குளத்தங்கரை அரசமரம்

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதைக் கவனிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் கால இந்தியாவில், தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. படித்து முடிக்கும்போது மனபாரம் தாங்காமல் ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. இத்துணை விசாலமான  பார்வை கொண்ட வ.வே.சு. ஐயரையா நமது தமிழகத்தில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக கரித்துக் கொட்டினர் என்பதை நினைத்தாலே, ருக்மிணிக்காக அரசமரம் அடைந்த விசாரம், நமக்கும் எழுகிறது...

சாந்திக்கு மார்க்கம் – 3

உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.....

பக்திப் பாடல்கள் -15, 16

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சிறியவை என்றபோதும் மிகவும் பொருள் பொதிந்தவை இந்த 15, 16 கவிதைகள்....