நெல்லையப்பரும் வெள்ளையப்பரும்

நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்கு சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும் ! இதுவன்றோ ராஜபக்தி ! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!...

கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்

லண்டனில் அவர் இருந்தபோது உலகெங்கும் எழுந்த விடுதலை வேட்கை, புரட்சிகள் பற்றி செய்திகள் வந்தபோது, தானும் அதில் பங்காற்ற வேண்டியுள்ளதை அரவிந்தர் புரிந்து கொண்டார். பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும் என அவர் ஆழமாகவும் உறுதியாகவும் நம்பி இருந்தார். இது ஐரிஸ் விடுதலை போராளியான சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னெல் என்பவரின் நினைவாஞ்சலியாக அரவிந்தர் எழுதிய கவிதையே சாட்சி கூறுகிறது.....

சிவகளிப் பேரலை- 86

  அனைத்திற்கும் அடித்தளமாகிய ஆதியாகவும், அனைத்தின் முடிவாகிய பூரணமாகவும் சிவபெருமான் இருக்கிறார்.  ஆதியும் அந்தமுமாய் உள்ள அந்தப் பரம்பொருளின் அடியையும், முடியையும் யார்தான் காண வல்லார்? அனைத்துமாய் விளங்கும் அந்தப் பிரும்மாண்டப் பரம்பொருளை, அதன் ஒரு துளியாய் இருக்கும் நாம் அளப்பது எங்ஙனம்?

பாரதி- அறுபத்தாறு (23-26)

குள்ளச்சாமி குறித்த பிரலாபம் தொடர்கிறது.... மகாகவி பாரதி புதுவையில் வசிக்கையில் கிடைத்த அரிய உறவு, குள்ளச்சாமியின் நட்பு...

‘விஜயா’வில் அரவிந்தர்

பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும்  ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேட்டிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார். அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன. அந்த நேர்காணல் இங்கு முழுமையாக:

சிவகளிப் பேரலை- 85

அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா?

மகாவித்துவான் சரித்திரம்- 1(8)

-உ.வே.சாமிநாதையர் 8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும் அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்ய வேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயில வேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து … Continue reading மகாவித்துவான் சரித்திரம்- 1(8)

உத்தர்பாரா பேருரை உரைப்பது என்ன?

1909லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமைய வேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்....

ஆகாய விமானமும் சென்னையும்

காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது...     வார இதழான ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜயா’விலும் வெளிவந்துள்ள கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்ணத்தை மக்களுக்குப் பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது.     விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்....

சத்திய சோதனை- 3(11-15)

 “ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்....      “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி....

சிவகளிப் பேரலை- 84

     எல்லாம் வல்ல சிவபிரானே அனைத்து ஜீவன்களுக்கும் பதியாய், பசுபதி நாதராய் வீற்றிருக்கிறார். பசுக்களாகிய நாம் அனைவரும் அவரையை சார்ந்திருக்கிறோம். இறைவனே நாயகன். நாம் எல்லோரும் அவனது நாயகியே. இந்த நாயக - நாயகி உருவகத்திலான பக்தியை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகப் படம்பிடிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

பாரதி- அறுபத்தாறு (19-22)

ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?       ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?- என்ற அற்புதமான வரிகள் கொண்ட மகாகவி பாரதியின் குருநாதர் குறித்த பாடல் இது....

தரித்திர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ!

'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ!' இது ஹிந்து சமயப் பண்பாடு. ஆனால் காலத்தின் தேவையால், சமுதாயத்தின் மற்றும் ஹிந்து சமயத்தின் வளர்ச்சிக்காக மேற்கூறிய நான்கினை சுவாமிஜி மேலும் விரிவுபடுத்தினார். அன்னை, தந்தை, ஆச்சாரியர், விருந்தினர்களை தெய்வமாக வழிபட வேண்டும் என்பதோடு மேலும் இரண்டையும் சேர்த்தார் விவேகானந்தர். 'தரித்ர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ' என்று அவர் கூறி, நமது கவனத்தை மேலும் ஆழப் படுத்தினார்.

எனது முற்றத்தில்- 15

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள 'வடகிழக்கு பல்கலைக்கழக' ஆராய்ச்சியாளர்கள் பசுவின் சாணத்தை  1,700 டிகிரி செல்ஷியஸ் சூட்டில் எரித்து அதை வடிகட்டியாக்கி கடல்நீரை வடிகட்டினால் பாக்டீரியா இல்லாத நன்னீர் கிடைக்கிறது என்று கண்டுபிடித்திருப்பதாகத் தகவல். பாரத விஞ்ஞானிகளும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது உலகம் நாளை சந்திக்க இருக்கிற கடுமையான குடிநீர்ப் பிரச்னைக்கு கோமாதா புண்ணியத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ...

மகாவித்துவான் சரித்திரம்- 1(7)

சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை யென்னும் மூவரும் ஒருவருடைய வீட்டிற்கு ஒருவர் போய் நூலாராய்ச்சியின் விஷயமாக ஒருவரோடொருவர் அளவளாவி இன்புறுவது வழக்கம். அக்காலங்களிலெல்லாம் அவர்கள் பிள்ளையவர்களுக்குத் தமிழ் நூல்களிலுள்ள வேட்கைப் பெருக்கத்தையும் இயற்கையறிவினையும் முன்னரே இவருக்கு அமைந்திருக்கும் அகன்ற நூலாராய்ச்சிப் பெருமையையும் ஞாபக சக்தியையும் அடக்கத்தையும் தருக்கின்மையையும் நட்புடைமை முதலியவற்றையும் குறித்து வியந்தார்கள். இவர் சந்தேகமென்று வினவுகின்ற வினாக்களில் பெரும்பாலன அவர்களுக்குப் புதிய விஷயங்களை அந்தச் சமயங்களில் தோன்றச்செய்யும்; விடைதர வேண்டி மேன்மேலும் பல நூல்களை ஆராயும்படி அவர்களை அவை தூண்டும். இவருடைய பாடல்களையும் அவற்றிலுள்ள நயங்களையும் அவர்களறிந்து இவருடைய ஆற்றலைப் பாராட்டினார்கள். இளமையிலே இவ்வளவு நல்லாற்றல் வாய்ந்தமை யாருக்குத்தான் வியப்பைக்கொடாது?