-கவியரசு கண்ணதாசன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந் தலைவன்
மானிட ஜாதியில் தனி மனிதன் – நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்!
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்- நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!
திரைப்படம்: ரத்ததிலகம் (1963) இசை: கே.வி.மகாதேவன் பாடகர்: டி.எம்.சௌந்தராஜன்
$$$