தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனியுரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள், என் நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்துகொண்டேன்....
Month: December 2022
மோடியின் தமிழகம் – நூல் அறிமுகம்
முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான திரு. சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது. தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தையும், தமிழின்பால் அவருக்குள்ள அன்பையும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கவியரசு கண்ணதாசனின் எழுத்துநடையை ஒட்டிய சின்ன வாக்கியங்கள், சிறிய பத்திகள்; சுற்றி வளைக்காத சாதாரணமான எளிய உரையாடல் விளக்கங்கள்; பலரும் அறியாத முக்கியமான அடிப்படைத் தரவுகள்; படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள்; நரேந்திர மோடியின் தமிழ் தொடர்பான மேற்கோள்கள் - இவை அனைத்தையும் பக்குவமாக இணைத்திருக்கும் பாங்கு என நல்ல அறுசுவை உணவு போலப் படைக்கப்பட்டிருகிறது இந்நூல்.
சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 1.1.25
தங்கள் கோபமான சொற்களுக்கு தருமன் அளித்த பதிலுரை கேட்ட தம்பியர் நால்வரும், அன்பு மிகுதியால்தான் அண்ணனிடம் வாதிட்டோம்; அண்ணன் சொல்லே தங்களுக்கு வேதவாக்கு என்கின்றனர். மூத்தவர் சொல்லை மறுக்காமல் ஏற்பது அக்கால வழக்கம் என்பதை இப்பாடலில் காட்டுகிறார் மகாகவி பாரதி...
சட்டை
எழுத்தாளர் ஜெயகாந்தனின் அற்புதமான சிறுகதைகளுள் ஒன்று இது. ராணுவவீரனும் ஒரு துறவி தான் என்று ஒரு வித்தியாசமான சிந்தனையை இக்கதையில் விதைத்திருக்கிறார். படியுங்கள். வீரர்களை ஆராதியுங்கள்!
மகாவித்துவான் சரித்திரம் – 2 (7அ)
ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால் அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.
வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
-நல்லி குப்புசாமி செட்டியார் திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே... சிகாகோவில் நடைபெற்ற … Continue reading வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
பாஞ்சாலி சபதம் – 1.1.24
பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான். “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....
ஸ்வதந்திர கர்ஜனை – 2(11)
வயதில் முதியவரும் கூட்டத்தின் தலைவரும் பஞ்சாப் மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவருமான லாலாஜியை சார்ஜண்ட் சாண்டர்ஸ் என்பான் தடிகொண்டு பலம் கொண்டமட்டும் தாக்கினான். அவன் அடித்த அடிகள் அவர் மார்பில் விழுந்தன. தொண்டர்கள் லாலாவை தடியடியிலிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. மிருக வெறியோடு சார்ஜண்ட் சாண்டர்ஸ் அடித்த அடியில் லாலா நினைவை இழந்தார். தொண்டர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சில நாள்களில் லாலாஜி உயிரிழந்தார்...
சுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷர்
தமிழகத்தின் ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவரான (டி.ஜி.பி) திரு. ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்தபோது, அத்துறையை வெளிப்படையான அமைப்பாக மாற்றினார். நேர்மையின் சின்னமாக அரசு அதிகாரிகள் விளங்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சந்தனக் கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு தலைவராக இருந்தபோது மலைவாழ் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக காவல்துறையினரை மாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் 15வது ஜெயந்தியின்போது திரு. ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ். எழுதிய கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 1.1.23
அஸ்தினாபுரம் செல்வது என்ற தனையன் தருமனின் முடிவைk கேட்டவுடன் பீமன் கோபாவேசம் கொள்கிறான். துரியன் சூதுப்படி நாம் அஸ்தினாபுரம் செல்வதென்றால் படையெடுத்துச் செல்வோம் என்கிறான்; தம்பி அர்ஜுனனிடம் வில்லைப் பூட்டுக என்கிறான். பாண்டவர்களுக்கு சூதில் விருப்பமில்லை என்பதை மகாகவி பாரதி இப்பாடல்களில் காட்டுகிறார்... “இரு நெருப்பினிடையினில் ஒரு விறகா?” என்ற இனிய உவமையை இங்கு எடுத்தாள்கிறார்.
விநாயக சதுர்த்தி
புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகளுள் ஒன்று இது. இதில் செவிவழிக் கதை ஒன்றை சிறுகதைக்குள் நுழைக்கும் புதுமைப்பித்தன், நாத்திகவாதம் செய்யும் கதாபாத்திரமாக தன்னையே இருத்திக் கொள்கிறார். தமிழக வழக்கப்படி கதையில் வரும் மனைவி பக்திமான் தான் வேறென்ன?
இன்னொரு விவேகானந்தர்!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் திரு. வெ.இராமசுப்பிரமணியன், இலக்கிய ஆர்வலர்; நாட்டுநலம் விழையும் நற்பண்பாளர்; சிறந்த மேடைப் பேச்சாளர். அன்னாரது இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (12.01.2014) விவேகானந்தரின் 151வது ஜெயந்தியை ஒட்டி வெளியானதாகும்.
பாஞ்சாலி சபதம் – 1.1.22
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை முன்வைத்து, தங்கள் பெரிய தந்தையார் மன்னர் திருதராஷ்டிரனின் அழைப்பை ஏற்பதாக அறிவிக்கிறான் தருமன். துரியன் சூது செய்யினும் மன்னரின் அழைப்பை ஏற்பது தங்கள் கடன் என்று தருமன் சொல்வதாகக் கூறுகிறார் மகாகவி பாரதி.