தமிழன்னையின் சிறப்பணிகளான பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் கரையானுக்கு இரையாகாமல் காத்து, ஏடுகளைச் சரிபார்த்து செம்மையாக்கிப் பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது அளப்பரிய ஆற்றலால் தான் நமது தாய்மொழி செம்மொழி என்னும் பெருமையை நம்மால் தக்கவைக்க இயன்றது. அவர் மீது மகாகவி பாரதி பாடிய அற்புதமான வாழ்த்துப்பா இது.
மகாவித்துவான் சரித்திரம்- முகவுரை
தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. ”திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ’மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.
காற்றிடைச் சாளரம் – 13
பிச்சையெடுத்தா பிண்டமிடுவது?- இந்தக் கடைசி வரிக் கேள்வியில் தான் இக்கவிதை தொக்கி நிற்கிறது...
பாரதியின் தனிப்பாடல் – 20
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுரம் அரண்மனையின் அரசவையில் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் சுப்பராம தீட்சிதர் (1839- 1906). இவர் தெலுங்கு மொழியில் எழுதிய ‘ஸங்கீத சம்பிரதாயப் பிரதர்ஷினி’ என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம். இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் இசைக் குடும்பத்தைச் சார்ந்தவர் இவர். எட்டயபுரம் அரண்மனையுடன் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதி, இசையின் மீதும் பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி அவர் எழுதிய அஞ்சலிக் கவிதை இது...
சிவகளிப் பேரலை – 68
முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது.
பாரதியின் தனிப்பாடல்- 19
சென்ற நூற்றாண்டின் இணையற்ற ஓவியர் ராஜா ரவிவர்மா குறித்த மகாகவி பாரதியின் அஞ்சலிக் கவிதை இது...
சிவகளிப் பேரலை- 67
மனம் பிறழாமல் இன்ப துன்பத்தை சமநிலையில் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த மனநிலை. அது வாய்க்கப் பெற்றவர்கள், இம்மையிலேயே விடுதலை (முக்தி) பெற்றவர்கள். அவ்வாறான உயர்ந்த மனப்பக்குவம் கிடைக்க நம்மைத் தயார்படுத்துவது இறைவன் சிவபெருமான் குறித்த தியானமே
பாரதியின் தனிப்பாடல்- 18
சுவாமி அபேதானந்தர் (1866 அக். 2 - 1939 செப். 8) ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். 1906 ஜூலை 15 ஆம் தேதி சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு வரவிருந்ததை அறிந்த பாரதியார், அதுகுறித்து தம் ’இந்தியா’ இதழில் எழுதியதுடன், சுவாமி அபேதானந்தரை வாழ்த்தி 32 வரிகளில் கவிதை படைத்தார். அக்கவிதையே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது....
சிவகளிப் பேரலை- 66
சிவபெருமான் நடராஜனாக, ஆடலரசனாகத் திகழ்கிறார். அவரது நடனம்தான் இந்த உலகின் இயக்கம். அவரது திருவிளையாடல்தான் அனைத்தும். இதனையே இந்தச் செய்யுளில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....
எனது முற்றத்தில் – 12
நாலு கதை சொல்கிறேன், கேட்கிறீர்களா? கதை என்றால் நீதி கட்டாயம் உண்டு. ஆனால் கதை முடிந்த பிறகுதான் நீதி அல்லது கருத்து வரும். இந்தப் பதிவில் மானுடன் ’கதை முடிந்த’ பிறகு என்ன என்பது பற்றித்தான் கருத்து. பொறுங்கள். அவசரப்பட்டு ஆவி உலகம் பற்றியோ என்று நினைத்து விடாதீர்கள்! விஷயமே வேறு. முதலில் கதைகளைப் படியுங்கள்.
பாரதியின் தனிப்பாடல்- 17
மகாகவி பாரதியின் ஆத்ம குரு சகோதரி நிவேதிதை. சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யையான நிவேதிதையையே தனது குருவாக வரித்துக் கொண்டவர் மகாகவி பாரதி. அவர் எழுதிய குரு வணக்கப் பாடல் இது....
சிவகளிப் பேரலை – 65
சிவபெருமானின் பாதங்களில் பக்தன் தன் மனத்தை காலணியாக காணிக்கையாக்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஸ்ரீஆதிசங்கரர், அவ்வாறு இறைவன் திருக்கமலப் பாதங்களில் காலணியாக இருப்பதால் பக்தனுக்குக் கிடைக்கும் பரமானந்தப் பலன்களை இந்த ஸ்லோகத்தில் பட்டியலிடுகிறார்.....
பாரதியின் தனிப்பாடல்- 16
மகாகவி பாரதியின் தனிப் பாடல்களில் 16வது கவிதை, தாயுமானவர் மீதானது.
சிவகளிப் பேரலை – 64
செருப்பணிந்த காலால் மிதித்து அர்ச்சித்த கண்ணப்ப நாயனாரின் பெருமையை முந்தைய ஸ்லோகத்தில் எடுத்துரைத்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் சிவபெருமானின் காலுக்குச் செருப்பாக பக்தனின் மனது திகழ வேண்டும் என்பதை கனிந்த பக்தியுடன் எடுத்தியம்புகிறார்.....
காக்காய்ப் பார்லிமெண்ட்
நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.