பாரதியின் தனிப்பாடல்- 5

வானம் சினந்தது; வையம் நடுங்குது; வாழி பராசக்தி காத்திடவே! தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்....

கடவுளின் பிரதிநிதி

கோயில்களுக்குள் பட்டியலின (தாழ்த்தப்பட்ட) மக்களும் செல்வது இன்று இயல்பாகி இருக்கலாம். ஆனால், அதற்கு வித்திட்டது மகாத்மா காந்தி விடுதலை இயக்கத்தில் ஹரிஜன முன்னேற்றத்தை ஓர் ஆதார விஷயமாகக் கொண்டதுதான். ஆயினும், இதில் உடனே நமது சமூகம் திருந்திவிடவில்லை. அதற்கு பெருத்த போராட்டங்கள் நடத்தப்பட வேண்டி இருந்தது. இறுதியில் சட்டப்படி கோயிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லும் உரிமை பெற்றனர் என்றால் அதற்கு வழிவகுத்தது அன்றைய காங்கிரஸ் பேரியக்கம் தான் எனில் மிகையில்லை. இதற்கான போராட்டம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை  என்பதற்கான நிரூபணம் புதுமைப்பித்தன் எழுதி, ‘மணிக்கொடி’யில் (1934) வெளியான இச் சிறுகதை…இலக்கியம் வரலாற்றின் பதிவும் கூட என்பது உண்மைதான்.  

சிவகளிப் பேரலை – 52

இந்த ஸ்லோகத்தில் மேகத்தோடு சிவபெருமானை இணைத்து சிலேடை புனைந்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

பாரதியின் தனிப்பாடல் – 4

இயற்கையின் பெருநடனத்தை அதே ஆவேச சொற்பெருக்கில் கொண்டுவந்து இக்கவிதையில் கட்டியமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...

எனது முற்றத்தில் – 10

குன்றக்குடி அடிகளார் என்று எழுபதுகளில் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய ஆதீனகர்த்தர் அவர்களை சென்னையில் அவரது  மயிலை திருமடத்தில் நான் பேட்டி கண்டேன். அதனால் அவருடைய பின்வரும்  வாக்கியத்தை1970களில் தியாகபூமி   இதழில் பதிவு செய்ய முடிந்தது:  "நான் மதத்தால் ஹிந்து, மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன்"....

சிவகளிப் பேரலை – 51

பிரணவ நாதத்துடன் ஓங்கி நிற்பவர் சிவபெருமான்.  அவரது மேனி மிகுந்த சிவப்பு அல்லது மிகுந்த வெண்மை நிறம் கொண்டது. மதனன் எனப்படும் காமதேவனை பார்வையாலேயே நெருப்பு மூட்டி அழித்தவர் சர்வேஸ்வரன். அவர், பூப்போன்ற மனத்தையுடைய தேவர்களை மிகவும் விரும்புபவர். ஸ்ரீசைலம் போன்ற மலைப் பிரதேசங்களிலே கோவில் கொண்டிருப்பவர்.....

பாரதியின் தனிப்பாடல் – 3

மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டுவந்தான்; பண்ணி லிசைத்தவ வொலிக ளனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம்.....

இலக்கிய தீபம்- 14

சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப் பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல் கடற்கரையில் வெகுதொலைவில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில் (உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார்.  ‘கொரமண்டல் கோஸ்ட்’ (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலேயுள்ள சிறகு அற்ற நாரை 'மலபார் கோஸ்ட்' என்னும் மேல் கடற்கரையிலேயுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலேயுள்ள அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம்....

சிவகளிப் பேரலை – 50

சிவானந்த லஹரியை ஆதிசங்கரர் அருளிச்செய்த ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் சிவபெருமான், மல்லிகார்ஜுனராகவும், அம்பாள் பிரமராம்பிகையாகவும் அருள் பாலிக்கிறார்கள். இந்த 50-வது ஸ்லோகம், மல்லிகைக்கும், மல்லிகார்ஜுனருக்குமான சிலேடை. ...

பாரதியின் தனிப்பாடல் – 2

காதலி னாலுயிர் தோன்றும்;- இங்கு காதலி னாலுயிர் வீரத்தி லேறும்; காலி னாலறி வெய்தும்- இங்கு காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்...

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

இது வெறும் சிறுகதை அல்ல… கண்களைக் குளமாக்கும் இல்லறச் சிறப்பின் கதை. அந்த லாட்டரிச் சீட்டை இக்கதையின் நாயகி கிழித்தெறிந்துவிடக் கூடாது என்று நம் மனம் துடிக்கிறது. நாமாக இருந்தால் அதையே செய்வோம். உஞ்சவிருத்தி வாழ்க்கையையே தனக்கு விதிக்கப்பட்ட தர்மமாகக் கொண்ட வேதவித்தான கணவரின் நிழல் அல்லவா இத்தாய்? “நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?” என்று அவள் கேட்கும் கேள்வி நெக்குருக வைக்கிறது. ஜெயகாந்தன் ஏன் இன்றும் சிறுகதைக் கோயிலின் மூலவராக இருக்கிறார் என்பது இக்கதையைப் படித்தால் தான் தெரிகிறது.

சத்திய சோதனை – 2(16-20)

மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது....

இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்

வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.....

சிவகளிப் பேரலை – 49

தோட்டத்திலே பாத்தி கட்டி, அதற்குள் நீருற்றி, ஒரு கம்பை (கழியை) நட்டு கொடியை வளர்ப்பார்கள். அந்தக் கழிமீது கொடி படர்ந்து,  மேலே பந்தல் மீதேறி வளர்ந்து, பூப்பூத்து, காய் காய்த்து, கனி தரும். அதுபோல சிவ பக்தியாகிய கொடி, முக்தியாகிய பழத்தை, பக்தனுக்குத் தருகின்றது என்பதை விளக்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 10

...பெருநாரையைக் காக்க பெண்கள் அணி திரண்டது. அதன் பெயர் ‘ஹார்ஜிலா ஆர்மி’. 2008-இல் அது தொடங்கப்பட்டது பத்தாயிரம் பெண்கள் இன்று அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, பெருநாரைப் பாதுகாவலராகச் செயல்படுகின்றார்கள். கோயில் திருவிழாக்களில் இந்தப் பறவையைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் அதற்கென வளைகாப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன. படையல் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான பூர்ணிமாதேவி பர்மனை அவர்கள் ‘பெருநாரை சகோதரி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். உலகில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனமான பெருநாரை இன்று செழித்து, பெருகி வருகிறது....