-கவியரசு கண்ணதாசன்

கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே!
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே!
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்;
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்!
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே!
ஊமை என்றால் ஒரு வகை அமைதி;
ஏழை என்றால் அதிலொரு அமைதி;
நீயோ கிளிப் பேடு, பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு!
ஏனோ தெய்வம் சதி செய்தது;
பேதை போல விதி செய்தது!
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்;
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்!
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்;
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்;
உனக்கே உயிரானேன், என்னாளும் எனை நீ மறவாதே!
நீ இல்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சன்னிதி!
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே!
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்;
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்!
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
ராரிராரோ.. ஓராரிரோ…
ராரிராரோ.. ஓராரிரோ…
படம்: மூன்றாம் பிறை (1983)
இசை: இளையராஜா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்