இந்திய விமானப் படையின் தென்மேற்கு பிராந்தியத் தலைவராக இருந்து (2018 ல்) ஏர் மார்ஷல் ரவீந்திரகுமார் தீர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இவரை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தார். டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் தொழிலுக்கான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். இன்று குஜராத்தில் தனியார் துறையில் பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் பல துவங்கப்பட்டுள்ளன.
Day: May 1, 2022
சாந்திக்கு மார்க்கம்- 1
ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி. ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார்.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது…
எனது முற்றத்தில்…. 1
திரு. எஸ்.எஸ்.மகாதேவன், தமிழ் இதழியல் உலகின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தியாகபூமி, இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் பத்திரிகைகளில் பணியாற்றியவர்; நமது இணையதளத்தின் வழிகாட்டி. அவரது வாழ்வனுபவங்கள் இத்தளத்தில் தொடராக வெளிவருகின்றன…
முருகன் மீதான பாடல்கள்
மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பில், 2 முதல் 6 வரையிலான கவிதைகள் முருகன் புகழ் போற்றுபவை. அவை இங்கே...
சத்திய சோதனை 1(1- 5)
உலகப் புகழ் பெற்ற சுய சரிதைகளில் மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ‘சத்திய சோதனை’க்கு பிரதான இடமுண்டு. சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய சுய வாழ்க்கை வரலாற்று நூல். ‘என்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல’ எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தியடிகள், தன் வாழ்க்கையை ’ஒரு திறந்த புத்தகம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவரது எண்ணம். அதனால் இந்நூலுக்கு ’சத்தியசோதனை’ என்று அவர் பெயர் சூட்டினார். தம் பிறப்பு முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான சுய சரிதையை காந்தியடிகள் எழுதியுள்ளார். இது, குஜராத்தி மொழியில் வெளிவந்த ‘நவஜீவன்’ வாரப் பத்திரிகையில் 1925 முதல் 1929 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் காந்தியடிகளின் தனிச் செயலர் மகாதேவ தேசாய். தமிழில் ரா.வேங்கடராஜுலு மொழிபெயர்த்துள்ளார்.