முத்துமாரி மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் முத்துமாரியம்மன் மீதான இரு பாடல்கள் இவை...