இலக்கிய தீபம் – 2

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). பத்துப்பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு; இதன் கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக் காஞ்சி; இதன் கண் 782 அடிகள் உள்ளன....இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப்பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பாலதன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு நோக்கம்.

காளி மீதான பாடல்கள்-1

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சக்திக்கு அடுத்து, காளி மீதான கவிதைகள் மிகுதி. அவரது 30-34 பக்திப் பாடல்கள் இங்கே...