ஸ்வதந்திர கர்ஜனை- 2(30)

நாமக்கல்லார் பாடியபடி  ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு.   நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது....

சுவாமி விவேகானந்தர் பார்வையில் உண்மையான ஆன்மிகம்

திரு. தெள்ளாறு கோ.ராமநாதன், ஆன்மிக எழுத்தாளர்; சர்வோதய இயக்கத்தில் திரு. எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு பிரசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்; தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்; 13 நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

மகாவித்துவான் சரித்திரம் – 2(16)

ம்காவித்துவானின் மாணாக்கர் முதலியவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் முதலியவற்றில் இவரைப் பாராட்டிய பகுதிகள், இந்த அனுபந்தத்தில், உ.வே.சா. அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன....

விவேகானந்தரின் பன்மொழிப் புலமை

பொருள் புதிது- இணையதள ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய, சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

கிரேக்க தேசத்தின் ஸ்திதி

கிரேக்கத்தில் மன்னராக யார் இருப்பது என்பதை கிரேக்க மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்; இங்கிலாது உள்ளிட்ட நேசநாடுகள் அல்ல என்கிறார் மகாகவி பாரதி, இக்கட்டுரையில்....

சுவாமிஜி உபதேசித்த வேலைமுறை

தணிக்கையாளர் திரு. டி.எஸ்.வைகுண்டம், மதுரையில் வசிக்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் தமிழகப் பொருளாளர், மாநில சேவைப் பிரிவுச் செயலாளர், சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி விழாக் குழுவின் தென் தமிழகப் பொருளாளர், ஏகல் வித்யா கேந்திரத்தின் மாநிலத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)

1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்....

விளையும் பயிர் (கவிதை)

ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.

ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் இங்கிலாந்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசம். எனவே அந்நாட்டின் சுதந்திர முயற்சிகளையும், அவற்றை நசுக்கும் பிரிட்டீஷ் அரசையும் இக்கட்டுரையில் தோலுரிக்கிறார் மகாகவி பாரதி. “உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?” என்ற கேள்வி அயர்லாந்துக்கு மட்டுமானதல்ல என்பதை மகாகவி பாரதியை அறிந்தோர் உணர்வார்கள்....

நாகரீகத்தின் ஊற்று

முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையிலிருந்து உலகத்திற்கு எத்தனை அரிய நலங்கள் செய்தபோதிலும் இப்போது நாம் சரியான நிலைமையி லில்லாதிருப்போமானால் நமதுபண்டைக் காலப் பெருமை யாருக்கும் நினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதூக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து ஸ்ரீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது.

ஸ்வதந்திர கர்ஜனை -2(28)

அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது....

எனது முற்றத்தில் – 32

'நான் சுட்டுத் தாரேன், நீ பெற்றுத் தா' என்று மாமியார் சீமந்தம் காணும் தன் மருமகள் சேலை முந்தானையில் பொதிந்து கொடுத்து பிறந்தகம் அனுப்புவாரே, அமிர்த கலசம், அதுவாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா?  

ஸ்வதந்திர கர்ஜனை – 2(27)

ஒரு கூட்டத்தில் மகாத்மா காந்தி சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

கிரேக்க தேசத்தின் ஸ்திதி

கிரேக்க நாட்டு அரசியல் நிலவரத்தை நமது மக்களுக்குத் தெரியப்படுத்து கிறார் மகாகவி பாரதி இக்கட்டுரையில்....

பிரிவினை மனநிலைகள் : ஒரு தீர்வு

கோவையைச் சார்ந்த இளைஞர் திரு. ராதாகிருஷ்ணன், 'கொழும்பு முதல் அல்மோரா வரை' நூலைப் படித்ததன் பின்புலத்தில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார். வேற்றுமைகளை ஒழிப்பது வேதாந்தம் என்கிறார்....