பாரதம் வந்த உடனேயே அவருக்கு இங்குள்ள அரசியல் நிலை முழுமையாகப் புரிந்தது. காங்கிரஸ் சில மிதவாத தலைவர்களின் பிடியில் இருந்தது. பெரிய, பரந்த பாரத சமுதாயத்திற்கு காங்கிரஸ் என்ற சிறு அமைப்பின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. ஆங்கில அரசுக்கு எதிராக அது எழுப்பிய குரல் வலிமையற்றதாகவும் அற்பமானதாகவும் இருந்தது. எனவே புதிய தலைமையை உருவாக்கவும், சமுதாயம் முழுமையையும் ஒருங்கிணைத்து போராடவும் தயார்ப்படுத்த வேண்டி இருந்தது. அப்போது பம்பாயில் இருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ (ஹிந்து பேரொளி) என்ற பத்திரிகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் காங்கிரசை கடுமையாகத் தாக்கி எழுதினார்....
சிவகளிப் பேரலை- 88
சிவபெருமானின் பெருமைகளை வியந்து கூறி, அவருக்கு எப்படி நிறைவான பூஜை செய்வது? என்று ஸ்ரீ ஆதிசங்கரர் மலைத்து நின்று வினவும் அற்புதம், இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது....
பாரதி- அறுபத்தாறு (27-36)
“சென்றதினி மீளாது; மூடரே, நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்” -என்ற அற்புதமான உபதேசம் அடங்கிய கவிதை இது...
அரவிந்தர் ஐ.சி.எஸ். ஆகாதது ஏன்?
ஐ.சி.எஸ். தேர்வில் இரண்டு விஷயங்களில் அரவிந்த கோஷுக்கு பிரச்னை ஏற்பட்டது. ஒன்று உடல் ஆரோக்கியம்; மற்றது குதிரை சவாரி. உடல் ஆரோக்கியம் பிரச்னையில் பின்னர் அவர் தேர்வு பெற்றார். ஆனால் குதிரை சவாரியில்? அதுபற்றி பிற்காலத்தில் அவரே கூறியுள்ளார்...
சிவகளிப்பேரலை- 87
இறைவனிடம் தன்னை ஒப்படைத்து, அவரையே பெற்றுவிடுகின்ற சாமர்த்தியம், மெய் பக்தி ஒன்றினால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...
நெல்லையப்பரும் வெள்ளையப்பரும்
நமது தெய்வங்களின் ஸ்தானத்தில் பரங்கிகளை உட்காரவைத்துத் தெய்வங்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்ய அந்த தர்மகர்த்தாவுக்கும் மற்ற இரண்டு இந்திய கனவான்களுக்கும் எப்படி மனம் ஒப்பியதோ தெரியவில்லை. இனி இவர்கள் கோயிலின் விக்ரஹங்களை உடைத்து, ஆங்கில அதிகாரிகளை அவ்விடம் வைத்து, தெய்வங்களின் நகைகளை அவர்களுக்கு சாற்றி, அதன் காலில் விழுவார்கள் போலும் ! இதுவன்றோ ராஜபக்தி ! நாட்டில் கேட்பாரில்லாமல் போய்விட்டது. இதுவும் கலிகால விந்தையே!...
கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்
லண்டனில் அவர் இருந்தபோது உலகெங்கும் எழுந்த விடுதலை வேட்கை, புரட்சிகள் பற்றி செய்திகள் வந்தபோது, தானும் அதில் பங்காற்ற வேண்டியுள்ளதை அரவிந்தர் புரிந்து கொண்டார். பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும் என அவர் ஆழமாகவும் உறுதியாகவும் நம்பி இருந்தார். இது ஐரிஸ் விடுதலை போராளியான சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னெல் என்பவரின் நினைவாஞ்சலியாக அரவிந்தர் எழுதிய கவிதையே சாட்சி கூறுகிறது.....
சிவகளிப் பேரலை- 86
அனைத்திற்கும் அடித்தளமாகிய ஆதியாகவும், அனைத்தின் முடிவாகிய பூரணமாகவும் சிவபெருமான் இருக்கிறார். ஆதியும் அந்தமுமாய் உள்ள அந்தப் பரம்பொருளின் அடியையும், முடியையும் யார்தான் காண வல்லார்? அனைத்துமாய் விளங்கும் அந்தப் பிரும்மாண்டப் பரம்பொருளை, அதன் ஒரு துளியாய் இருக்கும் நாம் அளப்பது எங்ஙனம்?
பாரதி- அறுபத்தாறு (23-26)
குள்ளச்சாமி குறித்த பிரலாபம் தொடர்கிறது.... மகாகவி பாரதி புதுவையில் வசிக்கையில் கிடைத்த அரிய உறவு, குள்ளச்சாமியின் நட்பு...
‘விஜயா’வில் அரவிந்தர்
பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும் ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேட்டிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார். அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன. அந்த நேர்காணல் இங்கு முழுமையாக:
சிவகளிப் பேரலை- 85
அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா?
மகாவித்துவான் சரித்திரம்- 1(8)
-உ.வே.சாமிநாதையர் 8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும் அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்ய வேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயில வேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து … Continue reading மகாவித்துவான் சரித்திரம்- 1(8)
உத்தர்பாரா பேருரை உரைப்பது என்ன?
1909லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமைய வேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்....
ஆகாய விமானமும் சென்னையும்
காலத்தை மீறிச் சிந்தித்து சமுதாயத்துக்கு வழிக்காட்டுபவரே முன்னோடி. அந்த வகையில் தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான மகாகவி பாரதி விமான உற்பத்தி குறித்து 110 ஆண்டுகளுக்கு முன்னம் எழுதிய கட்டுரை இது... வார இதழான ‘இந்தியா’விலும், மாலைப் பத்திரிகையான ‘விஜயா’விலும் வெளிவந்துள்ள கட்டுரை இது. ஒரே கட்டுரையை இருவேறு இதழ்களில் வெளியிடுவது, தனது எண்ணத்தை மக்களுக்குப் பரவலாக்கும் அவரது வேகத்தை வெளிப்படுத்துகிறது. விமானம் குறித்த தொழில்நுட்பக் குறிப்புகளையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி. இதில் தெரியவேண்டிய மிக முக்கியமான தகவல், சென்னையில், ஸிம்ஸன் கம்பெனியில் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்திருப்பது தான்....
சத்திய சோதனை- 3(11-15)
“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவோ, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.... “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச் செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி....