காற்றிடைச் சாளரம்

-கவிஞர் பக்தவத்சலம்

என் வீடு

உங்கள் வீடுகளில் நாய்கள் ஜாக்கிரதை;
என் வீட்டில் எப்போதும் நல்வரவு.

உங்கள் கதவுகளுக்கு வித விதமாய் பூட்டுகள்;
கதவுகளைத் தொலைத்தது என் வீடு .

உங்கள் வரவேற்பு அறைகளில் வாடிய மலர்கள்;
என் வாசலெங்கும் தேன் சூடிய மலர்கள். 

தெய்வீகம் ஒரு அறைக்குள் உங்கள் வீட்டில்;
எனது வீடே தெய்வீகமாய்.

உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்;
அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு.

என்ன கேட்கின்றீர்கள் ….
என் வீடு எங்கே என்றா ….

விரிவான முகவரியா?

கடலில் குளித்து
சிகரமேறி
சூரியனை வலம் வந்து
மையத்தில் நிலை பெற்றால்
அங்கே இருக்கும் என் வீடு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s