-சின்னப்பா கணேசன்
தமிழ்த் திரையுலகில் ஏதோ ஒரு நாசசக்தி புகுந்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் சினிமா தற்போது, பிரிவினைவாதம், அரசு எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு எனத் தடம் புரண்டு விட்டது. இதன் பின்னணி என்ன? அத்துறையிலேயே சாதனை புரியப் போராடிக் கொண்டிருக்கும் இணை இயக்குநரான திரு. சின்னப்பா கணேசன் காரணங்களை அலசுகிறார்….

தமிழ் சினிமா, பக்திப் பாதையில் இருந்து சமூகப் பாதைக்கு பரிணாம வளர்ச்சி அடைந்ததை யாரும் பாராட்டாமல் இருந்தது இல்லை. ஆனால் அதனையே தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டன, இந்து விரோத சக்திகளும், தேச துரோகக் கும்பல்களும். இவர்களுக்கு சுயமாக மூளை இருந்ததே இல்லை. இவர்களை இயக்கியதே, இயக்கி வருவதே மிஷனரி கும்பல்களும், முஸ்லிம் பயங்கரவாதக் கும்பல்களும்தான்.
சுதந்திரம் அடைந்த பிறகும், தமிழ் சினிமா தனது நெறி தவறாமல் பயணிக்கவே முயன்றது. ஆனால் சுதந்திரம் வேண்டாம் என்று போராடி வந்த திராவிடர் கழகக் கும்பல்கள், தங்களின் வயிற்றை வளர்க்க வெள்ளைக்கார எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக இந்து மத வெறுப்பு பிரசாரங்களையும், இந்திய எதிர்ப்பு விஷத்தையும் சுதந்திரம் என்ற போர்வையில் சினிமா மூலம் கக்கத் தொடங்கின.
இந்தக் கும்பல்களுக்கு, தேசிய சிந்தனை கொண்ட, தேசப் பற்று மிக்க ஏவிஎம் போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கூட, தங்களின் இயல்பு நிலையை இழந்து பலியாகிவிட்டன என்பதுதான் பரிதாபம். பகுத்தறிவு என்ற போர்வையாலும், புரட்சி என்ற ஏமாற்றுக் கவர்ச்சியாலும், கடவுள் மறுப்பு என்ற மோசடிப் புரட்சியாலும், தேசியவாதிகளையும், தெய்வ பக்தி மிக்கவர்களையும் சிந்திக்க விடாமல் ஸ்தம்பிக்கச் செய்து விட்டார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி தேசபக்தி படங்களும், தெய்வபக்தி படங்களும் தங்களின் மகத்தான பயணத்தைத் தொடர்ந்தன. இருந்தாலும் அந்தப் புனிதப் பயணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. தொடர முடியாமல் தொலைந்து போயின.
சினிமா தொழிலைப் பொருத்த வரை ஓடுகின்ற குதிரையில் பணம் கட்டுவது என்ற சூத்திரம் சாத்திரமாக இருந்ததால், தேச துரோக, அந்நிய கைக்கூலி கும்பல்களுக்கு தங்களின் விஷக் கருத்துக்களைக் கக்குவதற்கு சாத்தியமாக அமைந்தது. ‘பராசக்தி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடியதால் அந்தக் கும்பல்களை, எல்லை மீறிய உற்சாகமும், ஊக்கமும் தானாகவே வரவேற்றன. இந்து ரசிகர்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையில் மிதந்த அந்தக் கும்பல், இந்து மதத்தையும், இந்த தேசத்தையும் இழிவு படுத்துவதையும், மேற்கத்திய நாடுகளையும், அந்நிய கலாச்சாரத்தையும் தூக்கிப் பிடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டு ஊதி பெருத்து வளர்ந்தது.
இந்துக்களை மதம் மாற்றுவதற்காகவே பயணப்பட்டு, நெல்லை சீமையில் அமர்ந்துகொண்டு தொல்லைகள் பல தந்து வந்த வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரி கால்டுவெல்லை தங்களின் குருநாதராக ஏற்று இருந்ததால், இந்தக் கும்பல்களுக்கு தேச துரோகமும், பிரிவினையும், இந்து விரோதமும் இயல்பாகவே ரத்தத்தில் ஊறிப்போய் இருந்தன. அவர்களுக்கு இந்து மதப்பற்றும், இந்திய தேசப்பற்றும் மழுங்கிப் போய் மங்கி விட்டன.
அன்று தொடங்கிய தமிழ் சினிமாவின் சீரழிவு, இன்று வரை தொடர்கிறது. கிறிஸ்தவ மிஷனரி கும்பல்களும், முஸ்லிம் பயங்கரவாதக் கும்பல்களும் இன்று தமிழ் சினிமாவை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளன. நேரடியாக விஷத்தை விதைக்க முடியாத சூழலில், மறைமுகமாகவும், இலைமறைகாயாகவும் தங்களின் விஷமத்தனங்களை, எந்தவித தங்குதடையும் இன்றி, இவை தொடர்ந்து செய்து வருகின்றன. தமிழகத்தில் எந்த ஆட்சி அரியணையில் அமர்ந்தாலும், இவர்களின் தேசத் துரோக, இந்து விரோத கருத்துத் திணிப்புகளுக்கு எந்த பங்கமும் எப்போதும் வந்ததே இல்லை. அதுவும் திராவிட மாடலைத் தூக்கிப் பிடிக்கும் திமுக ஆட்சி என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்து விரோத, தேச துரோக, பிரிவினைவாதக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் திரைப்பட பிதாமகன்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவுமே உள்ளனர். ஆனால் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ வெளிப்படுத்திக் கொள்ளாமல், கடவுள் மறுப்பு முகமூடியையும், கம்யூனிஸ்டு முகமூடியையும், தமிழ் தேசிய முகமூடியையும் அணிந்து, அப்பாவி இந்துக்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகின்றனர். சர்ச்சுகளுக்கும் மசூதிகளுக்கும் தவறாமல் சென்று வருவதை தங்களின் கடமையாகக் கொண்ட இவர்கள், தங்களை ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் சீடர்கள் என்று பொதுவெளியில் பீற்றிக் கொள்கிறார்கள்.
இந்தக் கும்பல்களுக்கு விலை போன மானங்கெட்ட இந்துக்களும் உள்ளனர். நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் இருக்கும். கையில் புனித சாமிக் கயிறு கட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் தயாரிக்கின்ற படமோ அல்லது இயக்குகின்ற படமோ அல்லது நடிக்கின்ற படமோ இந்து விரோதப் படமாக இருக்கும். அல்லது தேசதுரோகமாக படமாக இருக்கும்.
இது ஒரு புறம் என்றால், பா.ரஞ்சித் போன்றவர்கள், இந்து ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருவார்கள். தவறாமல் சர்ச்சுக்கு சென்று வருவார்கள். இவ்வளவு வசதி வாய்ப்பு வந்த பிறகும், பட்டியலின சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை திருட்டுத்தனமாக அபகரித்துக்கொண்டு, உண்மையான இந்து பட்டியலின சமுதாய மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். இந்த உண்மை தெரியாமல் அந்த அப்பாவி பட்டியலின சமுதாய மக்களும், இவர்களைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுதான் வேதனையின் உச்சம்.
இன்றைய தமிழ் சினிமாவை ஆட்சி செய்கிறவர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். மற்றொருவர் வெற்றி மாறன்.

பா.ரஞ்சித் தலைமையில் ஒரு குழு இயங்குகிறது. அவர்களுக்கு கிறிஸ்தவ மிஷினரி கும்பல்களின் பேராதரவும் பெரும் உதவியும் தொடர்ந்து கிடைக்கின்றன. முஸ்லிம் பயங்கரவாதிகளின் பாராட்டும், பிரியாணி விருந்துகளும் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் அவர்களின் கட்டளைகள், பா.ரஞ்சித் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதே.
ஒருபுறம் பா.ரஞ்சித், படங்களைத் தயாரித்து இயக்குகிறார். மறுபுறம் தனது ‘நீலம் புரொடக்சன்ஸ்’ மூலம் படங்களைத் தயாரிக்கிறார். அப்பாவி இந்துக்களைப் பொருத்தமட்டில் பா.ரஞ்சித் ஒரு சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். ஆனால் உண்மையில் அவர் ஒரு ஆகச் சிறந்த கிறிஸ்தவ வெறியர், இந்து விரோதி. இவற்றை தனது படங்கள் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தி, பெருமை பேசி வருகிறார் அவர்.
அவர் தயாரிக்கின்ற படங்களில் இந்த இலக்கணம் கொஞ்சம் கூட பிசகாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. பா.ரஞ்சித் பட்டறையில் உருவாக்கப்பட்டு வெளிவரும் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்கூட இந்து விரோதிகளாகவும், தேசத் துரோகிகளாகவும், அந்நியர்களின் கைக்கூலிகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதிமுறை. அவர்களும் அப்படித்தான் இருக்கின்றனர். அவர்களின் படைப்புகளும் இந்த இலக்கண வரம்பிற்கு உட்பட்டுத்தான் வெளி வருகின்றன.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கடைசிப் படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம். இது மேற்கத்திய கலாச்சாரத்திற்கு நேர் எதிரானது, உயர்வானது, உன்னதமானது, உலகமே சரி என்று ஏற்றுக் கொண்டுள்ளது. இதனைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தவறு; யார் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம். திருமணம் செய்து கொண்டும் வாழலாம்;திருமணம் செய்துகொள்ளாமலும் வாழலாம். ஆண் ஆணோடும் வாழலாம்; பெண் பெண்ணோடும் வாழலாம். கள்ளக்காதலிலும் வாழலாம். திருமண பந்தம், தாலி போன்றவையெல்லாம் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகள்.
-இத்தகைய மிக உன்னத (?) கருத்துக்களை ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் மூலம் வெளிப்படுத்தினார் பா.ரஞ்சித்.

இதுபோல இவரது தயாரிப்பில் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ முதல் அனைத்துப் படங்களும் ஜாதி வெறியை, ஜாதி வன்மத்தை தவறாமல் விதைக்கும் நாற்றங்கால்களே. இந்து சமுதாயத்தில் ஜாதி வெறி இருக்கிறது, ஜாதி ஏற்றத்தாழ்வு இருக்கிறது, ஜாதிப் பாகுபாடு இருக்கிறது என்று திரும்பத் திரும்ப விஷத்தைக் கக்குவதன் மூலம் பட்டியலின சமுதாய மக்களை, ”நீங்கள் இந்துக்களாக இருக்காதீர்கள். உடனடியாக கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மதம் மாறுங்கள்” என்று உணர்த்துகின்றன.
இதுதான் பா.ரஞ்சித் தயாரிக்கும் அல்லது இயக்கும் படத்தின் ஆதாரக் கருத்து அல்லது மையக் கரு அல்லது மக்களுக்கு சொல்லும் செய்தி.
பா.ரஞ்சித் பட்டறையில் உருவாக்கப்படும் பித்தளைகளும் இத்தகைய நஞ்சைத்தான் சமுதாயத்தில் விதைத்தன, விதைக்கின்றன, விதைக்கும். இதில் கிஞ்சித்தும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆனால் இதற்குப் பலியாவது என்னவோ அப்பாவி பட்டியலின சமுதாய மக்கள் மட்டுமல்ல, அப்பாவி இந்து ரசிகர்களும்தான்.
இவர் இப்படி என்றால், இயக்குனர் வெற்றிமாறன் வேறு ரகம். அவர் கையில் எடுத்திருப்பது வேறு வகையான ஆயுதம். அந்த ஆயுதத்தைக் கொண்டு இந்து மதத்தின் கண்களைக் குத்தலாம். இந்தியாவின் இதயத்தைத் துளைக்கலாம். இந்துக்களை வெட்டிக் கூறு போடலாம். இதற்கு அப்பாவி இந்துக்களையே ஆயுதங்களாகப் பயன்படுத்தலாம்.
அப்படி ஒரு நாசக்கார செயல்திட்டம். இந்த செயல் திட்டத்தின் ஒட்டுமொத்த முகமூடி, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன். இந்தப் பித்தலாட்டத்தின் பின்புலத்தில் இருப்பவர் கிறிஸ்தவ வெறி பிடித்த பாதிரியார் ராஜநாயகம். பலியாவதோ அப்பாவி ஏழை இந்துக்கள். இந்துக்களின் விரல்களைக் கொண்டே இந்துக்களின் கண்களில் குத்துவதுதான் இந்தத் திட்டத்தின் சூத்திரம், சூட்சுமம்.
அப்பாவி இந்துக்களை மூளைச் சலவை செய்து, ஆசை காட்டி ஏமாற்றி, கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்காக, இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவதற்காக, தனது ஆயுளையே அர்ப்பணித்துக்கொண்ட கிறிஸ்தவ இறையியலாளர் ச.ராஜ நாயகத்திற்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் சினிமா பயிற்றுப்பள்ளி நடத்த வேண்டும்? அதுவும் இலவசமாக நடத்த வேண்டும்? அதற்கு முகமூடியாக இயக்குனர் வெற்றிமாறனை ஏன் முன்னிறுத்த வேண்டும்?
எல்லாம் அப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதற்கான பித்தலாட்டம்தான். இந்துக்களை இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவிற்கு எதிராகவும் வார்த்தெடுக்கத் தொடுக்கப்படுகின்ற மாய வலைதான் இது.

சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் (IIFC -International Institute of Film and Culture). இதுதான் ராஜநாயகத்தின் பயிற்சிப் பள்ளி. இதன் வழிகாட்டி என்ற பெயரில் ராஜநாயகம் இருந்துகொண்டு இதனை இயக்குகிறார். இந்த பயிற்சிப் பள்ளியின் முகமூடியாக வெற்றிமாறன் இருக்கிறார். இந்த பயிற்றுப் பள்ளியைப் பொருத்தவரை வெற்றிமாறன்தான் தூண்டில். கிறிஸ்தவ இறையியலாளர் ராஜநாயகம் நடத்தும் பள்ளி என்றால் ஒரு பையனும் வர மாட்டான். திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் நடத்தும் திரைப்பட பயிற்றுப் பள்ளி என்றால், அப்பாவி இந்துக்கள் சிக்கிவிடுவார்கள்.
உண்டு உறைவிடப் பள்ளியாகச் செயல்படும் இதில் ஆண்டுக்கு 35 முதல் 40 மாணவ மாணவிகளைத் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் ராஜநாயகம் நேரில் சென்று, அந்த வீட்டுச் சூழலைப் புரிந்து கொண்டு, அவர்களின் ஏழ்மை நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சினிமா ஆசை மற்றும் மோகத்தை மூலதனமாகக் காட்டி, தங்களின் நயவஞ்சக வலையில் அவர்களை வீழ்த்தி வருகிறார். ஓராண்டு இலவசப் பயிற்சி என்ற, கூடுதலான கவர்ச்சி விளம்பரம் வேறு துணைக்கு நிற்கிறது.
இந்த பயிற்சிப் பள்ளியில் சினிமா சார்ந்த இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை மட்டும்தான் கற்பிக்கப்படுகின்றனவா என்றால் அதுதான் இல்லை. பெயரளவிற்கு இவையும் இருக்கின்றன. ஆனால் இவர்களின் முக்கிய நோக்கமான இந்து விரோதம், இந்திய விரோதம், அந்நிய கைக்கூலிகளின் அடிமையாக வளர்ப்பது போன்றவை முக்கிய அம்சங்களாக, செயல்திட்டங்களாக இருக்கின்றன. இதற்கான பாடத்திட்டங்களையும், செயல்திட்டங்களையும், பயிற்சித் திட்டங்களையும் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் கிறிஸ்தவ இறையியலாளர் ச.ராஜநாயகம்.
இந்த பயிற்சிப் பள்ளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நபர்கள்தான், நாளைய தொலைக்காட்சி விவாதங்களை நடத்துபவர்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள், நாளைய இயற்கை ஆர்வலர்கள், நாளைய சமூக ஆர்வலர்கள், நாளைய ஊடகவியலாளர்கள், நாளைய பத்திரிகையாளர்கள், நாளைய எழுத்தாளர்கள், இவற்றுடன் சேர்ந்து நாளைய சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள்.
இந்த மறைமுக அஜெண்டாக்களை ராஜநாயகமே தனது வாயாலேயே வெளிப்படுத்தி உள்ளார்.
அப்படியானால் இதற்கான ஒட்டுமொத்த நிதியும் எங்கிருந்து வருகிறது? எந்த அமைப்புகள் இதற்கு நிதி வழங்குகின்றன? எந்த நாடுகள் எல்லாம் இதற்கு பின்புறமாக இருந்து இயங்குகின்றன? அந்த நாடுகளின் அல்லது அந்த அமைப்புகளின் நோக்கம் என்ன?
நெற்றியில் பளிச்சென்று குங்குமம் வைத்துள்ள பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இந்த பயிற்றுப் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியை எதற்காக வழங்கினார்? அவருக்கும் இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு? அந்த நிதி உண்மையில் அவரது பணம்தானா? அல்லது வேறு யாரோ கொடுத்த நிதியை ஊடகங்கள் முன்பு வெற்றிமாறனிடம் வழங்கினாரா?
இப்படி ஏராளமான கேட்கப்படாத கேள்விகளும், பதில் கிடைக்காத கேள்விகளும் உள்ளன.
பா.ரஞ்சித், வெற்றிமாறன் வகையறாக்கள் ஒருபுறம் என்றால், சினிமா இயக்குனர் பிரபு சாலமன், இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்றவர்கள் வேறு விதமாக தமிழ் சினிமாவைச் சுரண்டி வருகிறார்கள். தமிழ் சினிமா கலைஞர்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி வருகிறார்கள். ஏற்கனவே உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதன் மூலம் அவர்களை இந்து விரோதிகளாகவும், அந்நிய கைக்கூலிகளாகவும் மாற்றுவது மிக எளிது. இந்த சூத்திரத்தைத் தான், இவர்களைப் போன்றவர்கள் கையில் எடுத்து வருகிறார்கள்.
பிரபு சாலமன் இயக்கும் படத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட இந்து கலைஞர்கள் கட்டாயம் ஜெபம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பிரபு சாலமனின் மனைவி தனது அன்புக் கரங்களால் இலவச பிரியாணியையும், இலவச பைபிளையும் அன்போடு ஆசீர்வதித்து வழங்கி வருகிறார். சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து மதமாற்ற பிரசாரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார் பிரபு சாலமன். இவருக்கு பின்புலமாக தென் தமிழகத்தின் மதமாற்றக் கும்பல்களின் தலைவராகச் செயல்படும் மோகன் சி. லாசரஸ் இருந்து வருகிறார்.



இதுதவிர சென்னை – வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் மதமாற்ற சிறப்பு பிரார்த்தனைகளை ஒவ்வோர் ஆண்டும் வெளிப்படையாக நடத்தி வருகின்றனர். இதிலும் தமிழ்த் திரையுலகில் உள்ள அனைத்து இந்துக்களையும் மூளைச் சலவை செய்தும், தங்களது படத்தில் வாய்ப்புத் தருவதாக ஆசை வார்த்தை கூறியும் கிறிஸ்தவ மதமாற்றத்தை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாணி முற்றிலும் வேறுபட்டது. தமிழை கரைத்து குடித்தவர் போன்றும், தூய தமிழின் ஒட்டு மொத்த குத்தகைதாரர் போன்றும், அப்பாவி இந்து மக்களிடம் தப்பாமல் தனது பித்தலாட்ட பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். இப்படிப்பட்ட தனித்தமிழ் ஆர்வலர் எதற்காக தனது பெயரை ஜேம்ஸ் என்று ஆங்கிலப் பெயராக வைத்திருக்க வேண்டும்? அதனை தூய தமிழ்ப் பெயராக ஏன் மாற்றக் கூடாது?
இந்த யோக்கிய சிகாமணி, தனது youtube பக்கத்தில் ஏராளமான குறும்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு குறும்படத்தையும் இந்துக்களின் விரலைக் கொண்டு இந்துக்களின் கண்களை குத்தும் வகையில் மிகச் சாமர்த்தியமாக கதைகளை அமைத்து, இந்துக்களைக் கொண்டே இயக்க வைத்து வெளியிட்டு வருகிறார். இந்தக் குறும்படங்களை ஆராய்ந்து பார்த்தால், ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வரும். அதுதான் இந்து விரோதம், இந்திய விரோதம், அன்னிய கைக்கூலி அடிமைத்தனம். அதிமேதாவியான அவர் தமிழையும், பாரதியாரையும் மற்ற பல புலவர்களையும் தனக்கு துணையாக அழைத்துக் கொள்வார்.
இதுபோலவே மற்றொரு தமிழ் ஆர்வலராக தவணை முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். முஸ்லிம் மத வெறியரான அவரது உண்மையான பெயர் திலீப். இது தமிழ்ப் பெயர்தானே? அதனை ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற உருதுப் பெயராக மாற்ற வேண்டும்? அவர் ஒரு தமிழன்தானே? பின் எதற்காக, நெற்றியில் குங்குமம் வைத்த இந்து என்ற ஒரே காரணத்திற்காக தன்னை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த, கவிஞர் பிறைசூடனைப் புறந்தள்ளினார்? இது முஸ்லிம் மதவெறியின் உச்சக்கட்டம் இல்லையா?
தனக்கு சம்பளம் தரும் முதலாளியான தயாரிப்பாளர்கள் இந்துவாக இருந்தால் அது ஹராம் ஆகாது. தன்னைக் கொண்டாடுபவன் இந்துக்களாக இருந்தால் அது ஹராம் ஆகாது. ஆனால் தன்னால் வேலை கொடுக்கப்படுபவன், அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அவன் இந்துவாக இருந்தால் அது ஆகாது. இதன் பெயர் மதப் பற்றா? அல்லது மத வெறியா?
சம்பளத்திற்காக சமரசம் செய்து கொள்ளாமல் படத்தை ஒப்புக் கொண்ட போதும், கதைக்குத் தேவைப்பட்டாலும் கூட, இயக்குநரும் தயாரிப்பாளரும் வற்புறுத்தினாலும் கூட, கெஞ்சிக்கூத்தாடினாலும் கூட, இந்து தெய்வங்கள் பற்றிய வார்த்தைகள் வரக்கூடாது என்று அடம் பிடிக்கின்ற ஏ.ஆர்.ரஹ்மானின் குணத்துக்குப் பெயர் மதப் பாசமா? அல்லது மதவெறியின் உச்சமா?
இசைஞானி இளையராஜாவுக்கு நாடாளுமன்ற மேல்சபை எம்.பி. பதவியை வழங்கி கௌரவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்கள். ஆனால் அவரிடம் வித்தையை கற்றுக் கொண்டு ஆஸ்கர் நாயகனாக உயர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை. அதைவிடக் கொடுமை, திருமணத்துக்காக சமீபத்தில் மதம் மாறிய இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் கூட வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட வில்லை.
இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறிவிட்டால், திரைப்படக் கலைஞனாக இருந்தாலும், பெற்ற மகனாகவே இருந்தாலும்கூட அனைத்து உறவுகளையும் அவர் வெட்டிவிடுகிறார். அவர் கிறிஸ்தவராகவோ அல்லது முஸ்லிமாகவோதான் வாழ்கிறார். தொடர்ந்து மனிதனாக வாழ்வதில்லை. பிறகு எப்படி மதச்சார்பற்ற மனிதனாக வாழ்வார்?



தமிழ்த் திரை உலகில் ஓர் இந்து நடிகனாகவோ அல்லது தொழில்நுட்பக் கலைஞனாகவோதான் பயணப்படுகிறார். ஆனால் ஒரு கிறிஸ்தவரோ அல்லது ஒரு முஸ்லிமோ அப்படி அல்ல. கிறிஸ்தவர் நடிகனாகவே இருந்தாலும் அவன் கிறிஸ்தவராகத் தான் இருக்கிறார். முஸ்லிம் இசையமைப்பாளராகவே இருந்தாலும் அவன் முஸ்லிமாகத்தான் இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்து ஒருபோதும் இந்துவாக இருக்கக் கூடாது. அவர் மதசார்பற்ற மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. கலைக்கு மதம் கிடையாது, கலைக்கு ஜாதி கிடையாது என்பதெல்லாம் இந்துக்களுக்கு மட்டுமே என்பது எழுதப்படாத, ஆனால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவரும் நியதி.
இந்த வரிசையில் விஜய், விஜய்சேதுபதி உட்பட பல நடிகர்களும், அமீர் போன்ற முஸ்லிம் மதவெறி இயக்குனர்களும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார்கள். அமீர் தமிழ் சினிமாவில் திரைப்படம் இயக்குவதன் மூலம் அல்லது நடிப்பதன் மூலம் பெறும் பணத்தைவிட, மதமாற்ற வேலைகளுக்காக அரபு நாடுகளில் இருந்து கொட்டும் பணமே அதிகம் என்று உடன் இருப்பவர்களே கூறுகிறார்கள். அப்படியானால் தமிழ் சினிமா என்ன பாடுபடும்?
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராகவும், தமிழ் திரைப்படத் தொழிலாளிகளின் கூட்டமைப்பான பெப்சியின் தலைவராகவும் அமீரை வைத்து அழகு பார்த்தார்கள் இந்துக்கள். ஆனாலும் அவர் மதவெறியராகத்தான் இருந்துள்ளார்.
இது ஒரு புறம் என்றால், தன்னை ஒரு ஆகச் சிறந்த பக்திமானாக அவ்வப்போது வெளிக்காட்டி வரும் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா, தேசத்துரோகத்தையும், இந்து விரோதத்தையும் வெளிப்படுத்துவதில் மற்ற நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளார்.
நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும் இணைந்து தயாரித்த படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தில் சூர்யாவும் நடித்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம், கம்மாபுரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட குறும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.
கம்மாபுரம் அருகே உள்ளது முதனை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவர் பட்டியலின சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய குறும்பர் ஜாதியைச் சேர்ந்தவர். இவரை சித்ரவதை செய்து காவல்நிலையத்தில் கொலை செய்தவர், சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி.
இதில் ராஜாக்கண்ணு இந்து. அந்தோணிசாமி கிறிஸ்தவர்.
ராஜாக்கண்ணு வழக்கில் பலர் வக்கீல்களாகப் பணியாற்றி உள்ளனர். உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர் கம்யூனிஸ்ட் வக்கீல் சந்துரு. இந்த திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துருவாகவே பயன்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார். அதேபோல கொலை செய்யப்பட்டவர் ராஜாக்கண்ணு. திரைப்படத்திலும் அவரது பெயர் ராஜாக்கண்ணுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கொலையாளியான கிறிஸ்தவரான அந்தோணிசாமியின் பெயர் மாற்றப்பட்டு, இந்துப் பெயரான குருமூர்த்தி என்று திணிக்கப்பட்டுள்ளது. படத்தில் அவரைக் கூப்பிடும் போதெல்லாம் குரு, குரு என்றே அழைக்கின்றனர். அதோடு அவரது வீட்டில் வன்னியர் சமுதாயக் குறியீடுகளை காலண்டர் மூலம் திட்டமிட்டு தொங்கவிட்டுள்ளனர்.
அதாவது பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து, கொலை செய்துள்ளார் என்று ரசிகர்களுக்குக் காட்டி உள்ளனர். பட்டியிலின சமுதாய மக்களுக்கு வன்னிய சமுதாய மக்கள் எதிரிகள் என்பது போல சித்தரித்து உள்ளனர்.
உண்மையில் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணுவின் குறும்பர் சமுதாயத்தினர் மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ளனர். எனவே அதை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பட்டியலின சமுதாயமான இருளர் சமுதாயத்தை திரைப்படத்தில் திட்டமிட்டுப் பயன்படுத்தி உள்ளனர்.
அதாவது பட்டியலின சமுதாயமான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த குரு அடித்துக் கொன்றுவிட்டார் என்று நம்பும்படியாக திட்டமிட்டே ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தைக் காட்டியுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் இதுதான் உண்மை என்று நம்பினார்கள். ஆனால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட எந்த அரசியலும் அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை.
அதோடு நிஜக் கதையில் ரியல் ஹீரோவாக இருந்தவர் கோவிந்தன். இந்த கொலைச் சம்பவத்தை வெளியுலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் அவர். “இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை, திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டவர் அவர். அந்த சபதத்தின் படி 2006-ஆம் ஆண்டு ராஜக்கண்ணு கொலைக்கு நீதி கிடைத்த பிறகே, தனது 39-வது வயதில் திருமணம் செய்து கொண்டார் அவர்.
அப்படிப்பட்ட கோவிந்தன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவர் வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக, அவரது கதாபாத்திரத்தை திரைப்படத்தில் முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட்டு, இந்த வழக்கில் 5,000 ரூபாய் கட்டணமாகப் பெற்று வாதாடிய சந்துருவை மிகப் பெரிய ஹீரோவாக கட்டமைத்து உள்ளார்கள்.
உண்மையில் நடந்த ஒன்றை தமிழ் சினிமாவில் எப்படி மூடி மறைக்கிறார்கள் அல்லது எப்படி திசை திருப்பி விடுகிறார்கள் அல்லது எப்படி மடை மாற்றம் செய்கிறார்கள் என்பதற்கு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தைவிட சிறந்த உதாரணம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
இந்தத் திரைப்படத்தை தயாரித்தவர் சூர்யா என்கிற இந்து. குறைந்த பட்சம் ஓர் இந்துவாக அவர் செயல்பட்டிருந்தால்கூட, இந்து தர்மப்படி உள்ளதை உள்ளபடி, நெறி தவறாமல் ‘ஜெய்பீம்’ படத்தில் சொல்லி இருப்பார். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
தான் ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், தான் ஒரு கிறிஸ்தவன் என்ற உண்மையை நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளிப்படுத்தி பரவசம் அடைந்தார். அதுபோல ரம்ஜான் விழாவில் கலந்துகொண்டு ”நான் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், நான் முஸ்லிமாக மாறிவிட்டேன்” என்று நடிகர் சூர்யா சொல்லி ஆனந்தப்பட்டாலும் படலாம். யார் கண்டது? அவரது போக்கும், பேச்சும், செயலும் அப்படித்தான் உள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
தஞ்சை பெரிய கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டி எழுப்பியவர் ராஜராஜ சோழன். இன்று வரை உலக கட்டடக் கலைக்கு மிக உயர்ந்த எடுத்துக்காட்டாக தலை நிமிர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். சிவபெருமான் மீது எந்த அளவிற்கு சோழ மன்னர்களுக்கு பக்தி இருந்திருந்தால், விண்ணை முட்டும் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி எழுப்பி, உலகிற்கு வழங்கி இருப்பார்கள்? அவர்களின் சிவ பக்திக்கு ஈடு இணை ஏது?
ஆனால் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு சிவன் கோவிலையோ அல்லது ஒரு சிவலிங்கத்தையோ காண்பிக்கவில்லையே ஏன்? மணிரத்தினத்திற்கு தமிழகம் எங்கு இருக்கிறது என்று தெரியாதா? சோழ வம்சத்தைப் பற்றி அவர் அறிய மாட்டாரா? இலங்கைப் பகுதியாக காட்டப்படும் காட்சிகளில் ஒவ்வொரு பிரேமிலும் புத்தர் சிலைகளையும், புத்த பிட்சுகளையும் காட்டத் தெரிந்த மணிரத்தினத்திற்கு தஞ்சைப் பகுதியில் சிவாலயங்களோ, சிவலிங்கங்களோ இல்லாமல் படமெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எப்படி வந்தது? அது எங்கிருந்து வந்தது? எதனால் மணிரத்தினம் இப்படி ஒரு திரிபு வேலையைப் பார்த்தார்? இதன் பின்னணியில் எந்த மிஷனரி கும்பல் உள்ளது? இவையெல்லாம் பெரும்பாலும் பதில் தெரியாத உண்மைகள்.

இதற்கிடையே ‘ராஜ ராஜ சோழனை இந்துவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்’ என்று இந்து விரோத திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அதிர்ச்சியுடன் கவலையைப் பதிவு செய்துள்ளார். ராஜராஜ சோழன் இந்து இல்லாமல்தான் சிவனுக்கு அவ்வளவு பெரிய தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினாரா என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேள்வி கேட்கிறது.
ராஜராஜ சோழன் இந்து அல்ல என்று வெற்றிமாறனுக்கு போதித்த அந்த உலக மகா அறிவாளி ராஜநாயகமாக இருக்க மாட்டார் என்று நம்புவோமாக.
தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் மற்றொரு கசப்பான உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் மத வெறியர்கள், திரைப்படம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று போதிக்கிறார்கள், கட்டளை பிறப்பிக்கிறார்கள். அதனை பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே சினிமா பார்க்க திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.
இதுபோலவே மோகன் சி லாசரஸ், பால் தினகரன் உட்பட பெரும்பாலான கிறிஸ்தவ மதவெறிக் கும்பல்களும், திரைப்படம் பார்ப்பது மாபெரும் மாபாதகச் செயல் என்றே போதிக்கின்றன. எனவே பெரும்பாலான தீவிரக் கிறிஸ்தவர்களும் படம் பார்ப்பதை தவிர்க்கிறார்கள்.
படம் பார்ப்பது ஹராம் என்று சொல்லும் முஸ்லிம் மத வெறியர்கள், திரைப்படங்களை இயக்குவதோ, நடிப்பதோ ஹராம் என்று அமீருக்கு பாடம் நடத்துவதில்லை. அல்லது இசையமைப்பாளராக இருப்பதோ சினிமா பாடல்களைப் பாடுவதோ ஹராம் என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கோ, யுவன் சங்கர் ராஜாவுக்கோ உத்தரவிடுவதில்லை.
இதுபோலத்தான் திரைப்படம் பார்ப்பது தவறு என்று போதிக்கும் கிறிஸ்தவ மதவெறிக் கும்பல்கள், திரைப்படங்களில் பணியாற்றுவதும், நடிப்பதும் தவறு என்று போதிக்கவில்லையே ஏன்?
இது தவிர மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து தமிழகத்தில் சுமார் 15 சதவீதம் இருக்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள 85 சதவீதம் பேர் இந்துக்கள்தான். அந்த 15 சதவீத கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களிலும், திரைப்படம் பார்ப்பவர்கள், மிக மிகக் குறைவு. எனவே ஒட்டு மொத்தமாக பார்த்தால் திரையரங்குகளை நிரப்புவது 95 சதவீதத்திற்கு மேல் இந்து ரசிகர்கள் மட்டுமே. இது அனைவருக்கும் தெரிந்த யதார்த்தமான உண்மை.

தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து உள்ளவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், இந்துப் பெயர்களை வைத்துக் கொண்டு இந்து விரோதிகளாகச் செயல்படுபவர்களாகவும் உள்ளனர். ஆனால் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் அப்பாவி இந்துக்களாக உள்ளனர்.
பணம் போட்டு படம் எடுப்பவர்களும் பெரும்பாலும் இந்துக்கள்; படம் பார்ப்பவர்களும் பெரும்பாலும் இந்துக்கள். ஆனால் பெயரையும், புகழையும், பணத்தையும் வாரிச் சுருட்டுபவர்கள், பிற மதத்தினர்!
இந்த உண்மை இ[ப்போதுதான் திரையுலகில் புரியத் தொடங்கி இருக்கிறது. இந்துக்கள் என்றும் மதவெறியர்கள் அல்ல; அதே சமயம் முட்டாள்களூம் அல்ல என்பது விரைவில் தமிழ்த் திரையுலகால் உலகிற்குத் தெரிய வரும்.
குறிப்பு: ‘மோடியின் தமிழகம்’ புத்தக ஆசிரியரான திரு. சின்னப்பா கணேசன், பத்திரிகையாளராக பல்லாண்டுக்காலம் பணிபுரிந்தவர். தற்போது தமிழ்த் திரையுலகில் இயக்குநராக இயங்குகிறார். ‘விருதுநகர் சந்திப்பு, நதிகள் நனைவதில்லை, அந்த 60 நாட்கள்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக இருந்துள்ளார். மேற்கண்ட கட்டுரையில் இருப்பவை அவரது சொந்த அனுபவத்தில் எழுதியவை. இக்கட்டுரை குறித்த வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கட்டுரையாளரின் அலைபேசி எண்: 90923 45641.
$$$
One thought on “தமிழ் சினிமாவின் தடுமாற்றம்”