சாந்திக்கு மார்க்கம் – 6

விவசாயம் செய்வோன் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்க வேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்....

பக்திப் பாடல்கள் (42 – 44)

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் 42, 43, 44 கவிதகள் இவை... இவற்றில் ‘கோமதி மகிமை’ முற்றுப்பெறாத கவிதை.