பல புராணச் செய்திகளிலும், கதைக் கருத்துகளிலும் உள்ளீடாக விளங்கும் சிவ பரம்பொருளின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கரர் அருமையாக 100 ஸ்லோகங்களில் விண்டுரைத்த நூல்தான் சிவானந்த லஹரீ. சிவம் என்றால் மங்களம் என்று பொருள். லஹரீ என்றால் பேரலை என்று பொருள். எங்கும் மங்களத்தையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துகின்ற சிவ பக்திப் பிரவாகம்தான் சிவானந்த லஹரீ.
இந்த சிவானந்த லஹரீயிலே மகாகவியாகப் பொழிந்திருக்கிறார் மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். உவமை, உருவகம், சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி என பல அணிகலன்கள் இதனை அலங்கரிக்கின்றன. சொல்நயமும், பொருள்நயமும் படிப்போர் மனங்களைப் பரசவப்படுத்தி பரமானந்த நிலையை எய்தச் செய்கின்றன.
இதனை அருந்தமிழில் ‘சிவகளிப் பேரலை’யாக தமிழாக்கம் செய்து, விளக்கத்துடன் தமிழ்க் கவியும் புனைந்து வழங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் பத்மன்....