திலகர் முதல் தாகூர் வரையிலான தேசத் தலைவர்கள் பலரின் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
Author: vamumurali
சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1
சேலத்தைச் சார்ந்த எழுத்தாளர் திரு. இரா.பிரபாகர், வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ‘சத்தியப்பிரியன்’ என்ற பெயரில் பல இதழ்களில் சிறுகதைகளை எழுதி வருபவர். இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிய வைணவ ஆச்சாரியர் ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த அவரது கட்டுரைத் தொடர் இங்கே வெளியாகிறது…
சத்திய சோதனை – 5(6-10)
சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக்கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.....
கோபந்நா
மகாகவி பாரதியின் சமூக உணர்வு, அவரை பழமைக்கும் புதுமைக்கும் இடையே ஊசலாடச் செய்தது. பாரம்பரியத்தில் ஊறிய பாரதிக்கு நாட்டு மக்களின் ஏழ்மையும் தேக்கமும் மிகுந்த வேதனை அளித்தன. அது அவரது கதை, கவிதை, கட்டுரைகளில் வெளிப்பட்டுக் கொண்டெ இருந்தது. அதற்கு இக்கதையும் ஒரு உதாரணம்...
ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)
இந்த காங்கிரசில் காரியக் கமிட்டிக்கு நடந்த தேர்தலில் தோற்ற பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிசயம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு அந்தந்த மாகாணப் பிரதிநிதிகள் கூடித் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். பம்பாய் மாகாண உறுப்பினர்கள் கூடித் தங்களுடைய இரண்டு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மிதவாதி ஒருவரையும் தீவிர காங்கிரஸ்காரர் ஒருவரையும் முன்மொழிந்தனர். திலகர் ஆதரவு பெற்ற ஒரு பிரதிநிதியும் காந்திஜியின் பெயரும் முன்மொழியப்பட, அதில் காந்தி தோற்றுவிட்டதாகத் தெரிந்த நிலையில், திலகர் உடனடியாக காந்தி வெற்றி பெற்றார் என்று அறிவித்து விட்டார்....
சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம்
பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888- 1975), சிறந்த தத்துவ மேதை. சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே…
விழித்தெழு பாரதமே!
பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…
மகாவித்துவான் சரித்திரம் – 2(4இ)
அப்பால் ஸரஸ்வதி பூஜையன்று பட்டீச்சுரத்துக்கு அருகிலுள்ள என் ஊராகிய உத்தமதானபுரம் சென்றேன். பூஜையை அங்கே முடித்துக்கொண்டு மறுநாளாகிய விஜயதசமியன்று புனப்பூஜையைச் செய்துவிட்டுப் பிற்பகலில் புறப்பட்டுப் பட்டீச்சுரம் வந்து 4 மணிக்குப் பிள்ளையவர்களைக் கண்டேன். "ஏன் இவ்வளவு அவசரமாக வந்தீர்?" என்றார். "இன்று விஜயதசமியாதலால் ஐயா அவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளலா மென்றெண்ணி விரைந்து வந்தேன்” என்றேன்.
தாதாபாய் நெளரோஜி
விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி காலமானபோது மகாகவி பாரதி எழுதிய இரங்கல் குறிப்பு இது. “நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர்” என்கிறார் பாரதி.
கொன்றைவேந்தன் (86-91)
ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.
சுவாமி விவேகானந்தர்: காந்திஜியின் முன்னோடி
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்; மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே….
உள்ளிருத்த விளக்கம்
அன்னம் அமிர்தம். வைஷ்ணவர், ‘போஜனமாயிற்றா?’ என்பதற்கு ‘அமுது செய்தாயிற்றா??’ என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையாலே காக்க வேண்டும். ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் மூடன்.
கொன்றைவேந்தன் (81-85)
திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(4)
காங்கிரஸ் மெல்லத் தன் வழியிலிருந்து மாறி தீவிர அரசியல் இயக்கமாக மாறி வரும் சூழ்நிலையை ஹியூம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தான் எந்தப் பின்னணியில் என்ன காரணத்துக்காக காங்கிரசைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் திசைமாறி இப்போது இந்திய சுதந்திரம் எனும் கோஷத்துடன் புத்துணர்வு பெற்று பயணிப்பதை அவர் புரிந்துகொண்டு தன் வேலை இங்கு முடிந்துவிட்டது என்று மூட்டை முடிச்சுக்களுடன் இங்கிலாந்துக்குப் பயணமானார்....
விடுதலை
சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னையும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனால் தீயகாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல்வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத் தீங்கு செய்வாரும் விரைவிலே கெடுவார்.