பாரதியின் தனிப்பாடல்- 14

இன்பமே இவ்வுலகம் என்பது போகியின் கட்சி. சிவநாட்டமே உலகம் என்பது யோகியின் கட்சி. இருவரும் வாதிடுகிறார்கள். சதுரங்கக் களத்தின் இருபுறமும் நின்று போகியாகவும் யோகியாகவும் மகாகவி பாரதியே கவித்துவமாக விளையாடுகிறார். இடையே நுழைகிறார் நடுவரான ஞானி. அதுவும் மகாகவி பாரதியே. இவ்வுலக இன்பங்கள் மாயையல்ல; அவையும் சிவனின் லீலைகள் என்கிறார். பிறகு மூவரும் இணைந்து இதனைப் பிரகடனம் செய்கிறார்கள். இந்த உலகம் மாயை என்பதை எக்காலத்திலும் பாரதி ஏற்கவில்லை. இந்தத் தத்துவத்தால்தான் நமது நாடு அடிமைப்பட்டது என்ற எண்ணம் அவருக்குண்டு. எனவேதான், வாய்ப்பு நேர்கையில் எல்லாம் மாயைச் சிந்தனையாளரை எள்ளியும், உலக இன்பங்கள் அனைத்தையும் வேண்டியும் கவிதை புனைகிறார் மகாகவி.

சிவகளிப் பேரலை – 62

ஒரு குழந்தையை அதனது தாய், வாஞ்சையுடன் கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறாள். பக்தனுக்கு இறைவன் தகப்பனாய் இருக்க, அவர் மீதான பக்தியே, தாய்போல் பக்தனைக் காப்பாற்றுகிறதாம்....சிவபெருமான் மீதான இந்த பக்தியின் பெருமையைத்தான், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினு மெய்ப்பொரு ளாவது, நாதன் நாமம் நமசிவாயவே” என்று திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்....

காற்றிடைச் சாளரம் – 11

கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலத்தின் மன உருவகத்தில் வரையப்பட்ட மீன் இது...

பாரதியின் தனிப்பாடல்- 13

மகாகவி பாரதி கவிதையின் ஊற்றாய்ப் பிறந்தவர். சென்ற கவிதையில் மனைவியாக கவிதையைக் கொண்டாடிய பாரதி, இக்கவிதையில் ‘மணிப்பெயர்க் காதலி’ என்று கொண்டாடுகிறார். ஆனால், இந்த மாய உலகில் வாழ்வதற்கான போராட்டத்தில் கவிதையாம் காதலியை மறந்தாக வேண்டி வருகிறது. வாழ்க்கைப்படகு தத்தளிக்கும் போது, சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று தன்னிரக்கத்துடன் முனிவரின் கதையை இக்கவிதையில் கூறுகிறார். அத்தகைய “அருந்தவப்பன்றி”யாக வாழ்ந்த சில நாட்களை இக்கவிதையின் வேதனையுடன் ஒப்பிடுகிறார் மகாகவி....

சிவகளிப் பேரலை- 61

இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க, பக்தியே வித்து.  பக்தியை விதைத்துத்தான் முக்தியை அறுவடை செய்ய முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பின் கிடைக்கும் நிலை மாத்திரம் அல்ல. உயிரோடு இருக்கும்போதே அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவதும் முக்திதான். ...

சுவாமி விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் சாதிக்க நினைப்பவர்களுக்கும் – சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும் – இறைவனுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பவர்களுக்கும் – அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன. தனிமனித,  சமுதாய முன்னேற்றத்திற்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார். அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே- அவை நம்முள் கிளர்ந்தெழச்செய்யும் சக்தியைக் கொண்டே – நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.

பாரதியின் தனிப்பாடல்- 12

“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை,  கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.

சிவகளிப் பேரலை – 60

இறைவனின் திருப்பாதங்களைச் சரண் புகுவதால் அனைத்துவிதத் துன்பங்களில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். இறைவன் திருவடித் தாமரை மீதான விருப்பம், அதனை எப்படியும் அடைந்தே தீரூவது என்ற விடாப்படியான முயற்சியுடன், உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் அது கைவசமாகாது. நினைப்பே நம்மை உந்தித் தள்ளுகிறது, முன்னேயும் பின்னேயும். ....

ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்

கந்தன் கலியுகவரதன்  எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன. விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்....

பாரதியின் தனிப்பாடல் – 11

”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. ”நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” -என்பதும் தொல்காப்பிய நூற்பா. ”நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....

சிவகளிப் பேரலை – 59

கைவல்யம் என்றால் அதற்கிணையாக வேறொன்றும் இல்லாதது என்று பொருள். இறைவனின் திருவடிகளே கைவல்யபதம், அதுவே கைவல்ய சுகத்தை அளிப்பது. கைவல்யம்= மோனப் பெருநிலை= ஒன்றுதல். வேறு நினைப்பு அறுந்துபோய் அதுமாத்திரமே இருத்தல்.             ....

காற்றிடைச் சாளரம்

உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்; அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு....

இலக்கிய தீபம்- 16

கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109  செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு....

பாரதியின் தனிப்பாடல்- 10

உலகெங்கும் ஒளீயெனத் திகழ்ந்தாலும், சிறு நெஞ்சத்தில் இருள் கவிகிறதே - என்று தன்னிரக்கம் எழ குமைந்து பாடுகிறார் மகாகவி பாரதி....

சிவகளிப் பேரலை- 58

இறைவனுடைய திருக்காட்சி தெரிந்தும்கூட, கண்ணிருந்தும் குருடர்களாய் சிலர் வீழ்ந்து கிடப்போம். மாயை இருளால், அவன் தெரிந்தும், தெரியாமல் இருக்கிறான். ஆகையால், காட்சியைக் கொடுக்கின்ற அவனே, அதற்குரிய கருத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம் போன்றோருக்காக சிவபெருமானிடம் இறைஞ்சுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....