செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற்காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படும். பல்வகையவாகிய அணிகளையும் பூண்ட ஒரு மங்கை உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப் பட்டுக் குறுகுறு எனத் திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ள முடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு நடக்கும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுள்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர்; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்பதில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும்; ஆனால் உண்மையினுயர்ந்த ரத்னங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக் கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணிகலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டுவிப்பது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம்...
Day: May 16, 2022
சிவகளிப் பேரலை – 1
எடுத்த எடுப்பிலேயே, தமது மேதாவிலாசத்தால் சிவசக்தி ஸ்வரூபத்தை சிலேடையாகப் புகழ்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். எவ்வாறு சிவ-சக்தி ரூபம், இரண்டற்ற ஒன்றாய் அருள்பாலிக்கிறதோ அதேபோல இந்த முதல் செய்யுள்- சிவன், சக்தி ஆகிய இரு இறையுண்மைகளையும் ஒரே பாட்டால் பாராட்டுகிறது, பணிந்து வணங்குகிறது. பரமசிவன், பராசக்தி ஆகிய இருவருமே கலை வடிவானவர்கள். இருவருமே சந்திர கலையை அதாவது பிறைநிலவைத் தலையில் அணிந்தவர்கள். இதற்கு சங்க இலக்கியத்தில் இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்து மேற்கோள் காட்டலாம்.....
கண்ணம்மா மீதான பக்திப்பாடல்கள்
மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் கண்ணம்மா மீதானவை (52- 55) இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில், “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி” மிகப் புகழ் பெற்ற பாடல். ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பிலும் கண்ணம்மா - என்ற காதலி’ என்ற தலைப்பில் ஆறு கவிதைகள் உண்டு என்பது இங்கு கவனிக்க வேண்டிய கருத்து. கடவுளை தனது இணையாக வர்ணிக்கும் பாரதியின் பக்திப் பிரவாஹம், படிக்கப் படிக்க, பாடப் பாட இன்பமளிக்கிறது. “துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே” என்று ஒரு கவிதையில் போற்றும் பாரதி, “எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!’’ என்று மற்றொரு கவிதையில் விம்முகிறார். இன்னொரு கவிதையில், “எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ” என்று வரையும் பாரதி, “திங்களை மூடிய பாம்பினைப் போலே செறிகுழல், இவள் நாசி எட் பூ” என்று எழுதுகையில் அகப்பாடலின் முழுத்வணியில் லயித்திருப்பதை உணர முடிகிறது. இறைவனை மனையாளின் அன்புருவாகக் கருதும் தூய ‘அகப்பாடல்கள்’ இவை...