சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூறு நூலுக்குக் கடவுள்வாழ்த்து பாடிய பெருந்தேவனார், “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று சிவசக்தி ஐக்கியக் காட்சியைக் கூறுகிறார். நீல மேனியையும், ஒளிவீசும் நகைகளையும் கொண்ட அம்பிகையை ஒருபுறத்தில் கொண்டவர் சிவபெருமான் என்பது இதற்குப் பொருள்.
Month: June 2022
பாரதியின் ஞானப்பாடல்- 5
தமிழ்த் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்த கவிதை இது....
காற்றிடைச் சாளரம்- 8
அழுக்குத் தலையணைக்கு வெளுத்த உறை- என்றால் என்னவென்று புரிகிறதா? இந்தக் கவிதைகளைப் படியுங்கள்... கவித்துவத்தில் கிறங்குங்கள்!
ஹிந்து தர்மம்
இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையும், ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். ...
சிவகளிப் பேரலை – 24
சிவபெருமான் காமனை மட்டுமல்ல, காலனையும் வென்றவர். ஆகையால் அவர் காலாதீதன் (கால அதீதன்), அதாவது காலத்தைக் கடந்து நிற்பவர். அப்படிப்பட்ட சிவபெருமான் இயற்கை வனப்பு மிகுந்த கயிலாய மலை மீது நமக்காகக் காட்சி தருகிறார். பக்திப் பெருக்கால் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் போன்றோர் இத் தெய்வீகத் திருக்காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.....
பாரதியின் ஞானப்பாடல் – 4
மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 4வது கவிதையும் விடுதலையையே வேண்டுகிறது. இது பூவுலகில் பேசப்படும் சாதாரண விடுதலையல்ல; ஆன்மிகம் சார்ந்த ஆன்ம விடுதலை…
நினைக்கத் தெரிந்த மனமே…
காதலனைப் பிரிந்த பெண்ணின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் எளிய பதங்கள்... அதில் புதைந்திருக்கும் உண்மையான அன்பின் சோகம், காட்சிக்கு உகந்த கற்பனை வரிகள் என, கவியரசரின் மேதமை வெளிப்படும் சிறந்த திரைப்பாடல் இது...
பாரதியின் ஞானப்பாடல் – 3
சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடயது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி.
சிவகளிப் பேரலை- 23
மகாவிஷ்ணு பன்றி ரூபம் எடுத்து பூமியைத் துளைத்துக்கொண்டு அந்தச் சோதி லிங்கத்தின் அடியைக் காணவும், பிரம்மன் அன்னப் பறவை வடிவெடுத்து ஆகாய மார்க்கமாய் சோதி லிங்கத்தின் முடியைக் காணவும் முயன்று தோற்றுப் போனார்கள். கல்விக் கடவுள் சரஸ்வதியின் நாதன் பிரும்மா, செல்வக் கடவுள் திருமகளின் நாயகன் விஷ்ணு. கல்விச் செருக்கால் தலை ஆகாயத்தில் மிதக்கும். செல்வச் செருக்கால் பணம் பாதாளம் வரை பாயும். ஆயினும் செல்வச் செருக்காலோ, கல்விச் செருக்காலோ பரம்பொருளைப் பார்த்தறிய இயலாது, எளிமையான பக்தியே அதனைச் சாதிக்கும் என்பதே இப் புராணக் கதையின் மையக்கருத்து....
ஜாதி 1
வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?
இலக்கிய தீபம் – 9
பல சுவடிகளை ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்....
பாரதியின் ஞானப்பாடல் – 2
”காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று முழஙிய அற்புதச் சொற்றொடர் அமைந்த மகாகவியின் பாடல், அவரது ஞானப்பாடல்களில் இரண்டாவதான இக்கவிதையில் இருக்கிறது...
The Fox with the Golden Tail (Short Story)
மகாகவி பாரதி எழுதிய ஆங்கிலச் சிறுகதை - The Fox with the Golden Tail. 1914இல் பொன்வால் நரி என்ற தலைப்பிலான இந்த ஆங்கில நையாண்டிக் கதையை பாரதி எழுதி வெளியிட்டார். அக்கதை, அன்னிபெசண்ட் அம்மையாரின் தியாசபிக்கல் சங்கக் கொள்கைகளை நையாண்டி செய்வதாக அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுவர்.
சிவகளிப் பேரலை- 22
ஆண்டவன் என்பவன் ஒருசாராருக்கு மட்டும் அருள்பாலிப்பவன் அல்லன், அனைத்துத் தரப்பினரையும் அரவணைப்பவன். கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவனே கடவுள். நமது பார்வையில் கெட்டவர்களாகத் தெரிபவர்கள்கூட ஆண்டவனை வணங்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீதும் அருள்பார்வை வீசி, தேவையான நேரத்தில் நற்பாதையில் திருப்புகிறான் ஆண்டவன். சிவபெருமான், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் மட்டுமல்ல, அரக்கர்களுக்கும்கூட அருள் பொழிந்துள்ளதை பல புராணக் கதைகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். மனிதர்களிலும் பாகுபாடின்றி திருடர்கள், கள்வர்களுக்குக்கூட அவர் கடவுளாயிருக்கிறார். நமது மனத்தை நமக்குத் தெரியாமலே கொள்ளையடிப்பவர் அல்லவா அவர்?
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 8
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகள் கேட்டு, அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு முறை (2006இல்) ஆந்திராவில் ஒரு பள்ளியில் மாணவர்களிடையே 'நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?' என்ற கேள்வியைக் கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று 'இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்று பதிலளித்தான். அவரது பெயர் ஸ்ரீகாந்த் பொல்லா. பிறவியிலேயே கண் பார்வையற்றவர்.....